தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசனி யென்னுள்ளங் கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தவருள் செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே.
"He wears a rolled leaf in His ear, rides a bull, is crowned by the pure white moon, and smears Himself with the ash of the cremation ground... He is the thief who stole my heart."
— Thirugnanasambandar