(1530-1540, 1555-1556):
- ஹுமாயூன் அரசபதவி ஏற்றவுடன் தம் தந்தையின் விருப்பத்திற்கிணங்கத் தாம் பெற்ற நாட்டைப் பிரித்துச் சகோதரர்களுக்குக் கொடுத்தார்.
- அவருடைய சகோதரர்கள் கம்ரான், ஹின்டல், அஸ்காரி ஆகிய மூவரும் ஒவ்வொரு பகுதியைப் பெற்றனர்.
- பீகாரையும் வங்காளத்தையும் ஆட்சி செய்து வந்த ஆப்கானியரான ஷெர்ஷா சூர் .
- ஷெர்ஷா 1539-ல் சௌசா என்ற இடத்திலும், 1540- ல் கன்னோஜிலும் ஹூமாயூனைத் தோற்கடித்தார்.
- அரியணையிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஹூமாயூன் ஈரானுக்கு தப்பியோட நேர்ந்தது.
- பாரசீக அரசர், சபாவிட் வம்சத்தைச் சேர்ந்த ஷா- தாமஸ்ப் என்பவரின் உதவியால் 1555 டெல்லியை மீண்டும் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்.
- ஆனால், 1556-ல் டெல்லியில் தமது நூலகத்தின் படிக்கட்டுகளில் இடறி விழுந்த ஹூமாயூன் மரணத்தைத் தழுவினார்.