வேலுநாச்சியார்
- இராமநாதபுரத்தை ஆட்சி செய்த “செல்லமுத்து” மன்னரின் ஒரே மகள்
- வேலுநாச்சியார் ஆங்கிலம், தமிழ் பிரெஞ்சு,உருது மட்டுமல்லாமல் ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார்.
- சிலம்பம்,குதிரை ஏற்றம், வில்பயிற்சி, வாள்போர், ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார்.
- “சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை” மணந்து கொண்டார்.
- வேலுநாச்சியாரின் அமைச்சர் தாண்டவாரயர்.
- வேலுநாச்சியாரின் தளபதிகள் சின்ன மருது”, “பெரிய மருது”
- வேலுநாச்சியாரின் படைப்பிரிவில் ஆண்கள் படைப் பிரிவிற்கு “மருது சகோதரர்களும்” பெண்கள் படைப் பிரிவிற்கு “குயிலியும்” தலைமை தாங்கினர்.
- வேலுநாச்சியார் “சிவகங்கை”யை மீட்பதற்காக போராடினார்.
- வேலுநாச்சியார் ஐதர் அலியின் உதவியோடு சிவகங்கையை மீட்டார்.
- வேலுநாச்சியாரின் காலம் - 1730-1796
- வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு - 1780
- ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்புரிந்தவர் - வேலுநாச்சியார்.