வேற்றுமையில்-ஒற்றுமை

வேற்றுமையில் ஒற்றுமை - [[நேரு]] - [[Discovery of India]]

  • மேகாலயாவில் உள்ள மௌசின்ராம் அதிக மழை பெய்யும் பகுதி ஆகும்.

  • ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் குறைவான மழைப்பொழியும் பகுதி ஆகும்.

  • இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியா 122 முக்கிய மொழிகளையும் 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது.

  • இந்தோ - ஆரியன், திராவிடன், ஆஸ்ட்ரோ-ஆஸ்டிக், சீன-திபெத்தியன் ஆகிய நான்கும் முக்கியம் மொழி குடும்பமாகும்.

  • மொழி - மொத்த மக்கள்தொகை சதவிகிதம்
    • இந்தி - 41.03%
    • வங்காளம் 8.10 %
    • தெலுங்கு -7.19%
    • மராத்தி - 6.99 %
    • தமிழ் - 5.96%

  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையின்படி 22 மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

  • 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக ‘தமிழ் மொழி’ அறிவிக்கப்பட்டது. தற்போது 6 மொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்திய தொல்லியல்துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் 60% தமிழ்நாட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்

  • இந்தியா இனங்களின் அருங்காட்சியகம் - வரலாற்றாசிரியர் [[வி. ஏ. ஸ்மித்]]

மாநிலம் - புகழ்பெற்ற நடனம்

தமிழ்நாடு - கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மி, தெருக்கூத்து, பொம்மலாட்டம், புலியாட்டம், கோலாட்டம், தப்பாட்டம்

கேரளா - தெய்யம், மோகினியாட்டம்

பஞ்சாப் - பங்க்ரா

ஜம்மு மற்றும் காஷ்மீர் - தும்ஹல்

குஜராத் - கார்பா, தாண்டியா

ராஜஸ்தான் - கல்பேலியா, கூமர்

உத்தரப்பிரதேசம் -ராசலீலா, சோலியா

அசாம் - பிஹு

எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சட்டப்பிரிவு 15(1) ஒன்று அறிவுறுத்துகிறது.

17 தீண்டாமை ஒழிப்பு

இன நிறவெறிக்கு முடிவு:
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா அவர்கள், 27 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப்பின் 1990 ஆம் ஆண்டு விடுதலையானார்.