வேர்ச்சொல்லிருந்து-சொல்

வினைமுற்று

  • செயல் முற்றுப் பெற்ற நிலையையும், காலத்தையும் காட்டுவது.
  • தன்மை வினைமுற்று, பேசுபவனுடைய செயலைக் குறிக்கும்.
  • காலம் காட்டும், ஒருமை பன்மை உணர்த்தும், பால் உணர்த்தாது.
  • விகுதிகள் -

Eg : வந்தான், பாடுகிறாள், பேசுவார்

எச்சம்: பெயரெச்சம் & வினையெச்சம்

  • செயல் முற்றுபெறாமல் எஞ்சி நிற்பது எச்சம். அவ்வெச்சம் பெயரை கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம், வினையை கொண்டு முடியுமானால் அது வினையெச்சம்.

தொழிற்பெயர் :

  1. முதனிலை தொழிற்பெயர்

  2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்

  3. வினையாலணையும் பெயர்

  4. முதனிலை தொழிற்பெயர்

தொழிற்பெயர் விகுதிகள் அல்லாமல் பகுதி மட்டும் வந்து தொழிலை உணர்த்துவது.

  • எனக்கு அடி விழுந்தது
  1. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
  • அவனுக்கு என்ன **கேடு

    **( கெடு - பகுதி/முதனிலை)

  1. வினையாலணையும் பெயர்
  • வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.
  • மூவிடங்களிலும் வரும், முக்காலத்தையும் காட்டும்.

Eg. அடித்தவன் , கொண்டவன்