வேத-காலம்

சிந்துவெளி நாகரிகத்தின் சரிவோடு இந்தியாவில் நகரமயமாதலின் முதல் கட்டம் ஒரு முடிவிற்கு வந்தது.ஆரியரின் வருகையால் வேதகாலம் எனும் காலகட்டம் தொடங்கியது.

வேதகாலம் - இந்திய வரலாற்றில் கி.மு. (பொ. ஆ. மு) 1500 - 600 காலகட்டம்.

‘வேதங்கள்’ என்பதில் இருந்து இப்பெயரைப் பெற்றது.

ஆரியர்கள்:
ஆரியர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசும் இடம் விட்டு இடம் குடிபெயர்ந்து செல்லக்கூடிய கால்நடை மேய்ப்பவர்கள் ஆவர்.இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து அலையலையாகக் குடிபெயர்ந்து
இந்துகுஷ் மலைகளிலுள்ள கைபர் கணவாய் வழியாக வந்தனர்.

கால்நடைகளை மேய்ப்பதே இவர்களின்
முதன்மைத் தொழில் என்றாலும் அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறையையும்(slash and burn Agriculture) .

புவியியல் பரப்பு - வட இந்தியா
காலப்பகுதி - இரும்புக் காலம்
கால அளவு-கி.மு (பொ.ஆ.மு) 1500-600 வரை
சான்றுகள் - வேதகால இலக்கியங்கள்
நகரத்தின் இயல்பு கிராம நாகரிகம்

ஆரியர்களும் இந்தியாவில் அவர்களின் வாழ்விடங்களும்:

ரிக் வேதகால ஆரியர்கள் நாடோடிகள்.
அடிப்படையில் மேய்ச்சல் சமூகத்தினர்

ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் பஞ்சாப் ஆகும்.

அப்போது அப்பகுதி ‘சப்த சிந்து’ அதாவது ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி

ஏறத்தாழ கி.மு.(பொ.ஆ.மு) 1000ல் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து சிந்து கங்கைச் சமவெளியில் குடியமர்ந்தனர்.

இரும்புக் கோடரி, இரும்பினாலான கொழுமுனையைக் கொண்ட கலப்பை ஆகியவற்றைப் பரவலாக பயன்படுத்தினர்.

நான்கு வேதங்கள்: ரிக், யாஜுர், சாம, அதர்வன.

சான்றுகள்:

வேத கால இலக்கியங்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  1. சுருதிகள் - நான்கு வேதங்கள்,பிராமணங்கள் , ஆரண்யங்கள் , உபநிடதங்கள்
  • அவைகள் புனிதமானவை, நிலையானவை, கேள்விகள் கேட்கப்பட முடியாத உண்மை எனக் கருதப்பட்டவை.
  • சுருதி என்பது கேட்டல் (அல்லது எழுதப்படாதது) எனும் பொருள் கொண்டது. இவை வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டன.
  1. ஸ்மிருதிகள் - ஆகமங்கள், தாந்திரீகங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய மதம் குறித்த போதனைகளைக் கொண்ட நூல்களாகும்.
  2. அவை நிலையானவை அல்ல, தொடர்ந்து மற்றவர்களுக்கு உள்ளாகுபவை.

    **ஸ்மிருதி’ என்பதன் பொருள் இறுதியான
    எழுதப்பட்ட பிரதி
    **ஆகும்.

இந்தியாவின் தேசிய குறிக்கோள்:

  • ‘சத்யமேவ ஜெயதே’ (‘வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம் முண்டக உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

தொல்பொருள் சான்றுகள்:

சிந்து மற்றும் கங்கை நதிப்பகுதிகளிலும் பஞ்சாப், உத்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய தொல்லியல் ஆய்விடங்களிலும் கிடைத்துள்ள இரும்புக் கருவிகள், மட்பாண்டங்கள் ஆகியன.

வேதகாலத்தை வகைப்படுத்துதல்:

  1. தொடக்க வேதகாலம் கி.மு.(பொ.ஆ.மு) 1500 - 1000
  2. பின் வேதகாலம் கி.மு.(பொ.ஆ.மு) 1000-600

வேதகால பண்பாடு:

அரசியலும், சமூகமும்:

  • ரிக் வேத கால அரசியல் ரத்த உறவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • குலம் (clan) என்பதே அரசியலின் அடிப்படை அலகாகும். அதன் தலைவர் குலபதி ஆவார்.
  • பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரு கிராமம் ஆகும்.
  • கிராமத்திற்கு கிராமணி தலைவர் ஆவார்.
  • பல கிராமங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு ‘விஸ்’ என்றழைக்கப்பட்டது. இதற்கு விசயபதி தலைவர் ஆவார்.
  • ‘ஜனா’ (இனக்குழு) வின் தலைவர் ராஜன் ஆவார். இவர் ஜனஸ்யகோபா (மக்களின் பாதுகாவலர்) எனப்பட்டார்.
  • ரிக்வேத காலத்தில் பல இனக்குழு அரசுகள் இருந்தன. (பரதர், மத்சயர், புரு).

அரசர்:

அவருடைய அதிகாரம் இனக்குழு மன்றங்களான
விதாதா, சபா, சமிதி, கணா ஆகிய அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டது.

இவைகளின் விதாதா (இனக்குழுவின் பொதுக்குழு) பழமையானதாகும்.

அரசர் தனக்கு உதவி செய்வதற்காக புரோகிதர் (தலைமை குரு) ஒருவரை பணியில் அமர்த்திக் கொண்டார்.

அரசியல், பொருளாதாரம், இராணுவம் தொடர்பான விஷயங்களில் அரசனுக்கு சேனானி (படை தளபதி) உதவி செய்தார்.

ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து கங்கை, யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் குடியேறிய போது தொடக்ககாலக் குடியேற்றங்கள் மாற்றம் பெற்று பிரதேச அரசுகளாயின.

பரம்பரை அரசுரிமை தோன்றியது. முடியாட்சி
முறையில் அரசனின் அதிகாரங்கள் அதிகரித்தன. அரசர் தனது நிலைமையை வலுப்படுத்திக் கொள்ள பல சடங்குகளையும் யாகங்களையும் செய்தார்.

பின்வேதகாலத்தில் பல ஜனாக்கள் அல்லது
இனக்குழுக்கள் இணைக்கப்பட்டு ஜனபதங்கள் அல்லது ராஷ்டிரங்கள் உருவாகின.

சமிதி, சபா ஆகியவை தங்கள் முக்கியத்துவத்தை இழந்தன.

விதாதா என்ற மன்றம் இல்லாமல் போனது.
புதிய அரசுகள் தோன்றின.

பாலி என்பது மக்கள் தாங்களாகவே மனமுவந்து அரசனுக்கு கொடுத்துவந்த காணிக்கையாகும்.

பின்வேதகாலத்தில் இது ஒரு வரி ஆக மாற்றம் பெற்று மக்களிடமிருந்து தொடர்ந்து முறையாக வசூல் செய்யப்பட்டது.

குரு மற்றும் பாஞ்சால அரசுகள் செழித்தோங்கிய காலம் இது. மேலும் அயோத்தி, இந்திரப்பிரஸ்தம், மதுரா போன்ற நகரங்களும் இக்காலத்தில் உருவாயின.

சபா - மூத்தோர்களைக் கொண்ட மன்றம்.
சமிதி மக்கள் கொண்ட பொதுக்குழு.

பாலி இது ஒரு வரி ஆகும். ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கை இவ்வரியாகச் செலுத்த வேண்டும்.

சமூக அமைப்பு:

  • தந்தை வழிச் சமூகமாகும்.
  • கருப்பு நிற ஆரியர் அல்லாத மக்கள் - தசயுக்கள், தாசர்கள்

தொடக்க வேதகால சமுதாயத்துக்குள் மூன்று பிரிவுகள் காணப்பட்டன.

  • பொதுமக்கள் - விஸ்
  • போர்வீரர்கள் - சத்திரியர்கள்
  • மதகுருமார்கள் - பிராமணர்கள்

வர்ண அமைப்பு

  • மதகுருவான பிராமணர்
  • போரிடும் சத்ரியர்
  • நில உடமையாளர்களான வைசியர்
  • வேலைத் திறன் கொண்ட சூத்திரர் ( கருப்பு நிற ஆரியரல்லாதோர்)

பெண்களின் நிலை:

  • ரிக் வேதகால சமூகத்தில், பெண்கள் ஓரளவிற்கு சுதந்திரம் பெற்றிருந்தனர்.

  • மனைவி குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார்.

  • பெண்கள் தனது கணவருடன் தமது வீட்டில் சடங்குகள் நடத்தினர்.

  • குழந்தைத் திருமணத்தையும், உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை.

  • கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ளத் தடைகள் இல்லை.

  • பெற்றோரிடமிருந்து சொத்துக்களைப் பெறும் சொத்துரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டது.

  • பொது நிகழ்வுகளில் பெண்கள் எந்த பங்கும் வகிக்கவில்லை.

  • பின் வேதகாலத்தில் சமூகத்தில் மட்டுமின்றி, குடும்பத்திலும் கூட பெண்களின் பங்கும் குறைந்துபோனது.

  • அவர்களுக்கான நிலையும்
    பெண்கள் குடும்பத்தில் சடங்குகளை நடத்த முடியாத நிலை உருவானது திருமணம் தொடர்பான
    விதிகள் இறுக்கமும் குழப்பமும் பெற்றன.

  • பலதார மணம் சாதாரணமாக நடைபெற்றது.

  • கைம்பெண் மறுமணத்திற்கு ஊக்கம்
    அளிக்கப்படவில்லை.

  • பெண்களுக்குக் கல்வி சாதிகளுக்கு திருமணம் இடையிலான மறுக்கப்பட்டது.
    நிராகரிக்கப்பட்டது.

பொருளாதார வாழ்க்கை:

  • கால்நடை மேய்ச்சலும் வேளாண்மையும் .

ரிக்வேதகால ஆரியர்களின் முதன்மைத் தொழில்கால்நடைகள் மேய்ப்பது என்றாலும் மரவேலை செய்வோரும், தேர்கள் செய்வோரும், மண்பாண்டங்கள் செய்வோரும், உலோக வேலை செய்பவரும், துணி நெய்வோரும், தோல்வேலை செய்பவர்களும் இருந்தனர்.

பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் இக்காலத்தைச் சேர்ந்ததாகும்.

குதிரைகள், பசுக்கள், வெள்ளாடுகள்,
செம்மறியாடுகள், காளைகள் மற்றும் நாய்கள் வீட்டு விலங்குகளாகப் பழக்கப்படுத்தப் பட்டன.

சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளில் ஆரியர்கள் நிரந்தரமாக குடியேறியபின் அவர்கள் வேளாண்மை செய்யத் தொடங்கினார்.

யவா (பார்லி) அவர்களின் முதன்மை பயிராகும்.

கோதுமை, பருத்தி ஆகியவை சிந்துவெளி மக்கள் பயிர் செய்யப்பட்ட போதிலும் ரிக் வேதத்தில் அவைகள் பற்றி குறிப்பிடவில்லை.

ஒவ்வொரு வருடமும் இரு போகம் சாகுபடி
செய்யப்பட்டது.

பின்வேத காலத்தில் ஆரியர்கள் யானைகளையும் பழக்கப்படுத்தினர்.

தொடக்க வேத கால கைவினைஞர்களோடு நகை செய்வோர், சாயத்தொழில் செய்வோர், உலோகங்களை உருக்குவோர் போன்றோரும்
சமூகத்தில் இடம் பெற்றிருந்தனர். இக்காலப் பண்பாடு வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு என்று
அழைக்கப்படுகிறது.

இரும்புக் கொழுமுனை கொண்ட கலப்பை மற்றும் இரும்புக் கோடாரி ஆகியவற்றின் உதவியோடு அதிக அளவிலான செய்யப்பட்டது.

நிலங்களின் வேளாண்மை
நெல், கோதுமை, பார்லி ஆகியன பயிர் செய்யப்பட்டன.

வேளாண்மை வளர்ச்சி பெற்றதால்
நிலத்தின் மீது தனியுரிமை உருவானது.

புதிய தொழில்களும், கலைகளும் வளர்ந்து உபரி உற்பத்தி ஏற்பட்டு வணிகத்துக்கு இட்டுச் சென்றன.

பண்டமாற்று முறை பரவலாகக் காணப்பட்டது.

நிஷ்கா, சத்மனா என்னும் தங்க நாணயங்களையும், கிருஷ்ணாலா என்னும் வெள்ளி நாணயங்களையும் வணிகத்தில் பயன்படுத்தினர்.

உலோகங்கள்:

  • தங்கம் (ஹிரண்யா)
  • இரும்பு (சியாமா)
  • தாமிரம் / செம்பு (அயாஸ்)

மதம்:

ரிக்வேத கால ஆரியர்கள் பெரும்பாலும் நில மற்றும் ஆகாய கடவுளர்களை வழிபட்டனர்.

  • பிருத்வி (நிலம்)

  • அக்னி (நெருப்பு)

  • வாயு (காற்று)

  • வருணன் (மழை)

  • இந்திரன் (இடி)

  • போன்றவற்றை வணங்கினர்.
    மேலும்

  • அதிதி (நித்திய கடவுள்)

  • உஷா (விடியற்காலைத் தோற்றம்) ஆகிய குறைவான பெண் தெய்வங்களை வணங்கினர். அவர்களின்

  • மதம் சடங்கு முறைகளை மையமாகக் கொண்டது.

  • வேத மந்திரங்களை பாராயணம் செய்வதே வழிபாட்டு முறையாக இருந்தது.

  • குழந்தைகள் (பிரஜா), பசு (கால்நடைகள்), செல்வம் (தனா)

  • பசு புனிதமான விலங்காகக் கருதப்பட்டது

  • பின்னாளில் மதகுருவாக இருப்பது ஒரு தொழிலாகவும், அது பரம்பரைத் தொழிலாகவும் ஆனது.

  • ஆரியர் அல்லாத கடவுள்களும் ஏற்பட்டிருக்கலாம். இந்திரனும், அக்னியும் முக்கியத்துவத்தை இழந்தனர்.

  • பிரஜாபதி (படைப்பவர்), விஷ்ணு (காப்பவர்), ருத்ரன் (அழிப்பவர்) ஆகிய கடவுளர்கள் முக்கியத்துவம் பெற்றன.

  • வேள்விகளும், சடங்குகளும் மிகவும் விரிவடைந்தன.

கல்வி:

  • குரு குலக்கல்வி முறை என்பது பழங்கால கற்றல் முறை ஆகும்.

  • குருகுலம் என்னும் சொல் குரு (ஆசிரியர்), குலம் (குடும்பம் அல்லது வீடு) என்ற இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளின் கூட்டாகும்.

  • நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கணம், தர்க்கவியல், நெறிமுறைகள், ஜோதிடம், கணிதம், இராணுவ உத்திகள் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டன. ஆகியன
    ஒழுக்கமான வாழ்க்கை மேற்கொள்வதற்கான பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

  • இரு பிறப்பாளர்கள் மட்டுமே குருகுலத்தில் மாணவர்களாகச் சேர்க்கப்படுவர். பெண்களுக்கு பொது கல்வி அளிக்கப்படவில்லை.

  • பிரம்மச்சரியம் (மாணவப் பருவம்)

  • கிரகஸ்தம் (திருமண வாழ்க்கை)

  • வனப்பிரஸ்தம் (காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்)

  • சன்னியாசம் (மோட்சம் அடைவதற்கான துறவற வாழ்க்கை மேற்கொள்ளல்)