வீரமாமுனிவர்

கான்சுடான்சு சோசப் பெசுகி

![[1000045705.jpg]]

  • திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் ‘இஸ்மத்சன்னியாசி’ என்னும் பட்டத்தை வழங்கினார்.
  • இந்தப் பாரசீகச் சொல்லுக்கு ‘தூயதுறவி’ என்பது பொருள்.
  • 17ம் நூற்றாண்டு
  • 3 காண்டங்களையும் 36 படலங்களையும் 3615 பாடல்களையும் கொண்டது.

நூல்கள்

  • தேம்பாவணி
  • சதுரகராதி (தமிழின் முதல் அகராதி)
  • தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்)
  • சிற்றிலக்கியங்கள்
  • உரைநடை நூல்கள்
  • பரமார்த்த குருகதைகள்
  • மொழிபெயர்ப்பு நூல்கள்

பாடப் பகுதி

  • கிறித்துவிற்குமுன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான்.
  • இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர்.
  • இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி.
  • வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று பெயரிட்டுள்ளார்.
  • கருணையன் தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார்.
  • அச்சூழலில் அவருடைய தாய் இறந்துவிட்ட போது கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி ஆறுதல் அளிப்பதை இப்பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
  • தேம்பா + அணி - வாடாத மாலை
  • தேன் + பா + அணி - தேன்போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு
  • கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை ) பாட்டுடைத் தலைவனாகக்கொண்டு பாடப்பட்ட நூல்
  • இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.
  • 17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது .