விலங்குகள்-உலகம்

  • தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய காப்பகம் முண்டந்துறை புலிகள் கப்பகம் (895 சதுர கிலோமீட்டர் பரப்பளவு)
  • யானைகள் எப்பொழுதும் கூட்டமாகத்தான் வாழும். இந்தக் கூட்டத்திற்கு பென்யானைத்தான் தலைமைத் தாங்கும்.
  • தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்-மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்)
  • கரடி ஓர் அனைத்துண்ணி
  • புலி இரவில் மட்டுமே வேட்டையாடும் தன்மையுடையது. அது தனித்து வாழும் தன்மையுடையது.
  • கருவுற்ற புலி 90 நாட்களில் 2 அல்லது 3 குட்டிகள் ஈனும்.
  • புலி தான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு.
  • புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை எனவே, அதனைப் பண்புள்ள விலங்கு என்பர்.
  • உலகில் ஆசியச்சிங்கம் அப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கங்கள் வாழ்கின்றன.
  • இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கிர் சரணாலயத்தில் மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.
  • நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது. எனவே இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்கிறார்கள்.
  • இந்தியாவில் சருகுமான், மிளாமான், வெளிமான் எனப் பல வகையான மான்கள் உள்ளன. எல்லாவகை மான்களிலும் நம் நாட்டுப் புள்ளி மான்களே சிறந்தவை என்பர்.