விஜயநகர--நாயக்கர்-காலச்-சிற்பங்கள்

  • காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்,

  • வேலூரிலுள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் ஆகியவற்றிலுள்ள கல்யாண மண்டபங்கள்

  • மதுரை கோவிலில் அமைந்துள்ள புதுமண்டபம்

  • சிற்பங்களோடு கூடிய மாடக்குழிகளை அமைக்கும் பழக்கம் நாயக்கர் காலத்திலும் தொடர்ந்தது.

  • பெரிய வடிவங்களிலான புடைப்புச் சிற்பங்களை அமைக்கும்முறை அதிகரித்தது

  • திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அழகியநம்பி கோவில்,

  • திருவரங்கம் ரங்கநாதர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கோபாலகிருஷ்ண கோவில்

  • ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் கோவிலிலுள்ள தெற்குவிழா மண்டபம்,

  • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் முகப்பில் மேற்கூரையுடன் அமைந்துள்ள புகுமுக மண்டபம்

  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள 1000-கால் மண்டபம், புதுமண்டபம்,

  • திருக்குறுங்குடி, நாங்குநேரி வானமாமலையார் கோவில் ஆகியவற்றிலுள்ள இரதிமண்டபம்

  • தூண்கள் அதிகம் அலங்கரிக்கப்பட்டவை.

  • ஒற்றைக்கல்லில் மிகப்பெரிய யாளி, குதிரை வடிவச்சிலைகள்

  • இசைத்தூண்கள், மண்டபங்களிலுள்ள தூண்களின் மேற்பகுதி சிங்கம் அமர்ந்திருப்பது

  • திண்டுக்கல்லுக்கு அருகே தாடிக்கொம்பில் அமைந்துள்ள கோவில்கள்,

  • திருநெல்வேலிக்கு அருகே கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள கோவில்,

  • தஞ்சாவூரில் பெரிய கோவிலுக்குள் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி கோவில்

  • நாயக்க மன்னர் பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தனர்.

  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேசுவரம் பெருங்கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில், திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் உள்ள பெருமாள் கோவில், பேரூர் சிவன் கோவில்

  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் கண்ணப்பர், குறவன் குறத்தி போன்ற சிற்பங்கள் உள்ளன. அரிச்சந்திரன், சந்திரமதி சிற்பங்களில் ஆடை, ஆபரணங்கள் கலை நயத்துடன் காணப்படுகின்றன. இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலையும் அமைந்துள்ளது.

  • கோயம்புத்தூருக்கு அண்மையிலுள்ள பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலை நுட்பத்தின் உச்சநிலைப் படைப்பு என்று கூறலாம். விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிக மிக நுட்பமாகக் கலைநயத்துடன் அவை படைக்கப்பட்டுள்ளன.

  • கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவிலில் உள்ள குறவன் குறத்தி, இரதிதேவி சிலைகள் காண்போரை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.