விஜய-நகரம்

  • 14 ஆம் நூற்றாண்டு

  • முகமது பின் துக்ளக்கின் அடக்குமுறை நடவடிக்கைகள் புதிய சுதந்திர அரசுகள் தோன்றுவதற்கு காரணமாயின.

  • இந்தியாவின் தெற்கே விஜயநகரமும், குல்பர்கா அல்லது பாமினி ஆகியவை மாபெரும் அரசுகளாக எழுச்சி பெற்றன.

  • பாமினி அரசு, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதிலும் மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் பரவி இருந்தது.

  • பதினெட்டு முடியரசர்களால் ஆளப்பட்ட இவ்வரசு ஏறத்தாழ 180 ஆண்டுகள் நீடித்தது.
    இவ்வரசு பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சரிந்து பீஜப்பூர், அகமது நகர், கோல்கொண்டா, பீடார், பீரார் என ஐந்து சுல்தானியங்களாகப் பிரிந்தது.

  • விஜயநகர அரசு வலுவான அரசாக 200 ஆண்டுகள் கோலோச்சியது. விஜயநகரின் செல்வமும் வளமும், அவ்வரசுக்கு எதிராகத் தக்காண முஸ்லிம் அரசுகளை ஒருங்கிணைத்தது.

  • 1565-ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் விஜயநகர் அரசை நசுக்குவதில் இவ்வரசுகள் வெற்றி பெற்றன.

விஜயநகரப் பேரரசு நிறுவப்படுதல்:

  • வெற்றியின் நகரம் என்றறியப்படும் விஜயநகரம் ஹரிஹரர், புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் கர்நாடகத்தின் தென்பகுதியில் நிறுவப்பட்டது.

  • துக்ளக் அரசர்களிடம் பணி செய்து வந்த இவர்களை, சிருங்கேரி சைவ மடத்தின் தலைவரான வித்யாரண்யர் என்பார் அர்ப்பணியைக் கைவிட்டு நாட்டை முஸ்லிம்களின் ஆதிகத்திலிருந்து மீட்குமாறு அறிவுறுத்தியதாக ஒரு வாய்மொழி வரலாற்று மரபு கூறுகிறது.

  • இப்புதிய அரசு இவர்களின் ஆன்மீக குருவான வித்யாரண்யருக்கு மதிப்பளிக்கும் விதத்தில் வித்யாநகர் என குறிப்பிட்ட ஒரு காலம் வரை அழைக்கப்பட்டது. பிறகு விஜய நகர் என அழைக்கப்பட்டது.

  • சங்கம (1336-1485)

  • சாளுவ (1485- 1505)

  • துருவ (1505-1570),

  • ஆரவீடு (1570-1646)

  • விஜயநகர அரசர்கள், பாமினி சுல்தான்கள்,
    ஒடிசாவைச் சேர்ந்த அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்கு கிருஷ்ணா-துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதியும், கிருஷ்ணா-கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப்பகுதியுமே காரணமாக அமைந்தன.

  • சங்கம வம்சத்தைச் சேர்ந்த முதலிரண்டு சகோதரர்களான ஹரிஹரர்-புக்கர் வலிமைமிக்க பாமினி சுல்தானியத்திடமிருந்து காப்பாற்றினர்

  • விஜயநகர் அரசு உருவாகிப் பத்து ஆண்டுகளுக்கு பிறகே பாமினி அரசு நிறுவப்பட்டது.

  • முதலாம் புக்கருடைய மகனான குமார கம்பணா மதுரை சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு அங்கு ஒரு நாயக்க அரசை நிறுவுவதிலும் வெற்றி பெற்றார்.

  • குமார கம்பணாவின் மனைவி கங்காதேவியால் எழுதப்பெற்ற மதுரா விஜயம் என்னும் நூலில் விஜயநகரப் பேரரசால் மதுரை கைப்பற்றப்பட்டதைத் தெளிவாக விளக்குகிறது.

சங்கம வம்சத்தின் முடிவு:

  • புக்கர் இயற்கை எய்தியபோது பரந்த ஒரு நிலப்பரப்பைத் தம் மகன் இரண்டாம் ஹரிஹரர் ஆள்வதற்காக விட்டுச் சென்றார்.
  • பாமினி அரசிடமிருந்து பெல்காம், கோவா ஆகிய பகுதிகளைக் கைப்பற்றியதே இவருடைய போற்றத்தகுந்த சாதனையாகும்.
  • இவருடைய மகன் முதலாம் தேவராயர் ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர்களைத் தோற்கடித்தார்.
  • இவருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டாம் தேவராயர் சங்க வம்சத்தின் தலைசிறந்த அரசராவார்.
  • தம்மிடம் பணி செய்வதற்காகவும் தம்முடைய படைகளுக்கு நவீனப்போர் முறைகளில் பயிற்சியளிப்பதற்காகவும் இஸ்லாமிய வீரர்களை தமது படையில் பணியமர்த்தும் முறையை இவர் தொடங்கி வைத்தார்.

சாளுவ வம்சத்தின் தோற்றம்:

  • இரண்டாம் தேவராயருக்குப் பின்னர் பேரரசு ஆபத்தான சூழலுக்கு உள்ளானது. விஜயநகரப் பேரரசின் திறமைமிக்க படைத்தளபதியான சாளுவ நரசிம்மர் இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டார்.
  • சங்கம வம்சத்தின் கடைசி அரசரான இரண்டாம் விருபாக்சி ராயரைக் கொலை செய்துவிட்டு, தம்மையே பேரரசராக அறிவித்துக் கொண்டார்.
  • அவருடைய மரணத்துடன் அவரால் உருவாக்கப்பட்ட சாளுவ வம்சமும் முடிவுக்கு வந்தது.
  • இவருக்குப் பிறகு திறமைமிகுந்த படைத்தளபதியான நரசநாயக்கர், துளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கிவைத்தார்.

கிருஷ்ணதேவராயர்:

  • துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர் கிருஷ்ணதேவராயர் ஆவார்.
  • இவர் இருபது ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
  • ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் துங்கபத்ரா நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுதர்திரமாகச் செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்குவதே அவரின் முதற்கட்ட தலையாயப் பணியாக இருந்தது.
  • குல்பர்காவைக் கைப்பற்றுவது அவரின் இரண்டாவது இலக்கானது இச்சமயத்தில் பாமினி சுல்தான் முகமதுஷா, அவருடைய அமைச்சரால் பதவி பறிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தார்..
  • கிருஷ்ணதேவராயர் அவரை விடுவித்து மீண்டும் அரியணையில் அமர வைத்தார். மேலும் ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிரதாபருத்திரனோடு போர் மேற்கொண்டார்.
  • சமாதானம் செய்து கொள்ள வேண்டுகோள் விடுத்த பிரதாபருத்திரன், தமது மகளைக் கிருஷ்ணதேவராயருக்குத் திருமணம் செய்து தருவதாகவும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணதேவராயர் தாம் கைப்பற்றிய பிரதாபருத்திரனின் பகுதிகளை மீண்டும் அவருக்கே வழங்கினார்.
  • போர்த்துகீசியப் பீரங்கிப்படை வீரர்களின் உதவியோடு கோல்கொண்டா சுல்தானை கிருஷ்ணதேவராயர் எளிதாகத் தோற்கடித்தார்.
  • தொடர்ந்து பீஜப்பூர் சுல்தானிடமிருந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்.

சிறந்த கட்டிட வல்லுநர்:

  • கிருஷ்ணதேவராயர் மழைநீரைச் சேமிப்பதற்காகப் பெரிய நீர்ப்பாசனக் குளங்களையும், நீர்த்தேக்கங்களையும் உருவாக்கினார்.
  • இவரது தலைநகரான ஹம்பியில் கிருஷ்ணசாமி கோவில், ஹசாரா ராமசாமி கோவில், விட்டலாசுவாமி கோவில் போன்ற புகழ்பெற்ற கோவில்களைக் கட்டினார்.
  • போர்களின் மூலம் பெற்ற செல்வங்களை தென்னிந்திய கோவில்களுக்கு வழங்கி, அதன் மூலம் கோவில்களின் நுழைவாயில்களில் கோபுரங்களை நிறுவினார்.
  • இவரது பெயருக்குப் புகழை சேர்க்கும் வண்ணம் அவை ராயகோபுரம் என அழைக்கப்பட்டது.
  • அரேபியாவிலிருந்தும், ஈரானிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் குதிரைகளை அவர் இறக்குமதிசெய்தார்.
  • போர்த்துகீசிய, அராபிய வணிகர்களுடன் அவர் சிறந்த நட்புறவை கொண்டிருந்தார். அதனால் சுங்கவரிகள் மூலம் நாட்டின் வருமானம் அதிகரித்தது.

இலக்கியம், கலை, கட்டிடக்கலையின் புரவலர்:

கிருஷ்ணதேவராயர் கலை, இலக்கியத்தை ஆதரித்தார்.

  • அஷ்டதிக்கஜங்கள் என்றறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள் அவரின் அவையை அலங்கரித்தனர்.
  • அவர்களுள் மகத்தானவர் அல்லசானி பெத்தண்ணா ஆவார். மற்றொரு குறிப்பிடத்தகுந்த ஆளுமை தெனாலி ராமகிருஷ்ணன் (தெனாலிராமன்) ஆவார்.

தலைக்கோட்டைப் போரும் விஜயநகர் பேரரசின் வீழ்ச்சியும்:

  • கிருஷ்ணதேவராயரைத் தொடர்ந்து அவருடைய இளைய சகோதரர் அச்சுதராயர்

  • முதலாம் வேங்கடர்

  • இவர்களுக்குப் பின்னர் குறைந்த வயதைக்கொண்ட சதாசிவராயர் கொண்ட
    முடிசூட்டப்பட்டார்.

  • பகர ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்த ராமராயர் பேரரசின் திறமைமிக்கத் தளபதியாவார்.

  • சதாசிவராயருக்கு அரசு பதவி ஏற்கும் வயது வந்த பின்னரும்கூட அவரைப் பெயரளவிற்கு அரசராக வைத்துக் கொண்டு ராமராயரே உண்மையான அரசராக ஆட்சி புரிந்தார்.

  • விஜயநகருக்கு எதிராகப் போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்டனர். எதிரிகளின் கூட்டுப்படைகள் 1565-ல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரப் படைகளை எதிர்கொண்டன.

  • ராக்சச தங்கடி (தலைக்கோட்டைப் போர்) என்றறியப்பட்ட இப்போரில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது. தொடர்ந்து நகரம் கொள்ளையடிக்கப்பட்டதோடு பயங்கரமான
    மனிதப் படுகொலையும் அரங்கேறியது.

  • கிழக்குக் கர்நாடகத்தில், துங்கபத்ரா நதியின் கரையில் உள்ள விஜயநகரம் இருந்த இடம் தற்போது ‘ஹம்பி’ என அழைக்கப்படுகிறது.

  • ஹம்பி சீர்குலைந்து இடிபாடுகளாகக்
    காணப்படுகிறது.யுனெஸ்கோ ஹம்பியை பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.

ஆரவீடு வம்சம்:

  • ராமராயர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். இவருடைய சகோதரர் திருமலைதேவராயர், அரசர் சதாசிவராயருடன் தப்பித்தார்.
  • திருமலைதேவராயர் விலைமதிக்கமுடியாத செல்வங்களோடு சந்திரக்கிரியை சென்றடைந்தார். அங்கு இவர் ஆரவீடு ஆட்சியைத் தொடங்கினார்.
  • ஆரவீடு வம்சத்தார் பெனுகொண்டாவில் புதிய தலைநகரை உருவாக்கிப் பேரரசை சில காலம் நல்ல நிலையில் வைத்திருந்தனர்.
  • பேரரசில் ஏற்பட்ட உட்பூசல்களாலும் பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்களின் சூழ்ச்சிகளாலும் விஜயநகர அரசு 1646-ல் இறுதியாக வீழ்ச்சியுற்றது.

விஜயநகர நிர்வாகம்:

  • அரச உரிமையைச் சாளுவ நரசிம்மர் முறைகேடாகக் கைப்பற்றியதால் சங்கம வம்சம் முடிவுற்று சாளுவ வம்ச ஆட்சி தொடங்கியது.

அரசமைப்பு:

  • பேரரசு பல்வேறு மண்டலங்கள் (மாநிலம்), நாடுகள் (மாவட்டங்கள்), ஸ்தலங்கள் (வட்டங்கள்), கிராமங்கள் என பிரிக்கப்பட்டிருந்தது.
  • ஒவ்வொரு மண்டலமும் மண்டலேஸ்வரா என்ற ஆளுநரின் கீழிருந்தது.
  • ஒவ்வொரு கிராமத்திலும் கிராமசபை என்ற அமைப்பிருந்தது. கிராமம் தொடர்பான விஷயங்களை கௌடா என்றழைக்கப்பட்ட கிராமத்தலைவர் நிர்வகித்தார்.
  • பேரரசின் இராணுவம் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தது.
  • இராணுவம் நவீனமயமாக்கப்பட்டதால் விஜயநகரப் படைகள் வெடிமருந்து ஆயுதங்களைப் பயன்படுத்தின.

பொருளாதார நிலை:

  • அக்கால உலகம் அறிந்திருந்த மிகவும் செல்வச்செழிப்பு மிக்க அரசுகளில் ஒன்றாக விஜயநகரப் பேரரசு திகழ்ந்தது.
  • 15-ம், 16-ம் நூற்றாண்டுகளில் பேரரசிற்கு வருகைபுரிந்த பல அயல்நாட்டுப்பயணிகள், தங்கள் பயணக்குறிப்புகளில் பேரரசின் செல்வம், மேன்மை குறித்துப் புகழாரம் சூட்டியுள்ளனர்.
  • விஜயநகரப் பேரரசர்கள் வராகன் என்னும் பெயரில் அதிக எண்ணிக்கையிலான தங்க நாணயங்களை வெளியிட்டனர்.

வேளாண்மை:

  • வேளாண்மையை முன்னேற்றம் அடையச் செய்யும் பொருட்டு நிலச்சுவான்தார்கள் கோவில்களிலும், நீர்ப்பாசனத்திலும் முதலீடு செய்தனர்.
  • போர்த்துக்கீசியக் கட்டுமானக் கலைஞர்களின் உதவியுடன் மிகப்பெரும் ஏரி கட்டப்பட்டதாகப் பாரசீகப் பயணியான அப்துர்ரஸாக் குறிப்பிட்டுள்ளார்.

குடிசைத் தொழில்கள்:

  • நெசவுத்தொழில், சுரங்கத் தொழில், உலோகத் தொழில்.
  • கில்டுகள் என்றழைக்கப்படும் தொழில்சார் அமைப்புகள் கைவினை குடிசைத்தொழில்களை முறைப்படுத்தின.
  • கைவினைஞர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தனித்தனியே கில்டுகள் இருந்ததாக அப்துர் ரஸாக் குறிப்பிட்டுள்ளார்.

வாணிகம்:

  • சீனாவிலிருந்து வந்த பட்டு, மலபார் பகுதியைச் சேர்ந்த வாசனைப்பொருட்கள், பர்மாவிலிருந்து பெறப்பட்ட விலையுயர்ந்த ஆபரணக்கற்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயங்கியது.
  • பாரசீகம், தென்னாப்பிரிக்கா, போர்ச்சுகல், அரேபியா, சீனா, தென்கிழக்காசிய நாடுகள், இலங்கை ஆகிய நாடுகளுடன் விஜயநகரம் வாணிகம் மேற்கொண்டது.

இலக்கியப் பங்களிப்பு:

  • சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் சமயம் மற்றும் சமயம் சாரா நூல்கள் எழுதப்பட்டன.
  • கிருஷ்ணதேவராயர் அமுக்தமால்யதா என்னும் காவியத்தை தெலுங்கு மொழியிலும், ஜாம்பவதி கல்யாணம் என்னும் நாடக நூலை சமஸ்கிருத மொழியில் எழுதினார்.
  • பாண்டுரங்கமகாத்தியம் என்னும் நூலைத் தெனாலி ராமகிருஷ்ணா எழுதினார்.
  • ஸ்ரீநாதர், பெத்தண்ணா, ஜக்கம்மா, துக்கண்ணா போன்ற புலவர்கள் சமஸ்கிருத, பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட நூல்களைத் தெலுங்கு மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
  • “அமுக்தமால்யதா” தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இது, பெரியாழ்வாரின் மகளான கோதை தேவியைப் பற்றியதாகும்.
  • கடவுள் ரங்கநாதருக்கு அணிவிப்பதற்காகத் தொடுக்கப்பட்ட மாலைகளை அவருக்குச் சூடுவதற்கு முன்பாக இவ்வம்மையார் சூடிக்கொள்வார்.
  • அமுக்தமால்யதா என்பதற்கு தான் அணிந்த பின்னர் கொடுப்பவர் எனப்பொருள்.

கட்டிடக் கலைக்குச் செய்த பங்களிப்பு:

  • விஜயநகர அரசரர்களின் கோவில் கட்டுமான நடவடிக்கைகள் ஒரு புதிய பாணியை உருவாக்கின. அது விஜயநகரப்பாணி என அழைக்கப்பட்டது.

  • பெரும் எண்ணிக்கையிலான வடிவத்தில் பெரிய தூண்களும் அவற்றில் இடம்பெற்றுள்ள சிற்ப, செதுக்கல் வேலைப்பாடுகளும் விஜயநகரப்
    பாணியின் தனித்துவ அடையாளங்களாகத்
    திகழ்ந்தன.

  • இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ள விலங்குகளில் குதிரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன.

  • இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ள விலங்குகளில் குதிரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன.