வாணிதாசன்

ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! – கல்லில்உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்(ஓடை ஆட…)பாட இந்த ஓடை எந்தப் பள்ளி சென்று பயின்ற தோடி!ஏடு போதா இதன்கவிக் கார் ஈடு செய்யப் போரா ரோடி! (ஓடை ஆட…)நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக்கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக் குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி (ஓடை ஆட…)நெஞ்சில் ஈரம் இல்லார் நாண நீளு ழைப்பைக் கொடையைக் காட்டிச்செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்(ஓடை ஆட…)- வாணிதாசன்

வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி ஊன் தோன்றி உயிர் தோன்றி உணர்வு தோன்றி ஒளி தோன்றி ஒலி தோன்றி வாழ்ந்த அந்நாள் தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!

வாணிதாசன்

கயலிடைச் செங்கண் கருவரால் வாளை கரைவளர் தென்னையில் பாயப் பெயரிடைப் பட்ட வானெனத் தோன்றும் பெருங்குளம் நிறைந்து விட்டாயே