- ராஷ்டிரகூடர்கள் தக்காணத்தை மட்டுமல்லாது, தூரத் தெற்குப் பகுதிகளையும், கங்கை சமவெளிப் பகுதிகளையும் எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர்.
- அவர்கள் பிறப்பால் கன்னடர்களாவர். அவர்களின் தாய்மொழி கன்னடம்.
- தந்திதுர்க்கர் ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் ஆவார்.
- அவர் வாதாபிச் சாளுக்கியரிடம் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர்.
- முதலாம் கிருஷ்ணர் தந்திதுர்க்கரை அடுத்துப் பதவி ஏற்றவர்.
- அவர் ராஷ்டிரகூடர் ஆட்சியை ஒருங்கிணைத்து விரிவுபடுத்தினார்.
- எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் இவர் கட்டியதாகும்.
ராஷ்டிரகூட அரசர்கள்:
- ராஷ்டிரகூட அரசர்களில் தலைச்சிறந்த அரசர் அமோகவர்ஷர்
- அவர் மான்யக்கோட்டாவில் (தற்போது கர்நாடகாவில் உள்ள மால்கெட்) புதிய தலைநகரை உருவாக்கினார்.
- புரோச், அவர்களின் துறைமுகமானது.
- அமோகவர்ஷர் (கி.பி. 814 - 878) ஜினசேனா எனும் சமணத் துறவியால் சமண மதத்திற்கு மாற்றப்பட்டார்.
- அமோகவர்ஷருக்குப் பின்னர் அவரது மகன் இரண்டாம் கிருஷ்ணர் அரசரானார்.
- கி.பி. 916 அவர் பராந்தகச் சோழனால் வல்லம் (தற்போதைய திருவல்லம், வேலூர் மாவட்டம்) போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டார்.
- மூன்றாம் கிருஷ்ணர் ராஷ்டிரகூட வம்சத்தின் திறமை வாய்ந்த கடைசி அரசனாவார். இவர் சோழர்களைத் தக்கோலம் (தற்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ளது) போர்க்களத்தில் தோற்கடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார்.
- மூன்றாம் கிருஷ்ணரின் கீழ் சாளுக்கியர் கன்னோசியைக் கைப்பற்றுவதற்காக ஏனைய வட இந்திய அரசர்களோடு போட்டியிட்டனர்.
- அவர் இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரா கோயிலைக் கட்டினார்.
- நாட்டைச் சரியான முறையில் வைத்திருந்த கடைசி அரசர் மூன்றாம் கோவிந்தனாவார். அவருக்குப் பின் ராஷ்டிரகூடரின் அதிகாரம் விழ்ந்தது.
இலக்கியம்:
- கன்னட மொழி பெருமளவு முக்கியத்துவம் பெற்ற மொழியானது.
- அமோகவர்ஷரால் இயற்றப்பட்ட கவிராஜ மார்க்கம் கன்னட மொழியின் முதல் கவிதை நூலாகும்.
- கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் எனக் கருதப்படுபவர்கள் ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா, ரன்னா ஆகியோர் ஆவர்.
- ஆதிகவி பம்பா அவரது நூற்களான ஆதிபுராணம், விக்கிரமார்ஜுன பெரும்புகழ் பெற்றவர்.
கலை மற்றும் கட்டிடக்கலை:
-
இந்தியக் கலைக்கு ராஷ்டிரகூடர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர்.
-
ராஷ்டிரகூடர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைச் சாதனைகளை எல்லோராவிலும் எலிபெண்டாவிலும் காணலாம்.
-
கைலாசநாதர் கோவில் (மகாராஷ்டிராவிலுள்ள அருகில்): எல்லோரா ஔரங்காபாத்
எல்லோராவின் குன்றுப் பகுதியில் அமைந்துள்ள 30 குடைவரைக் கோவில்களில் கைலாசநாதர் கோவிலும் ஒன்று. -
முதலாம் கிருஷ்ணருடைய ஆட்சிக் காலத்தில் இக்கோவில் உருவாக்கப்பட்டது.
இக்கோவில் அதன் கட்டடக்கலை
பிரம்மாண்டத்திற்கும் சிற்பங்களின் அற்புதங்களுக்கும் பெயர் பெற்றதாகும். -
இக்கோவில் 60,000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதனுடைய விமானத்தின் (கோபுரம்) உயரம் 90 அடிகளாகும்..
-
இக்கோவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் சாயலைப் பெற்றுள்ளது.
-
கைலாசநாதர் கோவில் திராவிடக் கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளது.
எலிபெண்டா தீவு:
- இத்தீவின் இயற்பெயர் ஸ்ரீபுரி - உள்ளூர் மக்களால் காரபுரி என்று அழைக்கப்படுகிறது.
- எலிபெண்டா மும்பைக்கு அருகில் உள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவில் உள்ள பெரிய யானையின் உருவத்தை கண்ணுற்ற போர்த்துகீசியர்கள், எலிபெண்டா தீவு எனப் பெயரிட்டனர்.
- இத்தீவுக்கு எலிபெண்டா குகையிலுள்ள திருமூர்த்தி (மூன்று முகங்கள் கொண்ட) சிவன் சிலையின் வனப்பு ஈடு இணையற்றதாக்கும்.
- கோவிலின் நுழைவாயிலில் காணப்படும் துவாரபாலகர்களின் சிலைகள் நமது கண்ணையும் கருத்தையும் கவர்பவை.
பட்டடக்கல்:
பட்டடக்கல் வளாகத்தில் கோவில்களை கட்டியுள்ளனர்.
ராஷ்டிரகூடர்கள் இங்குச் சமண நாராயணர் கோவிலும் காசிவிஸ்வேஸ்வரர் கோவிலும் ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டுள்ளன.
உலகம் அந்நாளில்:
மாபெரும் லேஷன்(Leshan) புத்தர் சிலை 71 மீட்டர் உயரம். சீனாவின் தாங்(Tang) அரச வம்சத்தினரால் கட்டப்பட்டது, (கி.பி.(பொ.ஆ)713-803).
பாக்தாத் இஸ்லாமிய பேரரசின் மகத்தான நகரம் 8ஆம் நூற்றாண்டிலிருந்து 10ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது.