பெண் உடையை தவிர்த்து ஆண் உடை அணிந்து போர் புரிந்தவர்.
பெண்ணாக இருந்தால் என்ன என்னையும் சுல்தான் என்றே அழையுங்கள் என்றவர்.
குதிப்மினார் அருகே ரசியாவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய நிருதீன் படையை தோற்கடித்தார்.
குரானை ரசியா சுத்தமான உச்சரிப்பில் ஓதினார்.
ரசியாவின் குதிரைப் படைத் தலைவர் “ஜலாலுதீன் யாகுத்” அபிசினிய/எத்தியோப்பியா அடிமையாவர்.
குதிரைப் படையை “அமீர்-இ-அகுர்” என்றழைப்பர்.
யாகுத்-ஐ குதிரைப்படைத் தலைவராக நியமித்தது டெல்லி (ம) துருக்கிய பிரபுக்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
ரசியா, யாகுத் இடையே இருந்த உறவை பெரிதுபடுத்தி பிரபுக்கள் அரசியை பதவியிலிருந்து இறக்க முயன்றனர். ஆனால் மக்கள் ஆதரவினால் எதுவும் செய்ய முடியவில்லை.
தெற்கு பஞ்சாப்-ல் ஆளுநராக இருந்த “அல்துணியா “கலகத்தில் ஈடுபட்டதால் அவரை தண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் போதி சதிகாரர்கள் டெல்லி ஆட்சியை கைப்பற்றினார்.
இச்சமயத்தில் மங்கோலியர் தாக்குதலையும் எதிர்கொண்டார். இதில் “யாகுத்” கொலை செய்யப்பட்டார்.
பிறகு ரசியா, அல்துணியாவை திருமணம் செய்தி கொண்டு டெல்லியை மீட்க வரும்போது இருவரும் கொலை செய்யப்பட்டனர்.
ரசியாவை பற்றி இபின் பாதுதா (மொரக்கோ பயணி)குறிப்புகள் - குதிரை மீது ஆண்கள் சவாரி செய்வது போல் கையில் வில் அம்புடன் அரச பரிவாரங்கள் சூடி ரசியாவும் சவாரி செய்தார். தனது முகத்துக்கு அவர் திரையிடவில்லை இருந்தாலும் 3½ ஆண்டுகள் ஆட்சி செய்தார்.