-
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு’ என்று கூறியவர் - மணவை முஸ்தபா
-
‘ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியம் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காராணமாகும்.! என்றவர் - மு.கு.ஜகந்நாதராஜா
-
‘காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும்.’ என்றவர் - குலோத்துங்கன்
-
‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக்குறிப்பு, சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு புலப்படுத்துகிறது.
-
ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேக்ஸ்பியர் அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்.
-
இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
-
ஜெர்மனியில் ஓர் ஆண்டில்
பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகின்றன. -
அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம்; இரண்டாமிடம் மலையாளம்; அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் முறையே தெலுங்கு, இந்தி, கன்னடம் வடமொழி, ரஷ்ய மொழி, வங்கமொழி, மராத்தி மொழி போன்றவை இடம்பெறுகின்றன.
-
‘ராகுல் சாங்கிருத்யாயன்’ 1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ என்ற நூலை இந்தி மொழியில் எழுதினார். 1949 ஆம் ஆண்டு இந்நூலை ‘கணமுத்தையா’ என்பவர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இன்று வரையில் ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது.
-
வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூலை இதுவரை மொழிபெயர்த்தவர்கள்:
• 1949 - கணமுத்தையா மொழிபெயர்ப்பு
• 2016- டாக்டர் என்.ஸ்ரீதர் மொழிபெயர்ப்பு
• 2016 - முத்து மீனாட்சி மொழிபெயர்ப்பு
• 2018 - யூமா வாசுகி மொழிபெயர்ப்பு -
பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் பற்றி தனிநாயகம் அடிகள்: (Bibliothque Nationale)
-
பிரான்சு தேசிய நூற்கூடத்தில் ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள.
-
இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம்.
-
பண்டைக் காலத்தில் முதன்முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன.
-
அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்த பொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். ’ மாணிக்கவாசகர் சரளிப்புத்தகம், பிள்ளைத்தமிழ், அம்மன் புதுச்சேரி பிள்ளைத்தமிழ்’ முதலிய நூல்களும் அங்கு உள.