-
பதிற்றுப்பத்துப் பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள் இதற்கு முன்னோடி!
-
பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம், சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது: செப்பமான வடிவம் பெற்றது; கல்இலக்கியமாய் அமைந்தது.
-
கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்ட இரண்டாம்
இராசராச சோழன் -
இவருடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு, அதில் ஒன்று 91 அடிகளைக் கொண்டது. அதில் 16-33 வரையான அடிகள் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.
-
இப்பாடப் பகுதிக்கான மூலம் தமிழ் இணையக் கல்விக் கழகத்திலிருந்து பெறப்பட்டது.
-
முதலாம் இராசராசன் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன.
-
இவை புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை