“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத் தன்தேசம் அல்லாமல் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”
மூதுரை பற்றியக் குறிப்புகள்
- [[மூதுரை]] இயற்றியவர் [[ஒளவையார்]]
- மூதுரை என்னும் “சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை” என்பது பொருள்.
- சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர்பெற்றது.
- இந்நூலில் 31 பாடல்கள் உள்ளன.
- அனைத்தும் நேரிசை வெண்பாக்கள்.
“வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம்” என்று இந்நூல் விநாயகர் வாழ்த்துடன் தொடங்குகிறது. (“தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சேர்வர் தமக்கு” எனப் பாடல் முடிகிறது) எளிமையான உவமைகளை எடுத்துக்காட்டி உயர்ந்த நீதியினைச் சொல்லும் நூல் - மூதுரை