முத்துராமலிங்கத்தேவர்

1908 அக்டோபர் 30

1963 அக்டோபர் 30

“வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் அறிவாளிகளையும் உண்டாக்கியவர்; உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர்;சுத்தத் தியாகி” - [[தந்தை பெரியார்]]

“இது போன்ற ஒரு பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை; முத்துராமலிங்கத்தேவரின் வீரமிக்கப் பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்’ என்று கூறியவர் காமராசர்.

“தென்னாட்டுச் சிங்கம் என்று தேவரைச் சொல்லுகிறார்களே, அது சாலப் பொருந்தும் என அவரது தோற்றத்தைப் பார்த்த உடனேயே நினைத்தேன். அவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது” [[அறிஞர் அண்ணா]]

“முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது; உதடுகளிலிருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று மறைக்காமல் உண்மையெனப்பட்டதை அப்படியே பேசிவிடுவது அவர்வழக்கம்” [[இராஜாஜி]]

முத்துராமலிங்கத்தேவர் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய், வல்லபாய் பட்டேல் போன்றமேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்ததாக வடஇந்திய இதழ்கள் பாராட்டின.

1934 ஆம் ஆண்டு மே12, 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டைநடத்தினார். அவரது தொடர்போராட்டத்தால் 1948 ஆம் ஆண்டு அச்சட்டம் நீக்கப்பட்டது.

அக்காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல ஒரு சாராருக்கு தடை இருந்தது.அத்தடையை எதிர்த்து 1939 ஜூலை நுழைவுப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டார். அதனை எதிர்த்து 8ல் மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் அர்ச்சகர்களாலயப்பணியைப்
புறக்கணித்தனர். தேவர் திருச்சுழியில் இருந்து அர்ச்சகர்களை இருவரை அழைத்து வந்து ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றி பெறச் செய்தார்.

ஜாமீன் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி விவசாயிகள் துயர்துடைக்கப் பாடுபட்டார்.

பாரதமாதா கூட்டுறவு பண்டகசாலையை விவசாயிகளின் ஏற்படுத்தி விலை பொருள்களுக்குச் சரியான விலை
கிடைக்கச் செய்தார்.

மதுரையிலிருந்த நூற்பு ஆலை ஒன்றில்
வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காக தோழர் [[ப.ஜீவானந்தம்]] உடன் இணைந்து 1938 ல் போராட்டம் நடத்தினார்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் மத்தியப்
பிரதேசத்தில் உள்ள தாமோ என்னும் நகரில் உள்ள ராணுவச்சிறையில் அடைக்கப்பட்டு போர் முடிந்த பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார்.

சிறப்புப் பெயர்கள்: