முத்துக்குமாரசாமி-பிள்ளைத்-தமிழ்

வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே!

செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத் திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப் பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக் கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது
மசைந்தாடக் கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை’

  • முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர் -குமரகுருபரர்

  • குமரகுருபரரின் காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு

  • குமரகுருபரர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்.

  • குமரகுருபரர் இயற்றிய நூல்கள்:
    • கந்தர் கலிவெண்பா
    • மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
    • மதுரைக் கலம்பகம்
    • சகலகலாவல்லிமாலை
    • நீதிநெறி விளக்கம்
    • திருவாரூர் மும்மணிக் கோவை

  • ஏற்றம் இறைத்தலுக்கு ஏற்ற சந்தத்தை கொண்டிருப்பது - நாட்டுப்புறத்தமிழ்

  • குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்துத் தருவது - பிள்ளைத்தமிழ்

  • செங்கீரைச் செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை மென்மையாக 5-6 ஆம் மாதங்களில் அசையும்.இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர்.

  • இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலை தலைநிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.

  • சிலம்பு, கிண்கிணி - காலில் அணிவது

  • அரைநாண் - இடையில் அணிவது

  • சுட்டி - நெற்றியில் அணிவது

  • குண்டலம், குழை காதில் அணிவது

  • சூழி - தலையில் அணிவது

  • பிள்ளைத்தமிழ் 96 சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

  • பத்துப்பருவங்கள் அமைத்து பருவத்திற்குப் பத்துப் பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும்.

  • இதுஆண்பாற்பிள்ளைத்தமிழ், பெண்பாற்பிள்ளைத்தமிழ் இருவகைப்படும்.

  • பொது- காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி,

  • பெண்- கழங்கு, அம்மானை, ஊசல்

  • ஆண்- சிற்றில், சிறுபறை, சிறுதேர்