முதுமொழிக்-காஞ்சி

ஆசிரியர்

  • மதுரைக் கூடலூர்கிழார்
  • 5 ஆம் நூற்றாண்டு (அ) சங்ககாலத்திற்கு பின் வாழ்ந்தவர் (அ) வச்சரநந்தி சமகாலத்தவர்

நூல்

  • பாவகை குறள் தாழிசை, குறள்வெண் செந்துறை

  • முதுமொழி - மூத்தோர் சொல்
    காஞ்சி - மகளீர் இடையணி

  • அறவுரைக்கோவை/அறிவுரைக்கோவை எனவும் அழைக்கப்படுகிறது

  • 10 அதிகாரம், 100 பாடல்கள் உள்ளன.

  • அதிகாரத் தொடக்கம் ஒவ்வொரு அதிகாரத்திலும் பாட்டின் முதல் வரி “ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்” எனத் தொடங்குகிறது.

சிறப்புகள்

  • இது நிலையாமையைப் பற்றிய காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று.
  • இந்நூல் உலகியல் உண்மைகளை தெளிவாக எடுத்து இயம்புகிறது
  • மூத்தோர் சொற்கள் பலவற்றை கோர்த்த கோவை முதுமொழிக் காஞ்சி எனப்படும்.
  • அம்மை என்னும் வனப்பு வகையைச் சார்ந்த நூல்.
  • முதுமொழிக்கு இலக்கணம் கூறும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை.

மேற்கோள்கள்

ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை

காதலிற் சிறந்தது கண்ணஞ்சப்படுதல்

மேதையில் சிறந்தது கற்றது மறவாமை

வண்மையில் சிறந்தது வாய்மையுடமை

இளமையில் சிறந்தது மெய்ப்பிணி இன்மை

நலனுடமையின் நாணுச் சிறந்தது

கற்றலின் நன்று கற்றாரை வழிபடுதல்

ஒப்புமைகள்

கற்றலை விட சிறந்தது ஒழுக்கமுடைமை

அன்பு காட்டுவதை விட சிறந்தது -போற்றும் படி நடத்தல்

அறிவு நுட்பத்தை விட சிறந்தது - கற்றது மறவாமை

வளமான வாழ்வை விட சிறந்தது வாய்மையுடைமை

இளமையை விட சிறந்தது நோயற்ற வாழ்வு

அழகை விட சிறந்தது நாணமுடைமை

குலப்பெருமையை விட சிறந்தது ஒழுக்கமுடைமை

சிறந்த நூல்கற்றலை விட சிறந்தது பெரியோரை பின்பற்றல்

தண்டிப்பதை விட சிறந்தது நன்மை செய்தல்

பெருகிய செல்வத்தை விட சிறந்தது - குறையாமல் காத்தல்

புறப்பொருள் வெண்பாமாலை

பெருவீரன் ஒருவன் தனியாகப் பெரும்படையை எதிர்க்கும் பெருமிதத்தை