- இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் ஜாகிருதீன் முகமது பாபர் ஆவார்.
- முகல் என்னும் வார்த்தையைப் பாபரின் மூதாதையரிடம் கண்டறியலாம்.
- பாபர் 1483 பிப்ரவரி 14-ல் பிறந்தார். இவருக்கு ஜாகிருதீன் முகமது எனப் பெயடரிடப்பட்டது.
- தமது பன்னிரண்டாவது வயதில் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார்.
- துயரம் நிறைந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர், பாபர் காபூலின் ஆட்சிப்பொறுப்பேற்றார்.
முகலாயப் பேரரசுக்கான அடித்தளம்:
- 1505-ல் காபூலைக் கைப்பற்றிய பாபர், அதே ஆண்டில் இந்தியாவை நோக்கித் தமது முதற்படையெடுப்பை மேற்கொண்டார்.
- 1526-ல் நடைபெற்ற புகழ்பெற்ற முதலாம் பானிப்பட் போரில் பாபர் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்து டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றினார்.
- இவ்வாறு முகலாய வம்சத்தின் ஆட்சி ஆக்ராவைத் தலைநகரமாகக் கொண்டு துவங்கியது.
பாபரின் இராணுவ ஆக்கிரமிப்புகள்:
- பாபர் 1527-ல் ராணா சங்காவையும் அவருடைய ஆதரவாளர்களையும் கன்வா என்னுமிடத்தில் தோற்கடித்தார்.
- 1528-ல் சந்தேரித் தலைவருக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பாபர்
- 1529-ல் வங்காளம், பீகார் ஆகியவற்றைச் சேர்ந்த ஆப்கானியத் தலைவர்களை வெற்றி கொண்டார்.
- தமது வெற்றிகளை நிர்ணயிக்கும் முன்னரே 1530- ல் பாபர் இயற்கை எய்தினார்..
- பாபர் துருக்கிய, பாரசீக மொழிகளில் புலமைபெற்றவராவார்.
- துசுக்-இ-பாபரி என்ற தம் சுயசரிதையில் இந்துஸ்தான் பற்றிய தமது கருத்துகளையும், விலங்குகள், செடிகள், மரங்கள், மலர்கள், கனிகள் -குறித்தும் பதிவு செய்துள்ளார்.
- செங்கிஸ்கான் மரபைப் பின்பற்றிப் பாபரும் தமக்குப் பிடித்த தன் மூத்த மகன் ஹூமாயுனைத் தம் வாரிசாக அறிவித்தார்.
[[ஹுமாயூன்]]
[[ஷெர்ஷா]] (1540-1545):
[[அக்பர்]] (1556-1605):
- 1556-ல் ஹூமாயூன் இயற்கை எய்திய பின்னர் அவருடைய பதினான்கு வயது மகன் அக்பர் அரசராக முடிசூட்டப் பெற்றார்.
- அக்பர் சிறுவனாக இருந்ததால், பைராம்கான் பகர ஆளுநர் பொறுப்பேற்று அக்பர் சார்பாக ஆட்சி புரிந்தார்.
- சூர் வம்சத்தைச் சேர்ந்த ஹெமு என்னும் தளபதி 1556-ல் டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றிக் கொண்டார்.
- அதே ஆண்டில் பைராம்கான் பானிப்பட் போர்க்களத்தில் (இரண்டாம் பானிப்பட் போர் 1556) ஹெமுவைத் தோற்கடித்துக் கொன்றார். அவருடைய தூண்டுதலின் காரணமாக பைராம்கான் குஜராத்தில் கொல்லப்பட்டார்.
- இதனால், அக்பரால் அரசை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிந்தது. படையெடுப்பின் மூலமாகவும் நட்புறவின் மூலமாகவும் அக்பர் இந்தியாவின் பெரும் பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
பெண் ஆட்சியாளர்களின்மீது படையெடுப்பு:
- அக்பர் மாளவத்தையும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளையும் கைப்பற்றினார்.
- மத்திய இந்தியப் பகுதியைச் சேர்ந்த ராணி துர்க்காவதியை பாபர் தோற்கடித்தார்.
- தென்னிந்தியாவில் அகமது நகர் அரசின் பகர ஆட்சியாளராக இருந்த புகழ்பெற்ற ராணி சந்த் பீவியின் மீதும் அக்பர் படையெடுத்தார்.
- ராணியார் காட்டிய வலுவான எதிர்ப்பால் பெரிதும் வியந்துபோன முகலாயப்படை,
அவ்வம்மையார்க்குச் சாதகமாக அமைதி உடன்படிக்கை செய்து கொண்டது.
ஹால்டிகாட் போர்:
-
மேவார் அரசரான ராணா உதய்சிங்கை அக்பர் தோற்கடித்து 1568-ல் சித்தூரையும் 1569-ல் ராந்தம்பூரையும் கைப்பற்றினார்.
1576-ல் உதய் சிங்கின் மகனான ராணா பிரதாப்பை ஹால்டிகாட் போரில் வெற்றி கொண்டார். -
தோல்வியுற்ற போதிலும் சேத்தக் என்னும் தமது குதிரையில் தப்பிய பிரதாப்சிங் காட்டில் இருந்தவாறே போரைத் தொடர்ந்தார்.
-
துணிச்சல் மிகுந்த இந்த ராஜபுத்திரர்களின் நினைவுகள் ராஜபுதனத்தில் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.
அரேபியா, தென்கிழக்காசியா, சீனாவுடன்
வாணிகத் தொடர்பு:
-
குஜராத்தை அக்பர் கைப்பற்றிய நிகழ்வு குஜராத் கடல்பகுதியில் வாணிகம் மேற்கொண்டிருந்த அரேபியரையும், ஐரோப்பியரையும் தமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வர உதவியது.
-
கிழக்கே வங்காளம், பீகார், ஒடிசா ஆகியவை மீது அக்பர் மேற்கொண்ட படையெடுப்புகள் தென்கிழக்கு ஆசியாவுடனும், சீனாவுடனும் தொடர்பு ஏற்பட உதவியது.
-
வடமேற்குப் படையெடுப்புகள்:
நாடுகளைக் கைப்பற்றும் நோக்கில் அக்பர்
மேற்கொண்ட படையெடுப்புகளில் முக்கியமானவை -
இதன்மூலம் அக்பர் காண்டகார், காஷ்மீர், காபூல் ஆகியவற்றைப் பேரரசுடன் இணைத்தார்.
-
தக்காணத்தில் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகள் பீரார், காண்டேஷ், அகமது
நகரின் சில பகுதிகள் இணைக்கப்படுவதற்கு இட்டுச் சென்றது. -
வடக்கே காஷ்மீர், தெற்கே கோதாவரி, மேற்கே காண்டகார், கிழக்கே வங்காளம் ஆகியவற்றுக்கிடையே முகலாயப் பேரரசு பரந்து விரிந்திருந்தது.
-
1605-ல் அக்பர் இயற்கை எய்தினார். அவருடைய உடல் ஆக்ராவுக்கு அருகே சிக்கந்தராவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அக்பரின் கொள்கை:
- முஸ்லிம்கள் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரியையும், இந்துப் பயணிகளின் மீது விதிக்கப்பட்டிருந்த வரிகளையும் நீக்கினார்.
- பேரரசின் உயர் பதவிகளில் ரஜபுத்திரப் பிரப்புக்களைப் பணியமர்த்தினார்.
- ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜா மான்சிங் ஒருமுறை காபூலின் ஆளுநராக அனுப்பி வைக்கப்பட்டார்.
- அக்பர் அனைத்து மதங்களைச் சார்ந்தோரையும் சமமாகவும் பெருந்தன்மையோடும் நடத்தினார்.
- சூபி துறவியான சலீம் சிஸ்டியும், சீக்கிய குருவான ராம்தாசும் அக்பரின் அளவில்லா மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருந்தனர்.
- குரு ராம்தாசுக்கு அமிர்தசரசில் அக்பர் பரிசாக வழங்கிய இடத்தில்தான் பின்னர் ஹர்மிந்தர் சாகிப் கருவறை கட்டப்பட்டது.
- புதிய நகரான பதேப்பூர் சிக்ரியில் அக்பரால் கட்டப்பெற்ற இபாதத்கானா என்னும் மண்டபத்தில் அனைத்து மதங்களின் அறிஞர்களும் ஒன்றுகூடி உரையாடினர்.
பண்பாட்டுப் பங்களிப்பு:
- சொந்த நூலகத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன.
- அபுல்பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரகீம் கான்-இ- கான் ஆகிய நூலாசிரியர்கள் சிறந்த கதை ஆசிரியரான பீர்பால், திறமையான அதிகாரிகளான ராஜா தோடர்மால், ராஜா பகவன்தாஸ், ராஜா மான்சிங் ஆகியோர் அக்பரின் அவையில் இடம்பெற்றிருந்தனர்.
- பாடலாசிரியரும் இசை மேதையுமான தான்சென் ஓவியர் தஷ்வந் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்தனர்.
[[ஜஹாங்கீர்]] (1605-1627):
-
இளவரசர் சலீம் நூருதீன் முகமது ஜஹாங்கீர் என்ற பெயரில் மகுடம் சூடினார்.
-
அரசாட்சியைக் காட்டிலும் கலைகள் மீது அவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் ஜஹாங்கீரின் மனைவியார் நூர்ஜகான் என அறியப்பட்ட மெகருன்னிசா உண்மையான அதிகாரத்தைப் பெற்றவராகத் திகழ்ந்தார்.
-
அக்பர் காலத்துச் சமய சகிப்புத் தன்மை
ஜஹாங்கீர் காலத்திலும் தொடர்ந்தது. -
தமக்கு எதிராக அரியணையைக் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு கலகம் விளைவித்த தமது மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தலைவர் குரு அர்ஜூன் சிங்கைத் தூக்கிலிடும்படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.
-
இதன் விளைவாக முகலாயருக்கும் சீக்கியருக்கும் இடையே நெடுநாள் போர்கள் நடைபெற்றன. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான், பாரசீகம், மத்திய ஆசியா ஆகிய பகுதிகளுக்கான வணிகப் பாதைகளின் மீதான தங்கள் கட்டுப்பாட்டை முகலாயர் இழக்க நேர்ந்தது.
-
ஜஹாங்கீர் அகமதுநகரைக் கைப்பற்றிய போதிலும், அது அவருடைய ஆட்சிகாலம் முழுவதும் பிரச்சனைக்குரியதாகவே இருந்தது.
-
ஜஹாங்கீர் போர்த்துக்கீசியருக்கும் பின்னர் ஆங்கிலேயருக்கும் வணிக உரிமைகளை வழங்கினார்.
-
இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸின் பிரதிநிதியான தாமஸ்ரோ ஜஹாங்கீரின் அரசவைக்கு வருகை புரிந்தார். இவரின் அனுமதி பெற்று தங்களின் முதல் வணிக மையத்தை சூரத்தில் நிறுவினார்.
[[ஷாஜகான்]] (1627-1658):
- ஜஹாங்கீரைத் தொடர்ந்து, இளவரசர் குர்ரம் ஒரு அதிகாரப் போராட்டத்திற்குப் பின்னர் ஷாஜகான்(உலகத்தின் அரசர்) என்ற பெயருடன் அரசராக ஆட்சிப் பொறுப்பேற்றார்.
- அகமது நகருக்கு எதிராகப் படையெடுத்த அவர் 1632-ல் அதை இணைத்துக் கொண்டார்.
- பீஜப்பூரும் கோல்கொண்டாவும் கைப்பற்றப்பட்டன.
- மராத்திய போர்த் தளபதிகள் குறிப்பாக ஷாஜி பான்ஸ்லே (சிவாஜியின் தந்தை) போன்றோர் தக்காண அரசர்களிடம் பணியில் சேர்ந்தனர். இவர்கள் மராத்திய வீரர்களைக் கொண்ட அணிகளுக்குப் பயிற்சியளித்து முகலாயர்களுக்கு எதிராகப் போரிடச் செய்தனர்.
- இதனால், தக்காணத்தில் மராத்தியர்களையும் சேர்த்து முகலாயர்களுக்கு எதிராக ஒரு நீண்ட நெடிய எதிர்ப்பு உருவாகியது.
- சமய விடயங்களில் ஷாஜகான் சகிப்புத்தன்மை அற்றவராக விளங்கினார்.
- இவருடைய ஆட்சிக் காலத்தில் முகலாயரின் புகழ் அதன் உச்சத்தை எட்டியது.
- 1657-ல் ஷாஜகான் நோய்வாய்ப்பட்டதை தொடர்ந்து அவருடைய நான்கு மைந்தர்களுக்குள் வாரிசு உரிமை போர் வெடித்தது.
- மூன்று சகோதரர்களான தாரா, சூஜா, முராத் ஆகியோரைக் கொன்று ஔரங்கசீப் வெற்றி பெற்றார்.
- தம் வாழ்நாளின் இறுதி எட்டு ஆண்டுகளில் ஷாஜகான் ஒரு கைதியாக ஆக்ரா கோட்டையிலுள்ள ஷாபர்ஜ் அரண்மனையில் கழித்தார்.
[[ஔரங்கசீப்]] (1658 -1707):
- முகலாய மாமன்னர்களில் கடைசி அரசரான ஔரங்கசீப் தம் தந்தையைச் சிறைப்படுத்தி ஆட்சியைத் தொடங்கினார்.
- ஆலம்கிர் என்னும் பட்டத்தை சூட்டிக் கொண்டார்.
- இந்துக்களின் மீது மீண்டும் ஜிசியா வரியை விதித்தார். இந்துக்களை அரசுப் பணிகளில் அமர்த்துவதைத் தவிர்த்தார்.
- 1658-1681க்கு இடைப்பட்ட காலத்தில் வட இந்தியாவிலிருந்த ஔரங்கசீப் பண்டேலர்கள், சீக்கியர்கள், ஜாட்டுகள் சாத்னாமியர்கள் ஆகியோரின் கலகங்களை அடக்கினார்.
- வடகிழக்கில் அவர்மேற்கொண்ட விரிவாக்க நடவடிக்கைகள் காமரூபாவைச் (அஸ்ஸாம்) சேர்ந்த ஆகோம் அரசுடன் போர் ஏற்படக்
காரணமாயிற்று.
ராஜபுத்திரர் மற்றும் மராத்தியருடன் கொண்டிருந்த உறவு:
- ஔரங்கசீப் ராஜபுத்திரர்களின் மீது கொண்டிருந்த பகைமை அவர்களுடன் நெடுங்காலப் போருக்கு வழிவகுத்தது.
- தக்காணத்தில் இளவரசர் அக்பர் சிவாஜியின் மகன் சாம்பாஜியுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார்.
- இதனால் 1689-ல் ஔரங்கசீப் தக்காணம் செல்ல நேர்ந்தது.
- தக்காணத்தில் ஔரங்கசீப் பீஜப்பூர், கோல்கொண்டா அரசுகளைப் பணிய வைத்தார்.
- தமக்கென ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்ட சிவாஜி 1674-ல் தம்மை மராத்திய நாட்டின் பேரரசராக அறிவித்தார்.
- தென்மேற்கில் சிவாஜியின் எழுச்சியை ஔரங்கசீப்பால் தடுக்க இயலவில்லை. ஆனால் அவரால் சிவாஜியின் மைந்தரான, பட்டத்து இளவரசர் சாம்பாஜியைக் கைது செய்து சித்திரவதை செய்து கொலை செய்தார்.
- தம்முடைய 96 வயதில் 1707-ல் மரணத்தைத் தழுவுகின்றவரை ஔரங்கசீப் தக்காணத்திலேயே தங்கியிருந்தார்.
- ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் ஆங்கிலேயர்கள் மதராஸ் (சென்னை), கல்கத்தா (கொல்கத்தா), பம்பாய் (மும்பை) ஆகிய இடங்களில் தங்கள் வணிக மையங்களை நிறுவினர்.
- பிரெஞ்சுக்காரர்கள் தங்களின் முதன்மை வணிக மையத்தைப் பாண்டிச்சேரியில் நிறுவினர்.
முகலாயர் நிர்வாகம்:
மைய நிர்வாகம்:
-
முகலாய நிர்வாகக் கட்டமைப்பின் உச்ச உயர்நிலைத் தலைவர் பேரரசரே ஆவார்.
சட்டங்களையும் இயற்றுபவராகவும், அவற்றை செயல்படுத்துவராகவும் திகழ்ந்தார். அவரே படைகளின் தலைமைத் தளபதி, அவரே நீதி வழங்குபவரும் ஆவார். -
அவருக்கு அமைச்சர் குழுவொன்று உதவியது. அக்குழுவில் இடம்பெற்றிருந்த மிக முக்கிய அதிகாரிகள் பின்வருமாறு: வக்கீல் (பிரதம மந்திரி) வஜீர் அல்லது திவான் (வருவாய்த் துறை மற்றும் செலவுகள்) மீர்பாக்க்ஷி இராணுவத்துறை அமைச்சராவார். மீர்சமான் அரண்மனை நிர்வாகத்தை கவனித்தார்.
-
குவாஜி தலைமை நீதிபதியாவார். சதா-உஸ்-சுதூர் இஸ்லாமியச் சட்டங்களை (சாரியா) நடைமுறைப்படுத்தினார்.
மாகாண நிர்வாகம்:
- பேரரசு பல சுபாக்களாகப் (மாகாணங்கள்/ மாநிலங்கள்) பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சுபாவும் “சுபேதார்” என்னும் அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்தது.
- ஒவ்வொரு சுபாவும் பல சர்க்கார்களாகப் (மாவட்டங்கள்) பிரிக்கப்பட்டிருந்தன.
- சர்க்கார் பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
- பல கிராமங்களை உள்ளடக்கிய பிரிவே பர்கானாவாகும்.
உள்ளாட்சி நிர்வாகம்:
- நகரங்களும் பெருநகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டன.
- கொத்தவால் சட்டம் ஒழுங்கைப் பராமரித்தார்.
- கிராம நிர்வாகம் கிராமப் பஞ்சாயத்துகளிடம் வழங்கப்பட்டிருந்தது. பஞ்சாயத்து உறுப்பினர்கள் தீர்ப்புகளை வழங்கினர்.
படை நிர்வாகம்:
-
முகலாய இராணுவமானது காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, பீரங்கிப்படை
ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தன. -
அரசர் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, சிறப்பு வாய்ந்த ஆயுதங்களை ஏந்திய எண்ணிக்கையிலும் அதிகமான பாதுகாப்பு வீரர்களையும், அரண்மனைக் காவலர்களாகவும் பராமரித்தார்.
மன்சப்தாரி முறை:
-
மன்சப்தாரி முறையை அக்பர் அறிமுகம் செய்தார். இம்முறையின் கீழ் பிரபுக்கள், ராணுவ அதிகாரிகள், குடிமைப் பணி அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே பணியாக மாற்றப்பட்டன.
-
இப்பணியிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு
மன்சப்(படிநிலை, தகுதி அந்தஸ்து) வழங்கப்பட்டது. அப்படியான தகுதியைப் பெற்றவர் மன்சப்தார் ஆவார். -
மன்சப்தார் சாட், சவார் எனும் இரு விடயங்களைச் சார்ந்திருந்தன. சாட் என்பது அவரது தகுதியைக் குறிப்பதாகும்.
சவார் என்பது ஒரு மன்சப்தார் பராமரிக்க
வேண்டிய குதிரைகள், குதிரை வீரர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். -
மன்சப்தாரின் ஊதியமானது அவரால் பராமரிக்கப்படும் குதிரைகளின் எண்ணிக்கையைப் (10 முதல் 10,000 வரை) பொறுத்திருந்தது.
-
பேரரசர் மன்சப்தார்களுக்கு உயர்ந்த ஊதியம் வழங்கினார். ஊதியம் பெறுவதற்கு முன்னர் நடைபெறும் மேற்பார்வையின்போது, மன்சப்தார் தமது குதிரை வீரர்களைக் காட்சிப்படுத்த
வேண்டும். -
திருட்டைத் தவிர்ப்பதற்காகக் குதிரைகளுக்கு முத்திரையிடும்முறை பின்பற்றப்பட்டது. மன்சப்தாரால் பராமரிக்கப்படும் படைகளை அரசர்
தமது விருப்பத்தின்படி பயன்படுத்தலாம். -
அக்பருடைய ஆட்சிக் காலத்தில் மன்சப்தார் பதவி பரம்பரை உரிமை சார்ந்ததாக இல்லை. அவருக்குப் பின்னர், அது பரம்பரை உரிமை சார்ந்த பணியானது.
நிலவருவாய் நிர்வாகம்:
-
அக்பரின் ஆட்சியின்போது நிலவருவாய் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சரான ராஜா தோடர்மால் ஹெர்ஷா அறிமுகம் செய்த முறையைப் பின்பற்றினார்.
-
தோடர்மாலின் ஜப்த் முறை வடக்கு, வடமேற்கு மாகாணங்களில் நடைமுறைபடுத்தப்பட்டது.
-
இம்முறையின் படி நிலங்கள் அளவை செய்யப்பட்டு அவற்றில் இயல்புக்கும்
வளத்திற்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டன. -
பத்தாண்டு காலத்திற்குச் சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு (1/3) அரசுக்கு வரியாகச் செலுத்தப்பட வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது.
-
ஷாஜகானின் காலத்தில் ஜப்த் அல்லது ஜப்தி எனும் இம்முறை தக்காண மாகாணங்களுக்கும் நீடிக்கப்பெற்றது.
-
முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை ஜாகீர் எனப் புதிய பெயரிட்டுச் செயல்படுத்தினர்.
-
இந்நிலவுரிமை ஒப்பந்த காலமுறை டெல்லி
சுல்தான்களின் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதாகும்.
இம்முறையின் கீழ் குறிப்பிட்ட ஒரு பகுதியில் நிலவரி வசூல் செய்யும் பொறுப்பும் அப்பகுதியை அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிர்வகிக்கும் பொறுப்பும் ராணுவ அல்லது சிவில்
-
இவருடைய தற்போதைய பெயர் ஜாகீர்தார் ஆகும்.
-
தங்களது ஊதியத்தைப் பணமாகப் பெறாத
ஒவ்வொரு மன்சப்தாரும் ஜாகீர்தார் ஆவார். -
ஜாகீர்தார் தம் அதிகாரிகள் மூலம் நிலவரியை வசூல் செய்தார். மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரி அமில் குஜார் ஆவார். அவருக்குப் பொட்டாதார், கனுங்கோ, பட்வாரி, முக்காதம் போன்ற துணைநிலை அதிகாரிகள் உதவி செய்தனர்.
ஜமீன்தாரி முறை:
- நில உரிமையாளர்களிடமிருந்து நிலவரியை வசூலிக்கப் பணியமர்த்தப்பட்டவர்களே ஜமீன்தார்கள் ஆவர்.
- ஜமீன்தார்கள் முகலாய அதிகாரிகள், படைவீரர்கள் ஆகியோரின் உதவியுடன் நிலவரியை வசூல் செய்தனர்.
- சட்டம், ஒழுங்கு, அமைதி ஆகியவற்றையும் பாதுகாத்தனர். உள்ளூர் அளவிலான தலைவர்களும் சிற்றரசர்களும் ஜமீன்தார்கள் என்றே அழைக்கப்பட்டனர்.
- பதினாராம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜமீன்தார்களுக்குத் தங்களது ஜமீன் பகுதிகளின் மீது பரம்பரை உரிமை வழங்கப்பட்டது.
- வரிவசூல் பணிகளைச் செய்வதற்காகப் படைகளைவைத்துக் கொள்ளும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
- அறிஞர்களுக்கும், இறைப்பணியில் ஈடுப்பட்டுள்ள பெரியோர்க்கும், சமயம் சார்ந்த நிறுவனங்களுக்கும் அரசர் நிலங்களை வழங்கினார்.
- வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்நிலங்கள் சுயயூர்கள் என்றழைக்கப்பட்டன.
சமயக் கொள்கை:
- அக்பர் அனைத்து மதங்களிலுள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்துத் தீன்-இலாகி என்னும் ஒரே சமயத்தை உருவாக்க முயன்றார். அக்பருடைய கொள்கையை ஜஹாங்கீரும் ஷாஜகானும் பின்பற்றினர்.
- ஔரங்கசீப் தம்முடைய முன்னோர்களின் தாராளக் கொள்கையை மறுத்தார்.
கலை, கட்டடக்கலை:
- பாபர், பாரசீகக் கட்டட முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி ஆக்ரா, ப்யானா, டோலாப்பூர், குவாலியர் மற்றும் க்யூல் போன்ற பகுதிகளில் கட்டடங்களைக் கட்டினார்.
- ஹூமாயூனின் டெல்லி அரண்மனை, “தீன்-இ- பானா”. இது பின்னாளில் ஷெர்ஷாவினால் இடிக்கப்பட்டிருக்கக் கூடும் என அறியப்படுகிறது. அவ்விடத்தில் ஷெர்சா, புரான கிலாவைக் கட்டினார்.
- ஷெர்சாவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மிக முக்கியமான நினைவுச் சின்னம் பீகாரில் சசாரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள கல்லறை மாடமாகும்.
- திவான்-இ-காஸ், திவான்-இ-ஆம், பஞ்ச் மஹால் (பிரமிடு வடிவிலான ஐந்து அடுக்குக் கட்டடம்), ரங் மஹால், சலீம் சிஸ்டியின் கல்லறை, புலந்தர்வாசா ஆகியவை அக்பரால் கட்டப்பட்டவையாகும்.
- சிக்கந்தராவிலுள்ள அக்பரின் கல்லறை கட்டடப் பணிகளை ஜஹாங்கீர் நிறைவு செய்தார்.
- மேலும், ஆக்ராவில் நூர்ஜகானின் தந்தையான இம்மத்- உத்-தௌலாவின் கல்லறையையும் கட்டினார்.
- ஷாஜகான் காலத்தில் விலையுயர்ந்த நவரத்தினத் கற்கள் பதிக்கப்பெற்ற மயிலாசனம் தயாரிக்கப்பட்டது.
- யமுனை நதிக்கரையில் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் எழுப்பப்பட்டது.
- ஆக்ராவிலுள்ள முத்து மசூதி, டெல்லியிலுள்ள மிகப்பெரிய ஜூம்மா மசூதி ஆகியவை ஷாஜகானால் கட்டப்பட்டவையாகும்.
- ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் கட்டடக்கலை பெரிய அளவிலான ஆதரவைப் பெறவில்லை.
- ஔரங்கசீப்பின் மகன் ஆஜாம் ஷாவால் தம் தாயின் அன்பைப் போற்றும் வகையில்
ஔரங்கபாத்தில் கட்டப்பட்ட பிபிகா மக்பாரா என்னும் கல்லறை மாடம் குறிப்பிடத்தக்கதாகும்.
செங்கோட்டை:
- லால் குய்லா என்று அழைக்கப்படும் டெல்லியிலுள்ள “செங்கோட்டை” முகலாயப் பேரரசர்களின் வாழ்விடமாகும்.
- இது 1639-ல் பேரரசர் ஷாஜகானால் மதில்களால் சூழப்பெற்ற தனது தலைநகர் ஷாஜகானாபாத்தில் கட்டப்பட்ட அரண்மனையாகும்.
- இக்கோட்டை சிவப்புநிறக் கற்களால் கட்டப்பட்டுள்ளதால் இது செங்கோட்டை என அழைக்கப்படுகிறது.