([[இரா.பி.சே]]) சிலம்புச் செல்வர்
சிற்றக்கல் ஒளி
[[தமிழ்/தமிழ் இலக்கியம்/எழுத்தாளர்கள்/மா.பொ.சி]]
- பெற்றோர் இட்டப்பெயர் ‘ஞானப்பிரகாசம்’
- 1952-54 சட்டமன்ற மேலவை உறுப்பினர்
- 1972-78 சட்டமன்ற மேலவைத் தலைவர்
- பொன்னுசாமி - சிவகாமி இணையரின் மகன்
- தமிழரசுக் கழகம்
நூல்கள்
- எனது போராட்டம் - Biography
- வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு 1966 சாகித்திய அகாதமி
- கப்பலோட்டிய தமிழன்
பாடப் பகுதி - எனது போராட்டம்
-
1906 - காந்தியடிகள் சத்தியாக்கிரகமை தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைத்தார்.
-
வ.உ.சிதம்பரனார் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய ஆண்டு - 1906
-
ம.பொ.சிவஞானம் அவர்கள் 1906 ஜூன் 26 ஆம் நாள் சென்னை ஆயிரம் விளக்கில் சால்வன் குப்பம் என்னும் பகுதியில் பிறந்தார்.
-
ம.பொ.சிவஞானம் அவர்களது கேள்வி ஞானத்தைப் பெருக்கியதில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுக்கு மிகுந்த பங்குண்டு.
-
காந்தி-இர்வின்ஒப்பந்தம்நடைபெற்ற ஆண்டு 1931
-
1942 ஆகஸ்டு 8 ஆம் நாள், ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி ஒரு மனதாக நிறைவேற்றியது.
-
இந்தியா விடுதலை அடைந்து மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்கும் போது ஆந்திரத் தலைவர்கள் சித்தூர் மாவட்டம் முழுவதையும் புதிதாக அமையவிருக்கும் ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினார். அச்சூழலில் வடக்கெல்லைத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர் - தமிழாசான் மங்கலங்கிழார்.
-
சர்தார் கே.எம்.பணிக்கர் - மொழிவாரி ஆணையம்- மத்திய அரசு
-
சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்கு கொடுத்துவிட்டது. இதனால் போராட்டம் வெடித்தது. ‘==மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது வேண்டும்==.’ என்று முழங்கினர்.
-
‘படாஸ்கர்ஆணையம்’ அமைக்கப்பட்டு திருத்தணி வரையுள்ள தமிழ்நிலங்கள் மீட்கப்பட்டன.
-
சென்னை மாகணத்திலிருந்து பிரிந்து ஆந்திரம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த ஒரு நபர் ஆணையம் - நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஆணையம்.
-
சென்னையை தமிழகத்திற்குத்தான் தர வேண்டும் என்று மாநகராட்சியின் சிறப்புக் கூட்டமொன்றை அப்போதைய மாநகரத் தந்தை ‘==செங்கல்வராயன்==’ தலைமையில் கூட்டி, சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து, ‘==தலையைக் கொடுத்தேனும், தலைநகரைக் காப்போம்’ என்று முழங்கியவர்== - ம.பொ.சிவஞானம் அவர்கள்
-
25.03.1953 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு நடுவணரசின் சார்பில் அதிகாரப்பூர்வமான உறுதிமொழியொன்றை வெளியிட்டார். அதன்படி ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளேயே அமையும் என்று உறுதியளிக்கப்பட்டது. சென்னை தமிழருக்கே என்பதும் உறுதியானது.
-
ம.பொ.சிவஞானம் அவர்கள் முதன்முதலில் ஈடுபட்டது தெற்கெல்லை கிளர்ச்சியில் தான். இவர் தெற்கெல்லைப் பகுதிகளை கேரள (திருவிதாங்கூர்) முடியாட்சியிலிருந்து மீட்க போராடினார்.
-
தெற்கெல்லை கிளர்ச்சியில் திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக உயிர் நீத்தவர்கள் - தேவசகாயம், செல்லையா
-
‘நேசமணி ’ என்பவர் தென் திருவிதாங்கூரில் மிகுந்த செல்வாக்குடையவர். இவருடைய வருகைக்குப் பிறகு தெற்கெல்லைப் போராட்டம் வலுப்பெற்றது.
-
இளம்வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்; வழக்கறிஞர்.
-
நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
-
குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்; இதனால் மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டார்.
-
1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது. இவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.
-
திருவிதாங்கூர் ஆட்சி அகன்று கேரள மாநிலம் உருவானது. அப்போது தமிழர்கள் மிகுதியாக வாழக்கூடிய தேவிக்குளம், பீர்மேடு, தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நாகர்கோவில் ஆகிய பகுதிகள் தமிழகத்தோடு சேர வேண்டும் என்று தமிழரசுக் கழகம் போராட்டத்தைத் தொடங்கியது.
-
திருவிதாங்கூர் ஆட்சி அகன்று, கேரள மாநிலம் உருவானது.
-
அப்போது தமிழர்கள் மிகுதியாக வாழக்கூடிய தேவிகுளம், பீர்மேடு. தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நாகர்கோவில் ஆகிய பகுதிகள் தமிழகத்தோடு சேர வேண்டும் என்று தமிழரசுக் கழகம் போராட்டத்தைத் தொடங்கியது.
-
ஆனால் மேற்சொன்ன பகுதிகளோடு தமிழகத்திலிருந்த கோவை மாவட்டத்தின் மேற்குப்பகுதி, நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர், உதகமண்டலம் ஆகியவற்றையும் பிரித்தெடுத்துக் கேரளத்துடன் இணைக்க வேண்டுமென்று கேரளத்தவர். பசல் அலி ஆணையத்திடம் விண்ணப்பித்தனர்.
-
பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை 1955 அக்டோபர் 10ஆம் நாள் வெளியானது. அந்தப் பரிந்துரையில், மாநிலங்களை மொழிவாரியாகப் பிரித்து அமைக்கும் கொள்கை ஒப்புக்கொள்ளப்பட்டதோடு சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும் திருவிதாங்கூர் கொச்சி இராஜ்யத்திலிருந்த கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகத்தீசுவரம். செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டோடும் இணைய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
-
தேவிகுளம், பீர்மேடு நம் கைவிட்டுப் போயின.
-
==புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கட மலையாகவும் தெற்கெல்லை குமரிமுனையாகவும் கூறப்படுவதனைப் படித்தபோது எனது நெஞ்சம் இறும்பூது எய்தியது.==
-
மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக அமைவதென்பது அந்த நாட்டின் தவப்பயனாகும்.
-
இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து. எனவேதான் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினோம்.‘என்று கூறியவர் - ‘சிலம்புச்செல்வர் ம.பொ.சி’
மாலவந் குன்றம் போனாலென்ன? வேலவன்
குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ என்பதில் மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே -திருப்பதியும் திருத்தணியும்