-
பேராசிரியர் மா.சு.அண்ணாமலை: “இந்திய தேசிய இராணுவம் தமிழர் பங்கு” என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசுபெற்றவர்.
-
இவர் தலைமையில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் சர்வதேச அளவில் பரிசுகள் பெற்றன.
-
1942ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள், ஆங்கிலேயப் படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்தன.
-
சரணடைந்த அவ்வீரர்களைக் கொண்டு ஜப்பானியர்கள், மோகன்சிங் என்பவரின் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ.) என்ற படையை உருவாக்கினர்.
-
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க, 91நாள்கள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார்.
-
1943ஆம் ஆண்டு சூலை மாதம் 9ஆம் நாள் பதவியேற்றார்.
-
அவர் உரையாற்றிய மாபெரும் கூட்டத்தில் “டெல்லி நோக்கிச் செல்லுங்கள்”(டெல்லி சலோ) எனப் போர்முழக்கம் செய்தார்.
-
தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர் பசும்பொன் முத்துராமலிங்கனார்.
-
==நேதாஜி தமிழ் வீரர்களைப் பாராட்டி நான்மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்.==- பசும்பொன் முத்துராமலிங்கனார்
-
இந்திய தேசிய இராணுவ படைத்தலைவர் இருந்த தில்லான், ”==இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்==” என்றார்
-
இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
அந்த 45பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.
-
பர்மாவில் இருந்து காட்டுவழியாகப் பயணம் செய்து, சயாம் மரண ரயில் பாதையைக் கடந்து, முடிவில் ஜப்பானின் “கியூசு” தீவை அடைந்தனர். – பசும்பொன் மடல், மடல் 32, இதழ் 8,சனவரி 2018, ப.14-16
மகளிர் படை உருவாக்கம்
- பெண்கள் படை - ஜான்சிராணி
- தலைவர் டாக்டர் லட்சுமி.
- ஜானகி , இராஜாமணி - தமிழ்ப் பெண்கள்
- நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் லட்சுமி, சிதம்பரம் லோகநாதன் முதலான தமிழர்கள் அமைச்சர்கள்.
- சிறந்த வீரர்களை உருவாக்க நேதாஜி 45 இளைஞர்களை டோக்கியோ அனுப்பினார். அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அதில் பயிற்சி பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கேப்டன் தாசன் ஆவார். அவர் பின்பு சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றினார்.
- மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது’ என்று சர்ச்சில் கூறினார். அதற்கு நேதாஜி இந்தத் தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று பதில் கூறினார்.
- அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப் பெரிய குற்றமாகும். நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும்.
- எந்த விலைகொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச்சிறந்த நற்குணமாகும்.
- மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள்.
- விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு, அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும்தான்.
- இந்திய தேசிய இராணுவம் 1944ஆம் ஆண்டு மார்ச் 18அன்று ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர்ப் பகுதியில் ‘மொய்ராங்’ என்ற இடத்தில் மூவண்ணக் கொடியை
- இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த பதினெட்டு இளைஞர்கள், 1943- 45ஆம் ஆண்டுகளில் சென்னைச் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
- 1944ஆம் ஆண்டு பதினெட்டே வயதான இராமு என்பவர் தூக்கிலிடப்பட்டார்
- மரணதண்டனை பெற்ற அப்துல்காதர் பின்வருமாறு கூறினார்.
”வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்”.