- ஷாஜகானின் ஆட்சிக் காலத்திலேயே சிவாஜியின் தந்தையும் அகமதுநகர், பீஜப்பூர் ஆகிய அரசுகளில் அதிகாரியாகப் பணியாற்றியவருமான ஷாஜிபான்ஸ்லே பல இடையூறுகளைச் செய்தார்.
- அவருடைய மகனான சிவாஜியே மராத்தியத்தியருக்குப் புகழ் சேர்த்தார்.
- மனஉறுதி மிக்க மலைவாழ் மக்கள் அணியொன்றை உருவாக்கினார்.
- அவர்களின் உதவியுடன் சிவாஜி பல கோட்டைகளைக் கைப்பற்றினார்.
- னதக்காணம் முழுவதிலும் மராத்தியர்கள் சௌத், சர்தேஷ்முகி ஆகிய வரிகளை வசூலிக்கும் உரிமையை முகலாயர்கள் அங்கீகரிக்க வேண்டியதாயிற்று.
- பேஷ்வாக்கள் என்றழைக்கப்பட்ட மராத்திய அரசர்களின் பிரதம அமைச்சர்கள் ஷாகுவின் காலம் முதல் உண்மையான அதிகாரம் உடையவர்களாயினர்.
- அவர்களின் ஆதரவில் 1761 வரை மராத்தியர் தங்கள் மேலாதிக்கத்தைத் தொடர்ந்தனர்.
மாராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள்:
புவியியல் கூறுகள்:
- பாறைகளும், குன்றுகளும் அடங்கிய நிலப்பகுதி பாதுகாப்பளித்தது. மேலும், கொரில்லாப் போர் (மறைந்திருந்து தாக்குதல்) முறைக்கு உகந்ததாய் விளங்கியது.
பக்தி இயக்கமும், மராத்தியரும்:
-
மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம்,
மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும்
இணக்கமும் ஏற்பட உதவியது. -
பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பெரியோர்களில் ஏக்நாத், துக்காராம், ராம்தாஸ் ஆகியோர்
குறிப்பிடத்தக்கோர் ஆவார். -
மராத்தியரின் மொழியும், இலக்கியமும்:
மரத்தியரிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் மராத்திய மொழியும், இலக்கியமும் உதவி செய்தன. -
பக்தி இயக்கப் பெரியோர்கள், மராத்திய மொழியில் இயற்றிய பாடல்களைத் தொகுத்தனர். அப்பாடல்கள் அனைத்துச் சாதிகளையும், வர்க்கங்களையும் சேர்ந்த மக்களால் பாடப்பட்டிருந்தன.
சிவாஜி:
- 1627-ல் பிறந்த சிவாஜி, தன் தாயார் ஜீஜாபாயின் பாதுகாப்பில் வளர்ந்தார்.
- இராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கூறி சிவாஜிக்கு அவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.
- சிவாஜியின் ஆசிரியரும் குருவுமான தாதாஜி கொண்டதேவ் குதிரையேற்றம், போர்க்கலை, அரசு நிர்வாகம் ஆகியவற்றில் சிவாஜிக்குப் பயிற்சியளித்தார்.
- தனது பதினெட்டாவது வயதில் (1645) இராணுவப் பணியில் சேர்ந்தார்.
- புனேக்கு அருகில் இருந்த கோண்டுவானா கோட்டையைக் கைப்பற்றுவதில் சிவாஜி வெற்றி பெற்றார்.
- அடுத்த ஆண்டில் தோர்னா கோட்டையைக் கைப்பற்றினார்.
- தொடர்ந்து ரெய்கார் கோட்டையைக் கைப்பற்றி அதனைப் புனரமைத்தார்.
பீஜப்பூர் சுல்தானோடு போரிடுதல்:
- சிவாஜியின் பாதுகாவலரான தாதாஜி கொண்டதேவ் 1649-ல் இயற்கை எய்தியதால்
- சிவாஜி முழுமையான சுதந்திரம் பெற்றவரானார்.
- மாவலி காலாட்படை வீரர்களே, அவருடைய படையின் வலிமையாகத் திகழ்ந்தனர்.
- அவர்களின் உதவியுடன் சிவாஜி புனேவுக்கு அருகேயிருந்த பல கோட்டைகளைக் கைப்பற்றினார்.
- முகலாயர் வசமிருந்த புரந்தர் கோட்டையையும் சிவாஜி கைப்பற்றினார்.
- சிவாஜியின் இராணுவ நடவடிக்கைகள் பீஜப்பூர் சுல்தானைச் சினங்கொள்ளச் செய்தன.
மராத்தியர் ஆதிக்கத்தை நிலைநாட்டுதல்:
-
தந்தையாரின் மறைவுக்கு பின்னர், தமது
இராணுவத் திடீர் தாக்குதல்களை மீண்டும் தொடங்கிய சிவாஜி, மராத்தியத் தலைவர் சந்திர ராவ் மோர் என்பவரிடமிருந்து ஜாவலியைக் (1656) கைப்பற்றினார். -
1659-ல் பீஜப்பூரின் குறிப்பிடத்தகுந்த தளபதியான அப்சல்கானைக் கொன்றார்.
-
1663-ல் ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்திக் துரத்தியடித்தார்.
-
1664-ல் அரபிக் கடற்கரையில் அமைந்திருந்த முகலாயரின் முக்கியத் துறைமுகமான சூரத் நகரை சூறையாடத் தமது படைகளை அனுப்பி
வைத்தார். -
சிவாஜி சூரத்தைக் கொள்ளையடித்த பின்னர், ஔரங்சீப் எதிர் நடவடிக்கைகளில் இறங்கினார்.
-
சிவாஜியை அழித்தொழிக்கவும், பீஜப்பூரை இணைக்கவும் ராஜா ஜெய்சிங் எனும் ராஜபுத்திரத் தளபதியின் தலைமையின் கீழ் முகலாயப் படையொன்று அனுப்பி வைக்கப்பட்டது.
-
தாம் கைப்பற்றிய கோட்டைகளைக் கொடுத்துவிடவும், முகலாய அரசின் மான்சப்தாராகப் பொறுப்பேற்றுப் பீஜப்பூரைக் கைப்பற்றவும் சம்மதித்தார்.
-
ராஜா ஜெய்சிங்கின் வழிகாட்டுதலின்படி ஆக்ராவின் முகலாய அரசவைக்குச் சென்ற போது, அவமானப்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
அப்போது, அங்கிருந்து பழக்கூடையில் ஒளிந்து தப்பித்தார்.
-
தக்காண அரசுகளுக்கு எதிரான தமது படையெடுப்புகளில் மராத்தியர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பதில் ஔரங்கசீப் உறுதியாய் இருந்தார்.
-
1670-ல் சிவாஜி இரண்டாவது முறையாகச் சூரத் நகரை கொள்ளையடித்தபோது முகலாயப் படைகளால் தடுக்க இயலவில்லை.
-
1674ல் சிவாஜி சத்ரபதி என்னும் பட்டத்துடன் மணிமுடி சூடிக் கொண்டார்.
சிவாஜியின் முடிசூட்டுவிழா ரெய்கார் கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது. -
சிவாஜி தமது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளைத் தம் மகன் சாம்பாஜியிடம் செலவிட்டார்.
-
சிவாஜி இறுதியில் நோய்வாய்ப்பட்டு வயிற்றுப் போக்கினாலும், காய்ச்சலினாலும் பாதிப்புற்று 1680-ல் இயற்கை எய்தினார்.
சிவாஜியின் கீழ் மராத்தியர் நிர்வாகம்:
-
சிவாஜியின் அரசியம் மூன்று வட்டங்களைக் கொண்டிருந்தது.
-
சிவாஜி அவற்றின் மையமாக விளங்கினார்.
முதல் வட்டத்தில் மக்களின் மீது அக்கறை கொண்ட இவர் எந்த வகையிலும் மக்கள் துன்புறுவதை அனுமதிப்பதில்லை.
கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத் (மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு (1/4), பாதுகாப்புக் கட்டணமாக) சர்தேஷ்முகி (பத்தில் ஒரு பங்கு (1/10) அரசருக்கான கட்டணமாக) ஆகிய வரிகளைச் செலுத்த வேண்டும். -
மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
-
கிராமங்கள் தேஷ்முக் என்பவர்களால்
நிர்வகிக்கப்பட்டது. -
இருபது முதல் நூறு
எண்ணிக்கை வரையிலான கிராமங்கள்
இவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தன. -
ஒவ்வொரு கிராமத்திலும் அதிகாரம் மிக்க ஒரு கிராமத் தலைவர் (பட்டீல்) இருந்தார். அவருக்கு உதவியாக ஒரு கணக்கரும் குல்கர்னி என்ற பெயரில் ஆவணக் காப்பாளர் ஒருவரும் பணியாற்றினர்.
-
மைய அரசு என்ற ஒன்று இல்லாத நேரத்தில்
உள்ளூர் சமுதாய அளவிலான இந்த அதிகாரிகளே உண்மையான அரசாகச் செயல்பட்டனர்.
இராணுவம்:
- தொடகத்தில் காலாட்படையே அவரது இராணுவத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தது. ஆனால் சிவாஜியின் படையெடுப்புகள் சமவெளிகளை நோக்கி நீட்சி பெற்றபோது குதிரைப் படைகள் எண்ணிக்கையில் பெருகி முக்கியத்துவமும் பெற்றன.
- ஒவ்வொரு படைவீரனும் சிவாஜியால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- தம்முடைய கோட்டைகளின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் சிவாஜி மிக முக்கிய கவனம் செலுத்தினார்.
- பணிநிறைவு பெற்ற மிகவும் போற்றப்பட்ட படைத்தளபதிகளின் பொறுப்பில் கோட்டைகள் விடப்பட்டன.
அஷ்டபிரதான்:
சிவாஜி எட்டு அமைச்சர்களைக் கொண்ட குழுவிற்கு அஷ்டபிரதான் எனப் பெயரிட்டார்.
- மராத்தியப் பேரரசில் பேஷ்வா என்பவர் நவீனகால பிரதமருக்கு இணையானவர். உண்மையில் இவர்கள் சத்திரபதிகளுக்குத் துணையதிகாரிகளாய் இருந்தவர்களாவர்.
- ஷாகு மகாராஜாவின் காலத்திலிருந்து பேஷ்வாக்கள் உண்மையான மராத்திய அரசர்களாயினர். சத்திரபதிகள் பெயரளவிற்கான அரசர்கள் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
- முகலாயரின் நிர்வாகமுறை சிவாஜியின் மீது செல்வாக்குச் செலுத்தியிருந்தது.
- நிலவரியானது உண்மையான விளைச்சலின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது. ஐந்தில் மூன்று பங்கு (3/5) விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டு ஐந்தில் இரண்டு பங்கு (2/5) அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
- நீதித்துறையில் சிவில் வழக்குகள் பஞ்சாயத்து எனப்படும் கிராமக் குழுக்களால் தீர்த்து வைக்கப்பட்டன.
- குற்றவியல் வழக்குகள் சாஸ்திரங்கள் எனப்பட்ட இந்து சட்ட நூல்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டன.
அஷ்டபிரதானின் பொறுப்புகள்:
• பந்த்பீரதான் / பேஷ்வா பிரதம அமைச்சர்
• அமத்தியா / மஜீம்தார் - நிதியமைச்சர்
• சுர்நாவிஸ் / சச்சீவ்-செயலர்
• வாக்கிய-நாவிஸ் - உள்துறை அமைச்சர்
• சர்-இ-நௌபத் / சேனாபதி தலைமைத் தளபதி
• சுமந்த் / துபிர் - வெளியுறவுத்துறை அமைச்சர்
• நியாயதிஸ் - தலைமை நீதிபதி
• பண்டிட்ராவ் தலைமை அர்ச்சகர்
சாம்பாஜி:
- சிவாஜியைத் தொடர்ந்து, அனாஜி தத்தோவுடனான சச்சரவிற்குப் பின்னர், சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.
- ஆகவே, குடும்பச் சண்டைகள் மராத்திய அரசில் சிராய்ப்புகளை ஏற்படுத்தின.
- 1861இல் ஔரங்கசீப் தானே தக்காணத்தை வந்தடைந்தார். பீஜப்பூரையும் கோல்கொண்டாவையும் கைப்பற்றி இணைப்பதே ஔரங்கசீப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.
- 1687 அவ்விரு சுல்தானியங்களும் ஔரங்கசீப்பிடம் வீழ்ந்தன.
- சாம்பாஜி, தம்முடைய குடும்ப அர்ச்சகரான கவிகலாஷ் என்பவரின் ஒழுக்கக்கேடான செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தார்.
- சிவாஜி ஆக்ராவிலிருந்து தப்பியபோது வாரணாசியில் கவிகலாஷ் சாம்பாஜியின் பாதுகாவலராய் இருந்தார். கவிகலாஷ் புகழ்பெற்ற அறிஞரும் கவிஞருமாவார்.
- முகலாயப் படைகள் சாம்பாஜியைக் கைது செய்தபோது கவிகலேஷூம் உடனிருந்தார். ஆகவே, இருவரும் ஔரங்கசீப்பின் கட்டளையின்படி அனைத்து வகைப்பட்ட சித்திரவதைகளுக்கும் கொல்லப்பட்டனர். உள்ளாக்கப்பட்டுக்
ஷாகு மகாராஜா:
- சிவாஜிக்குப் பின்னர், அவருடைய பேரன் ஷாகு 1708 முதல் 1749 வரை ஆட்சி புரிந்தார்.
- ஷாகு என்றால் நேர்மையானவர் என்று பொருள்.
- சிவாஜியிடமிருந்து இவரின் குணநலன்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இப்பெயர் ஔரங்கசீப்பால் வைக்கப்பட்டது.
- ஷாகு மகாராஜாவின் நாற்பதாண்டுகால ஆட்சியின்போது மராத்தியரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகள் அதிகரித்தன. அவற்றிலிருந்து முறையாகக் கப்பம் வசூலிக்கப்பட்டது.
மிகவும் மையப்படுத்தப்பட்ட, வலுவான அரசுக் கட்டமைப்பு உருப்பெறத் தொடங்கியது.