மணிமேகலை

ஆசிரியர் - சீத்தலைச் சாத்தனார்

  • மதுரைக் கூலவாணிகன்
  • சீத்தலை (திருச்சிராப்பள்ளி)
  • 2 ஆம் நூற்றாண்டு
  • தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்

நூல்

  • 4755 அடிகள், 30 காதைகள்
  • நிலைமண்டில ஆசிரியப்பா
  • பௌத்தம்
  • மணிமேகலை துறவு

நூலின் சிறப்பு பெயர்கள் :

  • மணிமேகலைத் துறவு மாதவியின்
    மகளான மணிமேகலை இளமையிலேயே துறவு பூண்டதைக் கூறுவதால்

  • அறக்காப்பியம் எக்காலத்திற்கும் ஏற்ற அறங்களை எடுத்துக் கூறுவதால்.

  • சீர்திருத்தக்காப்பியம்
    பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, சிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, பசி ஒழிப்பு, கொலை, களவு ஒழிப்பு முதலான சமுதாய சீர்திருத்தங்களைப் பேசுகின்றது.

  • புரட்சிக்காப்பியம்
    பரத்தையின் மகளை அறத்தின் தலைவியாகவும் துறவியாகவும்மாற்றிக் காட்டியுள்ளதால்

  • கதைக் களஞ்சியக் காப்பியம் கிளைக் கதைகளை மிகுதியாகக் கூறுவதால்

  • பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
    அமுதசுரபியைக் கொண்டு அனைவரின் பசிப்பிணியையும் போக்கியதால்

  • பசுப்போற்றும் காப்பியம்
    பசுவின் பெருமைகளை ஆபுத்திரன் மூலம் எடுத்துக் கூறுவதால்

  • காந்த ஊசி பற்றி கூறும் நூல்

  • பல்லவர் கால மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை மணிமேகலை மூலம் அறிய முடிகிறது

பாடப் பகுதி

முதற் காதை : விழாவறை காதை

==ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்==

==காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்==

==பசியும் பிணியும் பகையும் நீங்கி==

==பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;==

==அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்==. ==மணிமேகலை 25: 228 - 231==

சிறப்புகள்

  • இந்தியாவை நாவலந்தீவு எனக் குறிப்பிடும் நூல் மணிமேகலை.
  • தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும்.
  • உலகில் முதலில் தோன்றிய பெண் துறவி மணிமேகலை.
  • சொற்சுவை, பொருட்சுவை, இயற்கை வருணைகள் நிறைந்த நூல் மணிமேகலை
  • பாதத்தில் சகஸ்ர (அ) சக்கர ரேகை (1000) அமையப்பெற்றவர் புத்தர்,
  • மணிமேகலையை விரும்பியவன் உதயகுமரன்.
  • மணிமேகலையின் தோழி சுதமதி.
  • மணிமேகலையை, மணிமேகலா தெய்வம் மணிபல்லவத் தீவிற்கு தூக்கிச் மூன்று வரங்களை அளித்தது. அங்கு அவள் பாதபீடிகையை வணங்கினாள்.
  • தீவதிலகையின் உதவியால் அமுதசுரபியைப் பெற்றுப் புகார் நகரை அடைந்தவள்- மணிமேகலை
  • அறவணவடிகளின் அறிவுரைப்படி ஆதிரையிடம் முதன் முதலில் அமுதசுரபியில் பிச்சை பெற்றவள்- மணிமேகலை
  • அமுதசுரபி முற்பிறவியில் ஆபுத்திரனிடம் இருந்தது
  • பேய் பெண்ணான காயசண்டிகையை அழகான பெண்ணாக மாற்றியவள் மணிமேகலை
  • ஆபூத்திரன் நாடு அடைந்த காதை 24 காதை ஆகும்
  • உலகின் 6 வகை உயிர்கள் மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்குகள், பேய்
  • உடலில் தோன்றும் தீவினை கொலை, களவு, காமம்
  • சொல்லில் தோன்றும் தீவினை பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனற்ற சொல்
  • மணிமேகலையில் கூறப்படும் பத்துகுற்றங்கள் கொலை, களவு, காமம், பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனற்றசொல், பேரவா, கடுஞ்சினம், தெளிவில்லா அறிவு
  • சமயபூசலுக்கு வித்திட்ட தமிழின் இரண்டாம் காப்பிய நூல் மணிமேகலை

மேற்கோள்:

==நல்வினை யென்பது யாதென வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்

==
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பொருள் செல்வமும் நில்லா புத்தேள் உலப் புதல்வரும் தாரார் மிக்க அறவே விழுத்துணை ஆவது

வினையின் வந்தது வினைக்கு விளைவாவது

==உண்டிக் கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோரே==
தேவியும் ஆயமும் சித்ராபதியும்
ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய்

==பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்== ==மணிமேகலை (காதை 1, அடி 16)==

கப்பல் கட்டும் கலைஞர்கள் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர்.

==கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்==” .

==புனையா ஓவியம் புறம் போந்தன்ன==

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை ஆவது

சிறைசெய்காதை: 135-138