மங்கையராய்ப்-பிறப்பத-ற்கே

M. S சுப்புலட்சுமி

  • மதுரை சண்முக வடிவு சுப்புலட்சுமி

  • ‘குறையொன்று மில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்று மில்லை கோவிந்தா…’

  • ‘இசைப்பேரரசி’ என்று ஜவஹர்லால் நேருவால் அழைக்கப்பட்டவர்

  • பத்து வயதில் இசைத்தட்டுக்காகப் பாடலைப் பாடி பதிவு செய்தார்.

  • 17 வயதில் சென்னை மியூசிக் அகாதெமியில் மேதைகள் பலர் முன்பு கச்சேரி செய்து பாராட்டைப் பெற்றார்

  • ‘காற்றினிலேவரும்கீதம்’, ‘பிருந்தாவனத்தில் கண்ணன்’ மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்தது.

  • தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, குஜராத்தி, ஆகிய இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் கூடப் பாடியுள்ளார்.

  • காந்தியை தில்லியில் சந்தித்தபோது ‘இரகுப இராகவ இராஜாராம் ’ என்ற பாடலைப் பாடினார்.

  • காந்தியடிகள் மீரா எழுதிய பாடல் ஒன்றைக் குறிப்பிட்டுப் பாடச் சொன்னார்.

  • சென்னை வானொலி, 1947ல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று ‘ஹரி தும் ஹரோ’ என்னும் மீரா பஜன். ஒலிபரப்பியது.

  • 1954 ல் தாமரையனி
    விருது பெற்றபோது, அவரைப் பாராட்டியவர் ஹெலன் கெல்லர்

  • 1963 ல் இங்கிலாந்திலும் 1966 ல் ஐ.நா.அவையிலும் பாடினார்.

  • ஐ.நா அவையில் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையை பாடியவர்.

  • 1966 ஆம் ஆண்டு இவரது குரலில் பதிவு செய்யப்பட்ட வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்கத்தொடங்கியது.

  • 1974 ல் நோபல் பரிசுக்கு இணையான ‘மகசேசே விருது’‌. இவ்விருது பெறும் முதல் இசைக்கலைஞரும் எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களே ஆகும்.

  • இந்தியாவின் மிக உயரிய விருதான ‘இந்திய மாமணி’ விருதினை எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பெற்றுள்ளார்.

  • மீரா - மிகப்பெரிய வெற்றியைத் தந்த திரைப்படம் கடைசி திரைப்படமும் அதுவே.

பால சரஸ்வதி

  • பொதுவெளியில் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டம் இயற்றப்பட்டிருந்த காலத்தில் நடன வாழ்வைத் தொடங்கியவர்.
  • இந்திய அரசின் தாமரைச் செவ்வணி விருது பெற்றவர்.
  • காஞ்சிபுரத்தில் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்காக முதன்முதலில் மேடை ஏறிய போது இவருக்கு வயது - ஏழு
  • கல்கத்தாவிலும் காசியில் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும் சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப்பண்ணாகிய ‘ஜனகணமன’ பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடியவர் பாலசரசுவதி. நாட்டுப்பண்ணுக்கு நடனமாடியது அதுவே முதலும் இறுதியுமாகும்.
  • டோக்கியோவில் உள்ள ‘கிழக்கு மேற்குச் சந்திப்பு ’ நிகழ்வில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடியவர் - பாலசரசுவதி

ராஜம் கிருஷ்ணன்

  • தமிழில் எழுதிய பெண்களில் முதன்முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டிக் கதைகள் எழுதியவர்
  • ‘வேருக்கு நீர்’ என்னும் புதினத்திற்காக ‘சாகித்திய அகாதெமி’ விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்
  • ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்னும் பாரதியின் வரலாற்றுப் புதினம்
  • தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைக் ‘கரிப்புமணிகள்’ என்ற புதினம்
  • படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்து ‘குறிஞ்சித்தேன்’ என்ற புதினம்.
  • கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பேசும் ‘அலைவாய்க்கரையில்’ என்ற புதினம்.
  • அமைப்புசாரா வேளான் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சுட்டிக்காட்டி ‘சேற்றில்மனிதர்கள்’, ‘வேருக்குநீர்’என்ற புதினங்கள்
  • குழந்தைகளைத் தீப்பெட்டித் தொழிலில் முடக்கும் அவல உலகைக் ‘கூட்டுக்குஞ்சுகள்’ என்ற புதினம்
  • பெண்குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’ என்ற புதினம்

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

  • மதுரையின் முதல் பட்டதாரிப் பெண்
  • இந்திய அரசின் தாமரைத்திரு விருது
  • சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது
  • சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது
  • கணவருடன் இணைந்து ‘பூதான ‘இயக்கத்தில் பணிபுரிந்தவர் னு
  • உழுபவருக்கே நில உரிமை இயக்கம்
  • ‘உங்கள் ஆற்றலை நீங்கள் உணருங்கள். உங்களால் எதையும் சாதிக்க இயலும்’ என்றவர்

மதுரை சின்னப்பிள்ளை

  • ‘களஞ்சியம்’ என்ற மகளிர் குழுவை அமைத்தவர்
  • மாண்புமிகு. வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) பெற்றதோடு,
  • தமிழக அரசின் ‘ஔவை விருதையும்’,
  • தூர்தர்ஷனின்’ பொதிகை விருதையும்’
  • தாமரைத்திரு விருதையும்