சமண மதத்தினர் அருகக் கடவுளின் உருவத்தையும், இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்களையும் சிற்பங்களாக்கியுள்ளனர்.
சமண மதத்தில் சில சிற்பங்கள் அளவுக்கு மீறிய உயரமும், பருமனும் உடையனவாக உள்ளன.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அண்மையில் உள்ள திருநாதர்குன்று என்னும் இடத்தில், ஒரு பாறையில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன
அது போலவே மதுரைக்கு அண்மையில் சமணர்களின் படுக்கைகள் செதுக்கப்பட்ட இடங்களிலும் மலைப்பாறைகளிலும் சமணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.