பேசும்-ஓவியங்கள்

  • ஆயகலைகள் எண்ணிக்கை - 64
  • தஞ்சைப் பெரிய கோவிலில் ஏராளமான சுவரோவியங்களைக் காணமுடியும்.
  • இங்கு நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகளை சுவரோவியங்களாக வரைந்துள்ளனர்.
  • துணிகளில் ஓவியம் வரையும் முறை பழங்காலம் முதலே இருந்து வந்துள்ளது.
  • ஓவியம் வரையப் பயன்படும் துணியை எழினி, திரைச்சீலை,கிழி,படாம் எனப் பல பெயர்களில் அழைப்பர்.
  • தற்காலத்தில் துணி ஓவியங்கள் ‘கலம்காரி ஓவியங்கள்” என்னும் பெயரில் தமிழகத்திலும் ஆந்திராவிலும் வருகின்றனர்.
  • ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாகவும் வரைந்தனர்.
  • தஞ்சை சரஸ்வதி மஹாலில் ஓலைச்சுவடி ஓவியங்களைக் காணலாம்.
  • முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் செப்பேடுகளில் பொறிப்பது வழக்கம்.
  • அதைப்போல் உளி கொண்டு ஓவியங்களையும் அவற்றில் வரைந்தனர்.
  • யானைத் தந்தத்தின் மீது வரையப்பட்ட ஓவியங்களை கேரள மாநிலத்தில் அதிகமாகக் காண முடியும்.
  • கண்ணாடியில் ஓவியங்களை உருவாக்கும் ஓவியர்கள் தஞ்சாவூரில் மிகுதியாக உள்ளனர்.

ஓவியத்தின் வேறு பெயர்கள்:

  • ஓவியம்
  • ஓவம்
  • சித்திரம்
  • படம்
  • படாம்
  • வட்டிகைச்செய்தி

ஓவியரின் வேறு பெயர்கள்:

  • கண்ணுள் வினைஞர்
  • ஓவியப் புலவர்
  • ஓவ மாக்கள்
  • கிளவி வல்லோன்
  • சித்திரக்காரர்
  • வித்தகர்

ஓவியக்கூடத்தின் வேறுபெயர்கள்:

  1. எழுதொழில் அம்பலம்
  2. எழுத்துநிலை மண்டபம்
  3. சித்திர அம்பலம்
  4. சித்திரக்கூடம்
  5. சித்திர மாடம்
  6. சித்திர மண்டபம்
  7. சித்திர சபை

ஓவியத்தின் மற்றொரு வடிவம் கேலிச்சித்திரம்

ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் “இராஜா இரவிவர்மா’ இவரது பாணி ஓவியங்கள் பிற்காலத்தில் நாட்காட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர்
கொண்டையராஜூ,

நாட்காட்டி ஓவியங்களைப் பாசர் பெயிண்டிங் என்றும் அழைப்பர்.

நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் - கேலிச்சித்திரம்.

கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது
துணி ஓவியங்கள்

மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவனங்களையும் செப்பேடுகளில் பொறித்து பாதுகாத்தனர்.