பெயர்ச்-சொல்லின்-வகை

சொல் இலக்கணம்

சொல்லின் இரண்டு பிரிவுகள்

  • இலக்கண வகைச் சொற்கள்
  • இலக்கிய வகைச் சொற்கள்

இலக்கண வகைச் சொற்கள்

  • பெயர்ச்சொல்

    1. பெருட்பெயர்
    2. இடப்பெயர்
    3. காலப் பெயர்
    4. சினைப்பெயர்
    5. பண்புப்பெயர்
    • தொழிற்பெயர்
      1. முதனிலை தொழிற்பெயர்
      2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
      3. வினையாலணையும் பெயர்
  • வினைச் சொல்

    வினையை குறிக்கும் சொல்

  • இடைச்சொல்

  • உரிச்சொல்

    • ஒரு குணம் தழுவிய பல உரிச்சொல்

      சால, உறு, தவ, நனி, கூர், கழி - மிகுதிப் பொருளை உணர்த்தும்

    • பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்

      “கடி” - விரைவு, மணம், காவல், கூர்மை, அச்சம், புதுமை

இலக்கிய வகைச் சொற்கள்

  1. இயற்சொல்(சோறு, கிளி - போன்ற யாவர்க்கும் புரிவன)
  2. திரிசொல்(சொன்றி- கிள்ளை- போன்ற கற்றவர்க்கே புரிவன)
  3. திசைச் சொல்(அல்வா, சன்னல் - போன்ற பிறமொழிச் சொற்கள்)
  4. வடசொல்(பாவம், புண்ணியம், குங்குமம் போன்ற வடமொழிச் சொற்கள்)

இலக்கண வகையான நால்வகைச் சொற்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டு :

ஆலயம் தொழுவது சாலவும் நன்று - ஒளவையார்

இச்செய்யுளில் நான்குவகைச் சொற்களும் உள்ளன.
ஆலயம் - பெயர்ச்சொல்
தொழு - வினைச்சொல்
சால - உரிச்சொல்
உம் - இடைச்சொல்

பெயர்ச்சொல்

பெயரை குறிக்கும் சொல் பெயர்ச்சொல். இது 6 வகைப்படும்.

  1. பெருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. காலப் பெயர்
  4. சினைப்பெயர்
  5. பண்புப்பெயர்
  • தொழிற்பெயர்
    1. முதனிலை தொழிற்பெயர்
    2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
    3. வினையாலணையும் பெயர்