புறநானூறு

மன்னர்கள்ஆட்சிப் பகுதி
அதியமான் நெடுமான் அஞ்சிமுதிரை மலைத் தலைவன்
ஆய் அண்டிரன்பொதிகை மலைத் தலைவன்
ஓய்மான் நல்லியக் கோடன்ஓய்மா நாட்டுத் தலைவன்
சோழன் கரிகால் பெருவளத்தான்
குமணன்முதிரை மலைத் தலைவன்
கோப்பெருஞ்சோழன்உறையூர்

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே !

புறம் – 183

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

புறம் 312 - பொன்முடியார்

மேற்கோள்:

==நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ,
அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ. எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே

==ஔவையார்==.

==எத்திசை செல்லினும் அத்திசை சோறே==

==நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் வேன்மிகு தானை வேந்தர்க்கு கடனே ஓவத்தனைய இடனுடை வனப்பு==

==புகழெனின் உயிரும் கொடுக்குவார் பழியெனின் உலகுடன் பெரினும் கொள்ளார்==

==பல்சான் றீரே பல்சான் றீரே கயன்முள் என்ன நரைமுதிர் திலைகவுட் கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்==

==யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே==

==அறுகுளத் உகுத்து மகல்வயற் பொழிந்தும் உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும் வரையா மார்பின் மாரி போலக் கடா அ யானைக் கழற்கால் பேகன் கொடைமடம் படுத லல்லது படைமடம் படான்பிறர் படைமயக் குறினே==

பாடப்பகுதி

==“யாதும் ஊரே; யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா”==

==நோதலுந்தணிதலு மவற்றோ ரன்ன நாடு சாதலும் புதுவ தன்றே வாழ்தல் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை யிகழ்த லதனினு மிலமே.== - ==புறம் – 192== கணியன் பூங்குன்றனார்

விருந்தோம்பல் பற்றி

தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி.

==குரல் உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்== ==புறநானூறு (333) .==

அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது என்பதை,

==“உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத்தமியர் உண்டலும் இலரே…….. ”==

புறம்182 - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி .

==“போர்குறி யானம் புகழின் காயம்”
“தமக்கென முயலா நோன்றாள்”

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி .

நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன்; இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்.

==நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்று இக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்==

புறநானூறு, 316


கரிகாலன் - கடல்பயணம்
காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர் இவ்வுண்மையை,

==“நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!”==

புறநானூறு - வெண்ணிகுயத்தியார்


==கடுங்காற்று மணலை கொண்டு வந்து சேர்க்கிறது.==புறநானூறு - ஐயூர் முடவனார்

புறநானூறு - மதுரை இளநாகனார்


புலவர் மோசிகீரனார் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னர் கோப்பெருஞ் சேரல் இரும்பொறை.

கண் விழித்த புலவர் மன்னரின் செயலை கண்டு வியந்து ‘==மாசற விசித்த வார்புறு வள்பின்..==.’ என்றார்


‘==நீரற வறியாக் கரகத்து==’ - புறநானூறு

சிவகங்கை - பிரான்மலை - பறம்புமலை

==‘கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே!’ -== புறநானூறு


அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை

==இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்==

==ஏணிச்சேரி முடமோசியார் || புறம்==

அரசியல் அறம்

==‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’, ‘அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்’==

புறநானூறு

அறங்கூறவையம்

==‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’== புறநானூறு.

உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றது.

போர் அறம்

போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர்,பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு புறப்பாடல் கூறுகிறது.

==தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது.==

==எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்==

==ஆவூர் மூலங்கிழார் || புறம் 301==.

தனக்கு நிகரற்றார் போரிட வந்து எதிர்த்தாலும் அவர்க்கு எதிராகப் போரிடான் எம் தலைவன்.


கொடை

==உண்பது நாழி உடுப்பவை இரண்டே !..==

==செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே தப்புந பலவே== ( 189:7-8) புறநானூறு - மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம்

==பெரிதே உலகம் பேணுநர் பலரே==

==“ஈயென இரத்தல் இழிந்தன்று அதன் எதிர் ஈயேன் என்றல்அதனினும் இழிந்தன்று”==

கழைதின் யானையார்


வாய்மை

வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை,

==“பொய்யாச் செந்நா”,“பொய்படுபறியா வயங்கு செந்நா==

அறிவியல்

==புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா== ==வான ஊர்தி== - ==புறம் 27, அடி 7-8.==

கருவிகளை இசைத்து பாடுவோர் பாணர்.

==நல்லியாழ்== ==மருப்பின் மெல்ல வாங்கிப்== ==பாணன்== ==சூடான்== ==பாடினி== ==அணியாள்== - புறநானூறு

==கலைஉணக் கிழிந்த== ==முழவு====மருள் பெரும்பழம்== - புறநானூறு

கடற் பயணம்

புறநானூறு ==கூம்பொடு== ==மீப்பாய்== ==களையாது==

பொன், மென்மை மிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன. இச்செய்தியை, & பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது.எனவே கப்பலில் வரும் பொருள்களைத் தோணிகள் மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர். இச்செய்தியை,

==மீனோடு நெற்குவைஇ மிசையம்பியின் மனைமறுக்குந்து…கலந்தந்த பொற்பரிசம்== ==கழித்தோணியால்== ==கரைசேர்க்குந்து== – புறம் 343 : 1- 8

நீரும் நிலனும்

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குக் குடபுலவியனார் அறிவுரை கூறுவதாக அமைந்த ஒரு புறப்பாடல்

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே; உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவெனப் படுவது நிலத்தோடு நீரே; நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;*

புறம்.18 : 11 - 30

திணை: பொதுவியல்

துறை: முதுமொழிக்காஞ்சி : அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல்.

உணவு கொடுத்தவரே உயிர்கொடுத்தவர். இந்த உடலானது, உணவினாலானது. உணவு என்பது யாது? நிலத்தொடு நீர் சேர்வதுதான். அப்படி இணைத்து வேளாண்மைக்கு உதவுக. அவ்வாறு உதவியவரே உலகத்தில் உயிரையும் உடலையும் நிலைநிறுத்தி வாழ்வித்தவராவர் என்று நீரின்றி அமையாத உடல்குறித்துக் கூறி, நீர்வளம் பெருக்க, பாண்டிய மன்னனை அறிவுறுத்துகிறார்.