புதுக்கவிதை

மணிக்கொடி காலம்

  • பாரதியைத் தொடர்ந்து தமிழில் பல்வேறு கவிஞர்கள் புதுக்கவிதை எழுத முற்பட்டனர்.
  • புதுக்கவிதை முன்னோடிகளான [[ந.பிச்சமூர்த்தி]], [[கு.பா.ராஜகோபாலன்]] , க.நா. சுப்பிரமணியன், [[புதுமைப்பித்தன்]] போன்றோர் மணிக்கொடி இதழில் புதுக்கவிதைகளை எழுதினர்.
  • ந.பிச்சமூர்த்தி ‘புதுக்கவிதையின் தந்தை’ என அறியப்படுகிறார்.
  • இக்காலகட்டத்தில் கிராம ஊழியன், கலாமோகினி ஆகிய இதழ்களும் வசன கவிதைகளை வெளியிட்டன.

எழுத்து காலம்

  • புதுக்கவிதை மறுமலர்ச்சியும் வலிமையும் பெற்றதில் எழுத்து இதழின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
  • [[சி.சு.செல்லப்பா]] தொடங்கிய ‘எழுத்து’ இதழ் புதுக்கவிதையின் சோதனை முயற்சிகளை வெளியிட்டது.
  • பெட்டிக்கடை நாரணன்’, ‘விஞ்ஞானி’ போன்ற கவிதைகளை ந.பிச்சமூர்த்தி எழுதினார்.
  • புதுக்கவிதை குறித்த பல திறனாய்வுக் )llகட்டுரைகளும் அதில் வெளியாகின.
  • மயன், சிட்டி, [[வல்லிக்கண்ணன்]], வேணுகோபாலன், டி.கே.துரைஸ்வாமி ([[நகுலன்]]), [[தருமு சிவராமு]] (பிரமிள்), [[சி.மணி]], [[சுந்தரராமசாமி]] (பசுவய்யா), எஸ். வைத்தீஸ்வரன் போன்றோர் எழுத்து இதழில் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழில் புதுக்கவிதைத் தொகுப்பாகப் ‘புதுக்குரல்கள்’ என்னும் நூல் வெளிவந்தது. இக்கவிதைத் தொகுப்பு உருவத்திலும் உள்ளடக்கத்திலும் பாரதியைப் பின்பற்றியது. 24 கவிஞர்களால் எழுதப்பட்ட 63 கவிதைகளைக் கொண்டது.

[[கசடதபற காலம்]]

  • 1970இல் வெளிவந்த ‘கசடதபற’ என்னும் இதழ் [[ஞானக்கூத்தன்]], [[கலாப்பிரியா]], [[கல்யாண்ஜி]] போன்ற புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தியது.
  • இக்காலகட்டத்தின் கவிதைகள் பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த நகர வாசகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தின.

[[வானம்பாடி காலம்]]

  • 1971இல் கோவையிலிருந்து ‘வானம்பாடி’ இதழ் வெளிவந்தது.
  • இதில் எழுதிய கவிஞர்கள் ‘மானுடம் பாடவந்த வானம்பாடிகள்’ என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
  • அவர்கள் சமூக நலனில் அக்கறை கொண்டு தம் கவிதைகளை உருவாக்கினர்.
  • [[சிற்பி]], [[மீரா]], [[நா. காமராசன்]], [[மு.மேத்தா]], புவியரசு, இன்குலாப், [[ஈரோடு தமிழன்பன்]], கங்கைகொண்டான். அக்னிபுத்திரன், சக்திக்கனல், சிதம்பரநாதன் போன்றோர் இக்காலத்தில் குறிப்பிடத்தக்கக் கவிஞர்களாவர்.

இதே காலகட்டத்தில், [[அப்துல் ரகுமான்]], [[அபி]] போன்ற கவிஞர்கள் இயக்க அடையாளங்கள் இல்லாமல் தனித்துவத்தோடு கவிதைகள் எழுதியமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதுக்கவிதை உத்திகள்

உவமை

தெரிந்த பொருளைக் கொண்டு தெரியாத பொருளை உணர்த்துவது உவமை ஆகும்.

  • பொருள் உணர்த்தும் முறைகளில் உவமை முதலிடம் பெறுகிறது.

ஒரு உலோபி பஞ்சத்தில் காக்கும் பணப்பையைப் போல் கோடை மேகம்

வைரமுத்து

உருவகம்

வாழ்க்கையும் காவிரி அதிலெங்கும் கிளிக்கூண்டு; வார்த்தையே மணல் ஓசையே ஜலம் என் தீராத வேட்கையே குவிக்கும் விரல்கள் பாட்டென்னும் கூண்டொன்று அமைத்தேன் அழகென்னும் கிளியை அழைத்தேன் ஆறெங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன் அழகினை அழைப்பேன் நான் எந்நாளும்

ந.பிச்சமூர்த்தி

படிமம்

உவமை, உருவகம் என்பன மேன்மேலும் இறுகிய நிலையில்தான் படிமம் தோன்றுகிறது.

  • முற்றுருவகப் பாங்கில் அமைந்து, தெளிவானதோர் அகக் காட்சியை வழங்கும் ஆற்றலுடையதே படிமம் ஆகின்றது.

விடிவு

பூமித் தோலில் அழகுத் தேமல் கதிர்கள் கமழ்ந்து விரியும், பூ இருளின் சிறகைத் தின்னும் கிருமி வெளிச்சச் சிறகில் மிதக்கும் குருவி

பிரமிள்