உவமை
“திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல வடபுறமும் தென்புறமும் நீர்நிறைந்த கண்மாய்கள்”
குறிஞ்சிமலர் - தீபம் நா.பார்த்தசாரதி
[!important]
“உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்” - தண்டி
[!important]
எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்தும்போது “இணைஒப்பு”
“ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியுமா? என்று கேட்கிறார்கள் ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது. “
“புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை”
“மழையும் புயலும்” - வ.ராமசாமி .
“வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள்கள் பல வேண்டும்; அரிசி, காய், கனி முதலியவை வேண்டும். உடை, வீடு முதலியவை வேண்டும். காசும், காகித நோட்டும் வேண்டும். இன்னும் பல வேண்டும். இவற்றை ஆளும் அறிவும் வேண்டும்”
“நாட்டுப்பற்று” - மு.வரதராசனார்
படிப்பவருக்கு முரண்படுவதுபோல இருக்கும்; உண்மையில் முரண்படாத - மெய்ம்மையைச் சொல்லுவது முரண்படு மெய்ம்மை’ (paradox).
‘இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கு நாம் பயப்படவேண்டும்?’
முரண்பட்ட சொற்களை சேர்த்து எழுதுவது சொல்முரண் (Oxymoron) என்கிறோம்.
‘ கலப்பில்லாத பொய்’
[!important]
எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை அமைத்து எழுதுதலை எதிரிணை இசைவு (Antithesis).
குடிசைகள் ஒருபக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒரு பக்கம்; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக்கூடுகள் ஒருபக்கம்; பருத்த தொந்திகள் மறுபக்கம்; கேடுகெட்ட இந்தச் சமுதாயத்திற்கு என்றைக்கு விமோசனம்? தோழர்களே, சிந்தியுங்கள்!”
ப.ஜீவானந்தம்