பாவலரேறு-பெருஞ்சித்திரனார்

அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான “துரை. மாணிக்கம்” என்பதை விடுத்துப் “பெருஞ்சித்திரன்” என்னும் புனைப்பெயரில் எழுதினார்.

  • பிறந்த ஊர் சேலம் - சமுத்திரம்
  • மாணவர் பருவத்தில் “குழந்தை ” என்னும் பெயரில் கையெழுத்து ஏடு நடத்தினார்.
  • “அருணமணி” என்ற பெயரில் “மலர்க்காடு” என்ற கையெழுத்து ஏடு நடத்தினார்.
  • 1950-ல் சேலம் மாநகராட்சிக் கல்லூரியில் படித்த போது [[தேவநேயப் பாவாணர்]] தமிழ்க் கற்றார்.
  • 1959- தென்மொழி என்ற இதழைத் தொடங்கினார்.
  • இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரும் தூண்டுதலாக இருந்ததால் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • வேலூர் சிறையில் இருந்த போது “ஐயை” என்ற காவியத்தின் முதல் பகுதியை எழுதினார்.
  • சிறையிலிருந்து வந்து ” தமிழ்ச்சிட்டு ” என்ற இதழைத் தொடங்கினார்.
  • 1972 ல் [[தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு]] நடத்தினார்
  • [[தேவநேயப் பாவாணர்]] அகரமுதலி தொகுப்பதற்குப் பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கினார்
  • நெருக்கடிநிலை நடைமுறைக்கு வந்த போது சிறைப்பட்டார்.அப்போது “ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதினார்.
  • பல்வேறு காலக்கட்டங்களில் தாம் எழுதிய உணர்வுப்பாடல்களை 1979 ல் “[[கனிச்சாறு]] என்ற பெயரில் மூன்றுத் தொகுதிகளாக தொகுத்து வெளியிட்டார்.
  • 1981 ல் உலகத்தமிழ் தமிழின முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
  • 1982 தமிழ்நிலம் என்ற ஏட்டைத் தொடங்கினார்.

இதழ்கள்

  1. தென்மொழி - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணருடன் இணைந்து
  2. தமிழ் சிட்டு - மாணவர்களுக்காக
  3. தமிழ் நிலம் - உலகத் தமிழின முன்னேற்ற கழகம்

நூல்கள்

  • உலகியல் நூறு
  • பாவியக்கொத்து
  • கொய்யாக்கனி
  • நூறாசிரியம்
  • கனிச்சாறு(8) - தமிழ் உணர்வுப் பாடல்கள்
  • எண்சுவை எண்பது
  • மகபுகுவஞ்சி
  • பள்ளிப்பறவைகள்
  • திருக்குறள் மெய்ப்பொருளுரை - தமிழுக்கு கருவூலமாய் அமைந்த நூல்.
  • அறுபருவத்திருக்கூத்து
  • இட்ட சாபம் முட்டியது
  • ஐயை
  • கழுதை அழுத கதை
  • தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
  • வாழ்வியல் முப்பது

பாடப் பகுதி

10th Unit 1

கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்) எடுத்தாளப்பட்டுள்ளன

*அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

*தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி -நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!