பாரதியார்

12.1882-11.9.1921

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா

எட்டயபுர ஏந்தல்

பாட்டுக்கொருப் புலவன்

பாரதி பற்றி தாசன்

  • சிந்துக்குத் தந்தை ( அதிகமாக கையாண்ட பாவனை)
  • செந்தமிழ்த் தேனீ
  • புதிய அறம் பாட வந்த அறிஞன்
  • மறம் பாட வந்த மறவன்
  • 11 வயதில் பாரதி எனும் பட்டம் பெற்றார்
  • பாரதியார் தன்னை ஷெல்லிதாசன்” என்று அழைத்துக் கொண்டார்
  • பாரதியாரின் புதுக்கவிதை முன்னோடி வால்ட் விட்மன்
  • காட்சி’ என்ற தலைப்பில் எழுதிய கவிதை, தமிழில் புதுமையான வடிவத்தில் அமைந்த முதல் வசன கவிதையாகும்.
  • கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் - பாரதியார்
  • 1905 ல் சக்கரவர்த்தினி என்ற இதழ் தொடங்கினார்.
  • கர்மயோகி, பாலபாரத் ( ஆங்கில இதழ்) ஆகியகவற்றை நடத்தினார்.
  • சுதேசிமித்திரன் துணையாசிரியர்.
  • இந்தியா” என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை தமிழ்த் தொண்டன் பாரதியார் செத்ததுண்டோ” என்று பாரதியாரைப் போற்றியவர் - பாரதிதாசன்
  • பாரதியார் பாடல்களை முதன்முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் -பரலி. சு.நெல்லையப்பர்
  • மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணி
  • பாரதியார் பாடல்களை முதன்முதலில் வெளியிட்டவர் கிருஷ்ணசாமி ஐயர்
  • பாரதிக்கு “மகாகவி ” என்ற பட்டம் கொடுத்தவர் வ.ராமசாமி ஐயங்கார்
  • கேலிச்சித்திரம் -கருத்துப்படம் (இந்தியா) போன்றவற்றை உருவாக்கியவர்.
  • வசன கவிதையை அறிமுகப்படுத்தியவர்.
  • சீட்டுக்கவிகளையும் எழுதியவர்.
  • சிறுதானியம் போன்ற மூக்கு, சின்னசின்ன கண்கள் என சிட்டுக்குருவியை பாடியவர்
  • குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டு, பாப்பாப் பாட்டு, புதிய ஆத்திச்சூடி என குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்.
  • நாடும் மொழியும் நமதிரு கண்கள்
  • கார்டூன் - விகட சித்திரம்

இதழ்கள்

  • இந்தியா( கருத்து படம்)( சிவப்பு வண்ணத்தாள்)
  • சுதேசமித்திரன்(உதவி ஆசிரியர்)
  • விஜயா(கருத்து படம்)
  • சக்கரவர்த்தினி( பெண்களுக்காக குறள் வெண்பா)
  • இந்தியா, பால பாரதம் - 1907
  • சூர்யோதயம், கர்ம யோகி - துணை ஆசிரியர் சு. நெல்லையப்பர்
  • சித்திர வாளி - கருத்து படங்களை மட்டும் கொண்டு நடத்த விரும்பிய இதழ்
  • தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன் முதலில் குறித்தவர்
  • தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிட முன்னோடியாக இருந்தவர்.
  • ஆங்கிலத்தில் தலைப்பிடுவதை சுதேசமித்திரனில் சாடி எழுதினார்.
  • தலைப்பிடலை மகுடமிடல் என குறிப்பிடுகிறார்
  • தீ போல் சினம் என்பதை சினத்தீ என்றவர்

வசன கவிதை Prose Poetry (Free verse)

  • காற்று

உரைநடை நூல்கள்

  • சந்திரிகையின் கதை
  • தராசு
  • தென்னாப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை - கட்டுரை

கவிதைகள்

  • குயில் பாட்டு
  • கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, முரசுப்பாட்டு - பதிப்பித்தவர் பரலி.சு.நெல்லையப்பர்

பாரதியின் மொழிபெயர்ப்பு

காட்சி, பொருட்காட்சி -Exhibition

இருப்புப் பாதை - east indian Railways

புரட்சி - Revolution

தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலை நிறுத்தம் - strike

பாடப் பகுதி

*வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!வாழிய வாழியவே!வான மளந்தது அனைத்தும் அளந்திடுவண்மொழி வாழியவே!ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசிஇசைகொண்டு வாழியவே!எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!என்றென்றும் வாழியவே!

காட்சி

தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது, ஞாயிறு நன்று, திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது. கடல் இனிது, மலை இனிது, காடு நன்று.

காற்று - வசன கவிதை

திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் -அண்டம்
சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட”

’இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’ என்று பாரதியார்.

பெண்கள் அறிவை வளர்த்தால்
வையம் பேதமை யற்றிடும் காணீர்

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா

பெண்கள் வெல்க என்று கூத்திடுவோம்

தமிழா! பயப்படாதே, வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்”

தேடுகல்வி இலாததோர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல் ” என்று கல்விக்கூடங்களின் இன்றியமையாமையை

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ! சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?

“நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்ப்ப்பட வைத்தாங்கே குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு கோல வெற்படைத்தோம்; உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம்; பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ?”என்ற பாடலை இயற்றியவர் -
பாரதியார்.

‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று கூறியவர் பாரதியார்.

‘தேமதுரத் த் தமிழோசை உலகமெலாம். பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்றவர்- பாரதியார்.

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே -தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர்- மணி யாரம் படைத்த தமிழ்நாடு’

சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது சொற்புதிது சோதிமிக்க நவகவிதை

==யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்==

==என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்!==

==காற்றே வா, மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா==

ஹைக்கூ வை தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர்

செந்தமிழ் நாடேனும் போதினிலே நல்ல தேன் வந்து பாயுது காதினிலே

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலின் நீரோ? – வெறுங் காட்சிப் பிழைதானோ? போன தெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும்ஓர் கனவோ? – இந்தஞாலமும் பொய்தானோ ? - பாரதியார்

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!வாழிய பாரத மணித்திருநாடு!

==பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்==

தமிழ், தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க!..ஆனால் புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் - தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்

==வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.==

==வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்==

வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்

இந்தியாதான் என்னுடைய மோட்சம்; இந்தியாவின் நன்மைதான் என் நன்மை; இந்தியாதான் என் இளமையின் மெத்தை; என் யௌவனத்தின் நந்தவனம்; என் கிழக்காலத்தின் காசி

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடீ! கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலின்றி நாட்டத்தில் கொள்ளாரடீ! - கிளியே நாளில் மறப்பாரம்

“பள்ளித் தலமனைத்தும் செய்குவோம்; எங்கள் கோயில் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்” - பாரதியார்.

நம் எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்கு கோவில் என்று பெயர் வைத்தார் .

பாரதியார் இந்தியா என்ற இதழில் முதன்முதலில் கருத்துப்படத்தினை தமிழில் அறிமுகப்படுத்தினார்.

கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்