பாரதிதாசன்

  • 29.04.1891- புதுச்சேரி

  • 16 வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.

  • 1938- இந்தி எதிர்ப்பு போராடத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

  • புதுவையில் பாரதியின் கட்டளைக்கிணங்கப் பாடியது
    ”எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா” இதனைப் பாரதி “ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்பு ரத்தினம் எழுதியது” எனக் குறிப்பிட்டுச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்.

  • “புரட்சிக்கவி” என்றும் “பாவேந்தர்”

பாரதிதாசன் வலியுறுத்திய கருத்துக்கள்:

  • பெண்கல்வி
  • கைம்பெண் மறுமணம்
  • பொதுவுடமை
  • பகுத்தறிவு

பாரதிதாசன் இயற்றிய நூல்கள்:

  • பாரதிதாசன் கவிதை தொகுப்பு 1,2,3

  • இசை அமுது 1,2

  • பாண்டியன் பரிசு

  • எதிர்பாராத முத்தம்

  • சேர தாண்டவம்

  • அழகின் சிரிப்பு - இயற்கையை வருணிப்பது

  • குடும்ப விளக்கு - கற்ற பெண்களின் சிறப்பு ( 5 பகுதிகள்)

  • இருண்ட வீடு - கல்லாத பெண்களின் இழிவு

  • குறிஞ்சித்திட்டு

  • கண்ணகி

  • புரட்சிக் காப்பியம் - பில்கணியத்தின் தழுவல் 1937

  • மணிமேகலை வெண்பா

  • காதல் நினைவுகள்

  • கழைக்கூத்தியின் காதல்

  • தமிழச்சியின் கத்தி

  • அமைதி

  • இளைஞர் இலக்கியம்

  • சௌமியன்

  • நல்ல தீர்ப்பு

  • தமிழ் இயக்கம்

  • இரண்யன் அல்லது இணையற்ற வீரன்

  • காதலா கடமையா?

  • திருக்குறள் உரை

  • பிசிராந்தையார் - நாடக நூல் - [[சாகித்திய அகாதமி விருது]] (1969). இறப்பு 21 April 1964

  • 1946- அமைதி எனும் தலைப்பில் மௌன நாடகம்

  • சஞ்சீவி பார்வதத்தின் சாரல் - பொதுவுடமையை வலியுறுத்துவது

  • பாரதிதாசன் உரை எழுதிய நூல் - திருக்குறள்.

  • பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்

  • பாரதிதாசன் மறைந்த ஆண்டு - 1964

  • “அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்” என்று பாரதிதாசனைப் புகழ்ந்தவர் - புதுமைப்பித்தன்

  • பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் நிலவு, மணம்

  • பாரதிதாசன் தன்மொழி, தன்னாடு, தன்மக்கள் எனப் பாடியதால் இரஷ்யக் கவிஞரான ‘இரசூல் கம்சதோவ்’ என்பவரோடு ஒப்பிடப்படுகிறார்.

  • பாரதிதாசனைப் பின்பற்றி எழுதிய [[வாணிதாசன்]], [[முடியரசன்]], [[சுரதா]] போன்றோர் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

பாடப் பகுதி

  • குடும்ப விளக்கு, இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாம் பகுதியில், விருந்தோம்பல் தலைப்பிலுள்ள தலைவியின் பேச்சில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பாடப்பகுதியாக உள்ளன.
  • பெண்எனில் பேதை என்ற எண்ணம்இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்உருப்படல் என்பது சரிப்படாது

மக்கள் இலக்கிய வடிவங்களான கும்மி, தெம்மாங்கு, ஏற்றப்பாட்டு போன்ற வடிவங்களிலும் கவிதை பாடியவர்.

பழைய யாப்பு வடிவில் ஆசிரியப்பாவையும் ஆசிரிய விருத்தங்களையும் பாடினார்.

சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதை,

ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிட்டால் ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பாநீ

மகள் சொல்லுகிறாள்

அம்மா என் காதுக்கொரு தோடு - நீ அவசியம் வாங்கி வந்து போடு! சும்மா இருக்க முடியாது - நான் சொல்லி விட்டேன் உனக்கு இப்போது!

அதற்குத்தாய்

கற்பது பெண்களுக்கா பரணம் - கெம்புக் கல்வைத்த,நகைதீராத ரணம்! கற்ற பெண்களை இந்த நாடு - தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளுமென் போடு!

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே

“இட்டத தோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்…

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு புவியை நடத்து; பொதுவில் நடத்து!

சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கியநல் வாய்க்காலும் வகைப் படுத்தி நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும் நிறைஉழைப்புத் தோள்களெலாம் எவரின்தோள்கள்?

அறிவை விரிவுசெய் எனப் பாவேந்தர்.

எத்தனை பெரிய வானம்!எண்ணிப்பார் உனையும் நீயே;இத்தரை, கொய்யாப் பிஞ்சு,நீ அதில் சிற்றெறும்பே,அத்தனை பேரும் மெய்யாய்அப்படித் தானே மானே?பித்தேறி மேல்கீழ் என்றுமக்கள்தாம் பேசல் என்னே!

தொண்டு செய்து பழுத்த பழம். தூயதாடி மார்பில் விழும். மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும். அவர்தாம் பெரியார் - பார் அவர்தாம் பெரியார் -

புரட்சிக்கவி பாரதிதாசன்

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! *தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! *தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! *

“எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்”

பாவேந்தர் பாரதிதாசன்

வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே

சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில் எழில்வாழ்வைச் சித்தரித்தவண்ணந் தானோ?”

==“ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்”==

பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது - மயில்

“உலகம் உண்ண உண். உடுத்த உடுப்பாய்”

ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன் வீங்கிட மாட்டான் கல்வி விளம்பரம் விழைதல் இல்லான்” - என்று மயிலை சீனி. வேங்கடசாமி குறித்து

பாரதிதாசன் தன்மொழி, தன்னாடு, தன்மக்கள் எனப் பாடியதால் இரசூல் கம்சதேவ் கவிஞரோடு ஒப்பிடப்படுகின்றார்