பாமினி

  • 1347-ல் அலாவுதீன் ஹசன் தெளலதாபாத் நகரைக் கைப்பற்றி, பாமன்ஷா என்ற பெயரில் தம்மையே சுல்தானாக அறிவித்துக் கொண்டார்.
  • இரண்டு ஆண்டுகளில் அலாவுதீன் ஹசன் பாமன் ஷா தமது தலைநகைரைக் குல்பர்காவிற்கு மாற்றினார்.
  • 1429-ல் தலைநகர் மீண்டும் பீடாருக்கு மாற்றப்பட்டது.
  • பாமினி வம்சத்தில் பதினெட்டு அரசர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அலாவுதீன் ஹசன் பாமன்ஷா (1347 - 1358):

  • வாரங்கல் அரசிமிடருந்தும், ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகிய ரெட்டி அரசுகளிடமிருந்து ஆண்டுதோறும் கப்பம் வசூலிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் அடிக்கடி போர்கள் ஏற்பட வழிவகுத்தன.
  • இவர் தமது அரசை நான்கு மாகாணங்களாகப் பிரித்தார். அவை தராப் என அழைக்கப்பட்டன.
  • ஒவ்வொரு மாகாண ஆளுநரும் படைகளுக்குத் தலைமையேற்றனர்.
    அப்பகுதியை நிர்வாகம் செய்வதும், வரிவசூல் செய்வதும் அவருடைய பொறுப்பாகும்.

முதலாம் முகமது ஷா (1358-1375):

  • பாமன்ஷாவைத் தொடர்ந்து முதலாம் மகமது ஷா அரச பதவியேற்றார்.

  • விஜயநகரோடு இவர் மேற்கொண்ட இரு போர்களினால் பயனேதும் ஏற்படவில்லை.

  • 1368-ல் வாரங்கல் அரசோடு போரிட்டதின் மூலம் கோல்கொண்டா கோட்டை, பச்சை கலந்த நீலவண்ணக் கற்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் உட்பட பெரும் செல்வத்தை இழப்பீடாகப் பெற்றார்.

  • பின்னர் இச்சிம்மாசனமே பாமினி சுல்தான்களின் அரியணை ஆயிற்று.

  • பாரசீக அரசர்களின் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் பச்சை கலந்த நீலவண்ணக்கல்லால் ஆன அரியணையும் ஒன்றாகுமெனப் பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

  • கோல்கொண்டா கோட்டையானது ஹைதராபாத்திலிருந்து 11 கி.மீ தொலைவில், ஒரு குன்றின் மீது 120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
    ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு இக்கோட்டை பெயர் பெற்றதாகும்.

  • கோட்டையின் மிக உயரமான இடம் பால ஹிசார் ஆகும். தர்பார் மண்டபத்திலிருந்து குன்றின் கீழே அமைந்துள்ள அரண்மனைக்குச் சுரங்கப்பதை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

  • முதலாம் முகமது ஷா, பாமினி அரசிற்கு வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். அவருடைய அரச அமைப்பு முறையானது, பாமினி அரசு ஐந்து சுல்தானியங்களாகச் சிதறுண்ட பின்னரும் தொடர்ந்தது.

  • அவர் குல்பர்காவில்
    இரண்டு மசூதிகளைக் கட்டினார்.

  • 1367-ல் கட்டி முடிக்கப்பெற்ற முதல் மசூதி, மகாமசூதி 216 அடி X 16 அடி என்ற அளவில் கட்டப்பட்டதாகும்.

முதலாம் முகமதுவுக்குப் பின்வந்த
அரசர்கள்:

  • அவருடைய மகன் முஜாகித் பதவியேற்றார். ஆனால் விஜயநகருக்கு எதிரான போரை முடித்துக்கொண்டு குல்பர்கா திரும்பியபோது கொலை செய்யப்பட்டார்.

  • முகமதுவின் மாமானாரும் சதி செய்தவருமான தாவூத் என்பாரின் சகோதரனின் மகன் இரண்டாம் முகமது என்ற பெயரில் 1378-ல் அரியணை ஏற்றப்பட்டார்.

  • இரண்டாம் முகமதுவின் ஆட்சிக்காலத்தில் அமைதி நிலவியது. அவர் தனது நேரத்தின் பெரும்பகுதியைத் தமது அரசவையைப் பண்பாட்டு, கல்விமையமாக மாற்றுவதில் செலவிட்டார்.

  • பாமினி அரசு விஜயநகர அரசு இடையே,
    துங்கபத்ரா கிருஷ்ணா நதிகளின் வளமான பகுதிகளை கைப்பற்றுவது தொடர்பாக தொடர்ந்து போர்கள் நடைபெற்றன.

  • எண்பத்தைந்து ஆண்டுகள் (1377-1463) இடைவெளிக்குப் பின்னர், குறிப்பிட்டுச் சொல்லும்படியான அரசராக மூன்றாம் முகமது (1463-1482) திகழ்ந்தார்.

  • மூன்றாம் முகமது பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இக்காலகட்டத்தில் அரசின் பிரதம அமைச்சராகவும் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாகவும் மகமது கவான் விளங்கினார்.

பாமினி அரசின் எட்டு அமைச்சர்கள்:

  1. வக்கீல் - உஸ் - சல்தானா அல்லது அரசின் பிரதம அல்லது முதலமைச்சர்
  2. பேஷ்வா நாட்டின் பிரதம மந்திரியோடு இணைந்து செயல்பட்டவர்.
  3. வஸிரி-குல் ஏனைய அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிட்டவர்.
  4. அமிர்-இ-ஜூம்லா நிதியமைச்சர்
  5. நஷீர் - உதவி நிதியமைச்சர்
  6. வஷிர்-இ-அசாரப் - வெளியுறவுத்துறை அமைச்சர்
  7. கொத்தவால் காவல்துறைத் தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர்
  8. சதார்-இ-ஜகான்- தலைமை நீதிபதி, சமயம் மற்றும் அறக்கொடைகளின் அமைச்சர்.

மகமது கவான்:

  • பிறப்பால் பாரசீகரான மகமது கவான் இஸ்லாமிய கோட்பாடுகளிலும் பாரசீக மொழியிலும், கணிதத்திலும் பெரும்புலமை பெற்றவராயிருந்தார்.

  • அவர் கவிஞரும் உரைநடை எழுத்தாளருமாவார்.

  • கவான் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் நிர்வாகச் சீர்த்திருத்தங்களுக்கும் பெயர் பெற்றவராவர்.

  • பாரசீக வேதியியல் வல்லுநர்களை அழைத்து வந்து வெடிமருந்து தயாரிப்பதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் படையினருக்குப் பயிற்சியளித்தார்.

  • பெல்காமில் நடைபெற்ற விஜயநகருக்கு எதிரான போரில் அவர் வெடிமருந்தைப் பயன்படுத்தினார்.

  • அடிக்கடி அரசர்களைப் போலவே நடந்து கொள்ளும் மாகாண ஆளுநர்களைக்
    கட்டுப்படுத்தவும், நிர்வாகத்தைக்
    கட்டுக்கோப்புடையதாக மாற்றவும் கவான்
    விரும்பினார்.

  • பாமினி அரசில் ஏற்கனவே இருந்த நான்கு மாகாணங்களை எட்டாக மாற்றினார்.

  • மாகாணங்களிலிருந்து சில மாவட்டங்களை இவர் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார்.

  • ஊதியத்திற்குப் பதிலாக நிலங்களைப் பெற்றிருந்த உயர் அரசு அதிகாரிகள் தங்கள் வரவு செலவுகள் குறித்துச் சுல்தானுக்குத் தெரிவிக்கும் பொறுப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.

  • கவானால் அறிமுகம் செய்யப்பட்ட நிர்வாகச் சீர்த்திருத்தங்கள் அரசின் திறனை மேம்படுத்தியது. ஆனால், பிராந்தியத் தலைவர்களின் அதிகாரங்களைக் குறைத்தது.

  • அத்தலைவர்களில் பெரும்பாலோர் தக்காணத்தைச் சேர்ந்தோர் ஆவர். இதனால் தக்காணப் பிரபுக்களுக்கும் தக்காணத்தைச் சுற்றியுள்ளோர்களுக்கும் இடையே ஏற்கனவே நிலவிய பகைமை தீவிரமடைந்து மோதல்களாக வெடித்தன.

  • சுல்தானுக்கு எதிராக கவான் சதியில் ஈடுபட்டிருப்பதைப் போன்ற போலிக் கடிதம்
    ஒன்றை தயார் செய்தனர். கவானின் மேலாதிக்கத்தை விரும்பாத சுல்தானும் அவருக்கு மரண தண்டனை வழங்கினார்.

11:57

பாமினி அரசின் எட்டு அமைச்சர்கள்:

  1. வக்கீல் - உஸ் - சல்தானா அல்லது அரசின் பிரதம அல்லது முதலமைச்சர் அரசருக்கு அடுத்த நிலையில் துணையதிகாரியாகச் செயல்பட்டவர்.
  2. பேஷ்வா நாட்டின் பிரதம மந்திரியோடு இணைந்து செயல்பட்டவர்.
  3. வஸிரி-குல் ஏனைய அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிட்டவர்.
  4. அமிர்-இ-ஜூம்லா நிதியமைச்சர்
  5. நஷீர் - உதவி நிதியமைச்சர்
  6. வஷிர்-இ-அசாரப் - வெளியுறவுத்துறை அமைச்சர்
  7. கொத்தவால் காவல்துறைத் தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர்
  8. சதார்-இ-ஜகான்- தலைமை நீதிபதி, சமயம் மற்றும் அறக்கொடைகளின் அமைச்சர்.

மகமது கவான்:

  • பிறப்பால் பாரசீகரான மகமது கவான் இஸ்லாமிய கோட்பாடுகளிலும் பாரசீக மொழியிலும், கணிதத்திலும் பெரும்புலமை பெற்றவராயிருந்தார். அவர் கவிஞரும் உரைநடை எழுத்தாளருமாவார்.
  • இவரின் மேதமையிலும், இராணுவ அறிவு நுட்பத்திலும் மனதைப் பறிகொடுத்த பாமினி அரசர் மூன்றாம் முகமது அவரைப் பணியமர்த்தினார்.
  • கவான் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் நிர்வாகச் சீர்த்திருத்தங்களுக்கும் பெயர் பெற்றவராவர்.
  • பாரசீக வேதியியல் வல்லுநர்களை அழைத்து வந்து வெடிமருந்து தயாரிப்பதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் படையினருக்குப் பயிற்சியளித்தார்.
  • பெல்காமில் நடைபெற்ற விஜயநகருக்கு எதிரான போரில் அவர் வெடிமருந்தைப் பயன்படுத்தினார். அடிக்கடி அரசர்களைப் போலவே நடந்து கொள்ளும் மாகாண ஆளுநர்களைக் கட்டுப்படுத்தவும், நிர்வாகத்தைக் கட்டுக்கோப்புடையதாக மாற்றவும் கவான் விரும்பினார்.
  • பாமினி அரசில் ஏற்கனவே இருந்த நான்கு மாகாணங்களை எட்டாக மாற்றினார்.
  • மாகாணங்களிலிருந்து சில மாவட்டங்களை இவர் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார்.
  • ஊதியத்திற்குப் பதிலாக நிலங்களைப் பெற்றிருந்த உயர் அரசு அதிகாரிகள் தங்கள் வரவு செலவுகள் குறித்துச் சுல்தானுக்குத் தெரிவிக்கும் பொறுப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.
  • கவானால் அறிமுகம் செய்யப்பட்ட நிர்வாகச் சீர்த்திருத்தங்கள் அரசின் திறனை மேம்படுத்தியது. ஆனால், பிராந்தியத் தலைவர்களின் அதிகாரங்களைக் குறைத்தது.
  • அத்தலைவர்களில் பெரும்பாலோர் தக்காணத்தைச் சேர்ந்தோர் ஆவர். இதனால் தக்காணப் பிரபுக்களுக்கும் தக்காணத்தைச் சுற்றியுள்ளோர்களுக்கும் இடையே ஏற்கனவே நிலவிய பகைமை தீவிரமடைந்து மோதல்களாக வெடித்தன.
  • சுல்தானுக்கு எதிராக கவான் சதியில் ஈடுபட்டிருப்பதைப் போன்ற போலிக் கடிதம் ஒன்றை தயார் செய்தனர். கவானின் மேலாதிக்கத்தை விரும்பாத சுல்தானும் அவருக்கு மரண தண்டனை வழங்கினார்.

பாமினி அரசின் சரிவு:

  • கவான் தூக்கிலிடப்பட்டதால் அரசின் முதுகெலும்பு எனக் கருதப்பட்ட பல வெளிநாட்டுப் பிரப்புக்களைத் தக்காணத்தை விட்டு வெளியேறித் தங்கள் பகுதிகளுக்குத் திரும்பினர்
  • சுல்தான் மூன்றாம் முகமதுவின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிய முகமது அல்லது சிகாபுதீன் முகமது 1518 இறக்கும் வரை சுல்தானாக ஆட்சி புரிந்தார்.
  • இவருக்குப் பின் பதவியேற்ற நான்கு சுல்தான்களும் திறமைக் குன்றியவர்களாகப் பெயரளவிற்கே அரியணையில் இருந்தனர்.
  • சுல்தானியம் படிப்படியாக ஐந்து சுதந்திரமான தக்காண சுல்தானியங்களாகச் சிதைந்தது.
  • அவை பீடார், பீஜப்பூர், அகமதுநகர், பீரார், கோல்கொண்டா ஆகியனவாகும்.

பாமினி சுல்தான்களின் பங்களிப்பு:
கட்டிடக்கலை:

  • கட்டடக்கலைக்கு பாமினி சுல்தான்கள் ஆற்றிய பங்களிப்பைக் குல்பர்காவில் காணலாம்.

கல்வி:

  • பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் ஹசன் ஷா, அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதிகளில் ஒருவரான ஜாபர்கான் என்பவரின் முயற்சியால் மூல்தானில் கல்வி கற்றார்.
  • பாமினி அரசின் எட்டாவது சுல்தானான சுல்தான் பிரோஸ், மொழியியல் அறிஞரும் கவிஞரும் ஆவார்.
  • இவருக்குப் பின்வந்த அரசர்கள் குல்பர்கா, பீடார், தௌலதாபாத், காண்டகார் ஆகிய இடங்களில் கல்விக் கூடங்களை நிறுவினர்.
  • பீடாரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மகமது கவானின் மதரசா 3000 கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட பெரிய நூலகத்தைக் கொண்டிருந்தது.