பாண்டியர்-காலச்-சிற்பங்கள்

  • திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி திருப்பரங்குன்றம்
  • கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான்கோவில்
  • முற்காலப் பாண்டியர்கள் பல்லவர்களின் சம காலத்தவராவர்.
  • பல்லவர்களைப் போலல்லாமல் பாண்டியர்கள் தங்கள் குடைவரைக் கோவில்களின் கருவறையில் கடவுளர்களின் சிலைகளை நிறுவினர்.
  • பாண்டியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குகைக் கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • மலையடிக்குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் காணக்கிடைக்கின்றன.
  • இக்குகைக் கோவில்கள் சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய கடவுளர்களுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளன.
  • பாண்டியர் காலத்துச் சிவன் கோவில்களின் லிங்கங்கள் தாய்ப் பாறையிலிருந்து செதுக்கப்பட்டவையாகும்.
  • பாறை குடைவரைக் கோவில்களும் கட்டுமானக் கோவில்களும் பாண்டியர் கட்டடக் கலையின் சிறப்புமிக்க அம்சங்களாகும்.
  • ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட கோவிலுக்கு, மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கழுகுமலையில் உள்ள முற்றுப்பெறாத வெட்டுவான் கோவிலாகும்.
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலும் பாண்டியர் கட்டடக்கலைப் பாணியைப் பறைசாற்றும் எடுத்துக்காட்டுகளாகும்.
  • திருப்பரங்குன்றம், ஆனைமலை, கழுகுமலை, ஆகிய இடங்களிலுள்ள குடைவரைக் கோவில்களில் கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
  • மதுரை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட, முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிலைகள் தற்போது மதுரையிலுள்ள திருமலை நாயக்கர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.