- பல்லவ அரசர்கள் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில் முக்கிய வணிக மையமாகத் திகழ்ந்த காஞ்சிபுரத்தையும், அதன் வளம் நிறைந்த வேளாண் பகுதிகளையும் ஆண்டனர்.
- சீனா, ரோமாபுரி வணிகர்கள் காஞ்சிபுரத்தை நன்கு அறிந்திருந்தனர்.
- வளம் கொழித்த வணிக மையமான காஞ்சிபுரத்திலிருந்து பிற்காலப் பல்லவர்கள் தங்கள் அரசாட்சியை ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் தமிழகம் முழுவதும் விரிவடையச் செய்தனர். இருந்தாலும் தொண்டை மண்டலமே மையப்பகுதியாக இருந்தது.
- இப்பெரிய அரசியல் பிரந்தியம் தமிழ்நாட்டின் வட பகுதிகளையும் அருகே அமைந்திருந்த ஆந்திர மாவட்டங்களையும் கொண்டிருந்தது.
சான்றுகள்:
கல்வெட்டுகள்:
- மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு
- இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு
செப்பேடுகள்
- காசக்குடிச் செப்பேடுகள்
இலக்கியங்கள்
- மத்தவிலாசப் பிரகசனம்
- அவந்தி சுந்தரி கதை
- கலிங்கத்துப்பரணி
- பெரியபுராணம்
- நந்திக்கலம்பகம்.
அயலவர்_குறிப்புகள்
- யுவான் சுவாங்கின் குறிப்புகள்
பல்லவ வம்சாவளி (முக்கிய அரசர்கள்):
- தொடக்ககாலப் பல்லவ அரசர்கள் சாதவாகனர்களின் கீழ் சிற்றசர்களாக இருந்தனர்.
- இரண்டாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு (கி.பி. (பொ.ஆ.மு) 550 வாக்கில்) களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கினார்.
- சோழர்கள், பாண்டியர்கள் உள்ளிட்ட பல தென்னக அரசர்களை அவர் வெற்றி கொண்டார்.
- அவருடைய மகன் முதலாம் மகேந்திரவர்மன் மிகத் திறமை வாய்ந்த அரசராக விளங்கினார்.
- அவருக்குப் பின் அவருடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
- இரண்டாம் நரசிம்மவர்மன் அதாவது ராஜசிம்மன், இரண்டாம் நந்திவர்மன் ஆகியோர் ஏனைய முக்கிய அரசர்கள் ஆவர்.
- கடைசிப் பல்லவ மன்னர் அபராஜிதன் ஆவார்.
மகேந்திரவர்மன் (கி.பி. 600 - 630)
-
பல்லவ ஆட்சியின் சிறப்புக்குப் பங்களிப்புச் செய்தார்.
-
தொடக்க காலத்தில் அவர் சமண சமயத்தைப் பின்பற்றினார். பின்னர் சைவத் துறவி அப்பரால் (திருநாவுக்கரசர்) சைவத்தைத் தழுவினார்.
-
திராவிடக் கட்டடக்கலைக்கு ஒரு புதிய
பாணியை அறிமுகம் செய்தார். அது ‘மகேந்திரபாணி’ எனக் குறிப்பிடப்படுகின்றது. -
மத்தவிலாசப் பிரகசனம் (குடிகாரர்களின் மகிழ்ச்சி) உட்பட சில நாடகங்களைச் சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார். இந்நாடகம் பெளத்தத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
-
மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில் வாதாபியைத் தலைநகரமாகக் கொண்ட மேலைச் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியோடு தொடர்ந்து போர்கள் மேற்கொள்ளப்பட்டன.
-
இப்போர்களுள் ஒன்றில் இரண்டாம் புலிகேசி மகேந்திர வர்மனை வெற்றி கொண்டு நாட்டின் வடக்கில் பெரும் பகுதியை (வெங்கி) கைப்பற்றியதாகக் தெரிகிறது.
-
அவருடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் (ஏறத்தாழ 636 668) இத்தோல்விக்குப் பழிவாங்கும் வகையில் சாளுக்கியரின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றினார்.
-
வாதாபி தீக்கிரையாக்கப்பட்டது. இரண்டாம் புலிகேசியும் கொல்லப்பட்டார்.
இரண்டாம் நரசிம்மவர்மன் (ஏறத்தாழ 695 - 722)
-
ராஜசிம்மன் எனவும் அழைக்கப்பட்டார்.
-
சீனநாட்டின் தூதுக் குழுக்களை அனுப்பினார். சீனநாட்டின் தூதுக் குழுக்களை வரவேற்றார்.
-
ஒப்பீட்டளவில் அவரது காலத்தில் அரசியல் பிரச்சனைகள் அதிகம் இல்லாததால் அவரால் கோவில்களைக் கட்டுவதில் கவனம் செலுத்த முடிந்தது.
-
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலைக் கட்டியது அவரே.
-
முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி, சிறுதொண்டர் (63 நாயன்மார்களில் ஒருவர்) எனப்
பிரபலமாக அறியப்பட்டார். -
பரஞ்சோதி வாதாபி பசையெடுப்பில் பல்லவர் படைக்கு தலைமை ஏற்று
நடத்தினார். அதன் வெற்றிக்கு பின்னர் மனமாற்றம் பெற்ற அவர் சிவ பக்தராக மாறினார் - பெரியபுராணம்
அரசர்களின் பெயர்கள் -பட்டங்கள்
- சிம்ம விஷ்ணு - அவனிசிம்மர்
- முதலாம் மகேந்திரவர்மன் - சங்கீரணஜதி, மத்தவிலாசன், குணபாரன், சித்திரகாரப் புலி, விசித்திர சித்தன்
- முதலாம் நரசிம்மவர்மன் - மாமல்லன் வாதாபி கொண்டான்
கட்டடக் கலைக்குப் பங்களிப்பு:
- 1984 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகப்
பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது.
-
பாறைக் குடைவரைக் கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி
-
ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - மாமல்லன் பாணி
-
கட்டுமானக் கோவில்கள் நந்திவர்மன் பாணி. ராஜசிம்மன் பாணி
மகேந்திரவர்மன் பாணி:
- மகேந்திரவாடி, மாமண்டூர், மண்டகப்பட்டு, தளவானூர், திருச்சிராப்பள்ளி, வல்லம், திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் ஆகிய இடங்களிலுள்ள குகைக் கோவில்கள்
மாமல்லன் பாணி:
- மாமல்லபுரத்திலுள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள்
- மகிஷாசுர மர்த்தினி மண்டபம், திருமூர்த்தி மண்டபம், வராகர் மண்டபம்
- மகாபலிபுரத்திலுள்ள திறந்த வெளிக் கலையரங்கம்.
- பெரும் பாறையொன்றின் சுவற்றில், பேன் பார்க்கும் குரங்கு, பெரிய வடிவிலான யானைகள், தவமிருக்கும் பூனை
- சிவபெருமானின் தலையிலிருந்து அருவியெனக் கொட்டும் கங்கைநதி, அர்ச்சுனன் தபசு
- பெருந்தவ வடிவச் சிற்ப வேலைப்பாடு உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் மிகப்பெரியதாகும்.
ராஜசிம்மன் பாணி:
ராஜசிம்மன் - இரண்டாம் நரசிம்மவர்மன்
- பெருங்கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டினார்.
- காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில்
- இக்கோவில்கள் மிருதுவான மணற் கற்களால் கட்டப்பட்டவையாகும்.
- கைலாசநாதர் கோவில் - ராஜசிம்மேஸ்வரம்
நந்திவர்மன் பாணி:
- காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப்பெருமாள் கோவில்
சமூகமும் பண்பாடும்:
- பௌத்த சமண சமயங்களையும் வேத சமயத்தையும் ஆதரித்தார்.
- அப்பரும், மாணிக்கவாசகரும் சைவ அடியார்களாகவும், நம்மாழ்வாரும், ஆண்டாளும், வைணவ அடியார்களாகவும் விளங்கினர்.
- பக்தி மார்க்கத்தைப் போதிப்பதை நோக்கமாகக் கொண்ட இவ்வியக்கம் சமஸ்கிருதத்தை விடவும் தமிழுக்கு முன்னுரிமை வழங்கியது.
- சமயக் கூட்டங்களில் பங்கேற்க பெண்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
- தமிழ் பக்தி வழிபாடு பௌத்த, சமண சமயங்களுடன் போட்டி போட்டது.
- இதன் விளைவாகப் பெளத்தமும் சமணமும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து படிப்படியாக வீழ்ச்சியுற்றன.
கல்வியும் இலக்கியமும்:
- காஞ்சியிலிருந்த கடிகை (மடாலயம் அல்லது கல்வி மையம்) பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.
- அது இந்தியாவின் 2 பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்களைத் தன்பால் ஈர்த்தது.
- நியாயப பாஷ்யா எனும் நூலை எழுதிய வாத்ஸ்யாயர் காஞ்சிக் கடிகையில் ஆசிரியராக இருந்தார்.
- தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடான தட்சிண சித்திரம் முதலாம் மகேந்திரவர்மனின் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டது.
- மாபெரும் சமஸ்கிருத அறிஞரான தண்டின் முதலாம் நரசிம்மவர்மனின் அவையை அலங்கரித்தார். அவர் தசகுமார சரிதம் எனும் நூலை எழுதினார்.
- மற்றொரு சமஸ்கிருத அறிஞரான பாரவி சிம்மவிஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்தார். அவர் கிராதார்ஜுனியம் என்னும் வடமொழிக் காப்பியத்தை வடித்தார்.
- நாயன்மார்களால் இயற்றப்பட்ட தேவாரமும் ஆழ்வார்களால் படைக்கப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தமும் பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியங்கள் ஆகும்.
- இரண்டாம் நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்ட பெருந்தேவனார் மகாபாரதத்தை, பாரதவெண்பா எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார்.
பல்லவர்காலக் கலை:
-
குடுமியான்மலை, திருமயம் ஆகிய இடங்களிலுள்ள கோவில்களில் காணப்படும் இசை குறித்த
கல்வெட்டுக்கள் -
புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியர் முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர்.
-
இக்காலப்பகுதியைச் சேர்ந்த பல சிற்பங்கள் நடனமாடும்
வகையில் வடிக்கப்பட்டுள்ளன.