பல்லவர்-காலச்-சிற்பங்கள்

  • பல்லவர் காலத்தில் கோவில் கட்டடக் கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது.

  • குடைவரைக் கட்டடக் கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் பல்லவ அரசர் [[மகேந்திரவர்ம பல்லவன்]] ஆவார்.

  • மண்டகப்பட்டிலுள்ள குடைவரைக் கோவிலே இவர் உருவாக்கிய முதல் குடைவரைக் கோவிலாகும்.

  • குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை கி.பி.700 க்குப் பின்னர் மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது.

  • ஏழு கோவில்கள் எனவும் அழைக்கப்படும், மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற்கரைக் கோவில்கள், பல்லவ அரசர் இரண்டாம் நரசிம்மவர்மனால் எழுப்பப்பட்டவை ஆகும்.

  • [[ராஜசிம்மன்]] என்று அறியப்பட்ட பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டுவித்தார்.

  • காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் இரண்டாம் [[நந்திவர்மன்]] ஆல் கட்டப்பட்டது.

  • அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி பிரமாண்டமான கலைப் படைப்பாகும். இக்கருங்கல் பாறை ஏறத்தாழ 100 அடி நீளமும் 45 அடி உயரமும் கொண்டதாகும். 1984-ல் கடற்கரைக் கோவில் வளாகம் உட்பட மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் மொத்தமாக உலகப் பாரம்பரிய இடமென யுனெஸ்கோவால் ([[UNESCO]]) அங்கீகரிக்கப்பட்டது.

  • யாளி, சிங்கம், தாமரை மலர்

  • மாமல்லபுரச் சிற்பங்கள்

  • காஞ்சி கைலாசநாதர் கோவில்

  • காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில்

  • குடைவரைக் கோயில்

  • மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை