பதினெண்-கீழ்க்கணக்கு-நூல்கள்

  • கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டவர்கள் [[களப்பிரர்கள்]] எனவே இக்காலத்தை களப்பிரர் காலம் (அ) சங்கம் மருவியக் காலம் (அ) இருண்ட காலம் என அழைக்கப்படுகிறது.
  • களப்பிரர்கள் [[பாலி]] மொழியினை ஆதரித்தனர்.
  • தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெருந்தேக்கமும், மாற்றமும் ஏற்பட்டது. எனவே இதனை கலை இலக்கிய நோக்கிலும், அரசியல் நோக்கிலும், இருண்ட காலம் அழைத்தனர்.
  • முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற நான்கடிக்கு மிகாமல் அழகுடன் உரைப்பது கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும்.

பதினெண்கீழ்க் கணக்கு மரபுக் குறிப்பு

  • பதினெண் - 18
  • கீழ் - சிறிய (குறைந்த அடிகள்)
  • கணக்கு - நூல், இலக்கியம், அறம்
  • அடி அளவால் குறைந்து வரும் கீழ்க்கணக்கு நூல்கள் அம்மை என்னும் அழகு உடையன என்று தொல்காப்பியம் கூறுகின்றது.
  • அம் - அழகு
  • அம்மை = அழகுடன் இருப்பது.

_நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால் கடுகங்கோவை பழமொழி-மாமூலம் இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ் கணக்கு - வெண்பா
அடிநிமிர் பில்லாச் செய்யுட்டொகுதி அறம்பொருளின்பம் அடுக்கி யவ்வகைத் திறம்படவுரைப்பது கீழ்க் கணக்காகும்

[[பன்னிரு பாட்டியல்]]

நூல்கள்

அறநூல்கள்புலவர்கள்
[[நாலடியார்|நாலடியார்]][[சமணமுனிகள்]]
[[நான்மணிக்கடிகை]][[விளம்பிநாகனார்]]
[[இன்னா நாற்பது]][[கபிலர்]]
[[இனியவை நாற்பது]][[பூதஞ்சேந்தனார்]]
[[திரிகடுகம்]][[நல்லாதனார்]]
[[ஆசாரக்கோவை]][[பெருவாயிற்முள்ளியார்]]
[[பழமொழி நானூறு]][[மூன்றுறை அரையனார்]]
[[சிறு பஞ்ச மூலம்]][[காரியாசான்]]
[[ஏலாதி]][[கணிமேதாவியார்]]
[[முதுமொழிக் காஞ்சி]][[கூடலூர்க்கிழார்]]
[[திருக்குறள்]][[திருவள்ளுவர்]]
அகநூல்புலவர்கள்
[[ஐந்திணை ஐம்பது]][[மாறன் பொறையனார்]]
[[ஐந்திணை எழுபது]][[மூவாதியார்]]
[[திணைமொழி ஐம்பது]][[கண்ணன் சேந்தனார்]]
[[திணைமாலை நூற்றைம்பது]][[கணிமேதாவியார்]]
[[கார்நாற்பது]][[கண்ணன் கூத்தனார்]]
[[கைந்நிலை]][[புல்லங்காடனார்]]
புறநூல்புலவர்கள்
[[களவழி நாற்பது]][[பொய்கையாழ்வார்]]

அறம் 11 , அகம் 6 , புறம் 1

மணிமொழிக்கோவை

  1. [[நான்மணிக்கடிகை]]
  2. [[முதுமொழிக் காஞ்சி]]
  3. [[ஆசாரக்கோவை]]