- கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத்தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமே நீலகிரி ஆகும்.
- தோட்டப்பயிர்களான காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோசு ஆகியவை பெருமளவில் பயிரிடப்படுகின்றன;
- தைலமரம் (யூகலிப்டஸ்) வளர்க்கப்படுகிறது.
- நீலகிரி மாவட்டம் தேயிலைத் தொழிற்சாலைகள் நிறைந்தது.
- புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருந்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய்த் தொழிற்சாலை ஆகியனவும் உள்ளன.