நீரின்றி-அமையாது-உலகு

  • அகழி - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்

  • அருவி - மலைமுகட்டுத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது

  • ஆழிக்கிணறு - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு

  • இலஞ்சி நீர்த்தேக்கம் பலவகைக்கும் பயன்படும்

  • பாண்டி மண்டலத்தில் ஏரியைக் கண்மாய் என்பர். கம்மாய் - வட்டார வழக்குச் சொல்

  • உறைக்கிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு

  • ஊருணி - மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை

  • ஏரி - வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்.

  • கட்டுக்கிணறு - சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு

  • குண்டம் - சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை

  • குண்டு - குளிப்பதற்கேற்ற சிறுகுளம்

  • குமிழி ஊற்று - அடிநிலத்து நீர்,
    நிலமட்டத்திற்குக் கொப்புளித்து வரும் ஊற்று

  • கூவல் - உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

  • கேணி அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு.

  • புனற்குளம் - நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை

  • பூட்டைக் கிணறு - கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு

  • வான்சிறப்பு - திருக்குறள்

  • நாட்டின் சிறந்த பாதுகாப்புகளுள் நீருக்கே முதலிடம்

==மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்==

==துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.==

==உணவெனப்படுவது நிலத்தோடு நீரே.== புறநானூறு 18

  • மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் - சிலப்பதிகாரம்
  • மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன” என்று மாங்குடி மருதனார்
  • கல்லணை
    • நீளம் 1080 அடி
    • அகலம் 40-60 அடி
    • உயரம் 15 - 18 அடி

சர் ஆர்தர் காட்டன்

  • இந்தியா நீர்பாசனத்தின் தந்தை
  • 1829 இல் காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
  • கல்லணைக்கு ==கிராண்ட் அணைக்கட்== என்ற பெயரையும் சூட்டினார்.
  • கல்லணையின் கட்டுமான உத்தியை கொண்டு 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

ஜான் பென்னி குவிக்

  • தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகியவற்றின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர்

  • மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பெரியாற்றில் ஓடி வீணாகக் கடலில் கலப்பதை அறிந்த இவர், அங்கு ஓர் அணை கட்ட முடிவு செய்தார்.

  • தனது சொத்துகளை விற்று அணையைக் கட்டி முடித்தார்.

  • தொ.பரமசிவன் - குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினைத்தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல்என்பதல்ல பொருள்; சூரியவெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் குளிர வைத்தல் என்பதே அதன் பொருளாகும்.குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்று

  • ==குள்ளக் குளிரக் குடைந்து நீராடி== என்கிறார் ஆண்டாள்.

  • தெய்வச்சிலைகளைக் குளி(ர்)க்க வைப்பதை திருமஞ்சனம் ஆடல் என்று கூறுவர்.

  • சிற்றிலக்கியமாகிய பிள்ளைத்தமிழில் நீராடல் பருவம் என்று ஒரு பருவம் உண்டு.

  • திருமணம் முடிந்த பின் அதன் தொடர்ச்சியாய்க் கடலாடுதல் வழக்கமும் உண்டு.

  • இறப்புச் சடங்கிலும் உடலை நீராட்டுவதற்காக நீர்மாலை எடுத்து வருதல் உண்டு.

  • அம்மை நோய் கண்டவர்கள் குணமடைந்தபின் தலைக்குத் தண்ணீர்ஊற்றியாகிவிட்டதா? என்று கேட்பது வழக்கம்.

  • சனி நீராடு என்பது ஔவையின் வாக்கு.

  • அதிகாலையில் வேளாண் நிலத்திற்கு உழைக்க செல்வோர் நீராகாரம் குடிப்பார்கள்.

  • வரவேற்பின் அடையாளமாக நீரே வழங்கப்படுகிறது.

மறைநீர் - மா. அமரேசன் - கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்

  • ஒரு கிலோ ஆப்பிள் - 822 லிட்டர்
  • ஒரு கிலோ சர்க்கரை - 1780 லிட்டர்
  • ஒரு கிலோ அரிசி - 2500 லிட்டர்
  • ஒரு கிலோ காப்பிக் கொட்டை - 18,900லி.