நவீன-காலம்

  • மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களாக இராமநாதபுரம் பகுதியை ஆண்டு வந்த சேதுபதிகள் இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் கட்டடக் கலைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

  • இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள், உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் எனச் சொல்லப்படுகிறது.

  • இக்கோவில் மூன்று பிரகாரச் சுற்றுக்களைக் கொண்டுள்ளது.

  • கோவிலின் வெளிப்பிரகாரம் ஏறத்தாழ 7 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது.

  • வெளிப்பிரகாரத்தின் கிழக்கு மேற்குப் பிரகாரங்கள் 120 மீட்டர் நீளமுடையவைகளாக உள்ளன.

  • வடக்கிலும் தெற்கிலும் உள்ள பிரகாரங்கள் 195 மீட்டர் நீளமுடையவைகளாக உள்ளன.

  • வெளிப்பிரகாரத்தைத் தாங்கிநிற்கும் 1200க்கும் மேற்பட்ட தூண்கள் தனிச்சிறப்பு கொண்டனவாகும்.

  • மேலும் இத்தூண்களில் பெரும்பாலானவை அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. இம்மூன்று பிரகாரங்களில் உட்புறம் அமைந்துள்ள பிரகாரமே மிகப் பழைமையானதாகும்.

  • மாமல்லபுரத்தில் - சிற்பக்கல்லூரி

  • சுவாமிமலை, கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன.

  • சென்னையிலும் கும்பகோணத்திலும் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரிகளில் சிற்பக்கலையைப் பயிலலாம்.

  • தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் “சிற்பச்செந்நூல்” என்ற நூலை வெளியிட்டுள்ளது.