நற்றிணை

  • அடி எல்லை 9 - 12 கொண்ட அகவற்பாவின் தொகுப்பு.
  • 275 புலவர்கள் பாடிய 400 பாடல்கள்.
  • நல் என்ற அடைமொழி கொண்டது.
  • நற்றிணை நானூறு
  • பிழையா நன்மொழி
  • எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது.
  • தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி என்ற பாண்டிய மன்னன்
  • கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • திருமாலை கடவுள் வாழ்த்தாக கொண்டது
  • ஓர் அறிவு உடைய உயிர்களும் விரும்பும் உயரிய பண்பு விருந்தோம்பல், அறவழியில் பொருள் ஈட்டல் முதலிய உயரிய பண்புகளை எடுத்து காட்டும் நூல்
  • முதன் முதலில் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரால் 1914ல் பதிப்பிக்கப்பட்டது இவரே முதலில் இதற்கு உரை எழுதியுள்ளார்
  • வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மையைக் கூறுகிறது.
  • வணிகர்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் காவிதி, எட்டி.

மேற்கோள்கள்

இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக் கோட் டன்ன முள்ளிலைத் தாழை
பெருங்களிற்று மருப்பின் அன்ன வரும்புமுதிர்பு செலீஇய சேறி யாயின் இவளே வருவை யாகிய சின்னாள் வாழா ளாததல்நற் சுறிந்தனை சென்மே

  • நக்கண்ணையார்

“அரிகால் மாறிய அங்கண் அகல்வயல் மறுகால் உழுத ஈரச் செறுவின் நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் புன்கண் அஞ்சும் பண்பின்

  • மிளைகிழான் நல்வேட்டனார்

“நீரின் றமையா உலகம் போலத் தம்மின் றமையா நஞ்சயந்தருளி”

நக்கண்ணையார்

  • இவர் பெண்பாற் புலவர் ஆவார்.
  • பெருங்கோழி நாய்க்கன் மகள்
  • நக்கண்ணை எனவும் அறியப்படுகிறது.
  • உறையூர் வேண்மான் வெளியன் தித்தன் எனும் சோழ மன்னனின் மகன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி.
  • பேரவைக் கோப்பெரு நற்கிள்ளி வறுமையில் புல்லரிசி கூழுண்டு வருந்திய நிலையிலும் ஆமூர் மல்லனை போரில் வெற்றி கொண்டான்.
  • பேரவைக் கோப்பெரு நற்கிள்ளி வீரத்தைக் கண்டு நக்கண்ணையார் அவரை மணந்து கொள்ள விரும்பினார் என்னும் செய்தியை புறநானூறு கூறுகிறது.

மிளைகிழான் நல்வேட்டனார்

  • இவர் ஐந்திணைகளை பற்றியும் பாடல் பாடியுள்ளார்
  • நற்றிணையில் 4 பாடல்களும், குறுந்தொகையில் 1 பாடலும்
  • 5 திணை பாடல்களையும் இயற்றியுள்ளார்

“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நற்றிணை (142) குறிப்பிடுகிறது.

நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உனவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு என்பதனை,நற்றிணை

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே.

==பெருங்கடுங்கோ || நற் 210==

மெய் பேசும் நா மனிதனை உயர்த்துகிறது. பொய்பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.

‘==பிழையா நன்மொழி==’ என்று வாய்மையை நற்றிணை குறிப்பிடுகின்றது:

‘==பொய் மொழிக் கொடுஞ்சொல்==’ என்று பொய்யைக் குறிப்பிடுகிறது.

கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்

நற்றிணை

சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை. நரம்பினால் தைத்த செய்தியும் நற்றிணை என்னும் நூலில் காணப்படுகிறது. முற்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள அறுவை மருத்துவத்துக்கான இன்றைய கூறுகள் வியப்பளிக்கின்றன அல்லவா?


==சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ எனவினவுதி என்மகன் யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும் புலிசேர்ந்து போகிய கல்அளை போல ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்கலத் தானே”==
என்ற பாடலை இயற்றியவர் - காவற்பெண்டு.

நூற்குறிப்பு:

  • காவற்பெண்டு சங்ககாலப் பெண்புலவர்களுள் ஒருவர்.சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர்
  • புறநானூற்றில் ஒரே ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
  • “தமிழ்நாடு விளைந்த வெண்னெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி
    உமணர் போகலும்” என்று கூறும் நூல் - நற்றிணை