தொடரால்-குறிக்கப்படும்-சான்றோர்

[[கணியன் பூங்குன்றனார்]]

  • யாதும் ஊரே யாவரும் கேளிர்
  • தீதும் நன்றும் பிறர்தர வாரா

[[திருமூலர்]]

  • ஒன்றே குலம் ஒருவனே தேவன்
  • உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்
  • யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
  • அன்பே சிவம்

[[பாரதியார்]]

  • மனதில் உறுதி வேண்டும்.
  • சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்திங்கு சேர்ப்பீர்
  • அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதிங்கு இல்லையே
  • ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
  • தையலை உயர்வு செய்
  • காதல், காதல், காதல், காதல் போயின் சாதல், சாதல், சாதல்
  • ஜெய பேரிகை கொட்டடா
  • ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி.
  • எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவே எண்ணல் வேண்டும்.

[[ஒளவையார்]]

  • ஊருடன் கூடி வாழ்
  • மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
  • அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்
  • ஆறுவது சினம்
  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
  • சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
  • பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.
  • ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ?

[[இளங்கோவடிகள்]]

  • அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
  • உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவோர்
  • ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
  • தேரா மன்னா செப்புவது உடையேன்
  • யானோ அரசன் யானே கள்வன்

[[நாமக்கல் கவிஞர்]] - வெ. இராமலிங்கம்

  • தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு
  • கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்,
  • தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா
  • கத்தியின்றி ரத்தமின்றி
  • கூட்டுறவில் சேருங்கள், கூடி வாழ பழகுங்கள்
  • புரட்சி வேண்டும், புரட்சி வேண்டும்.

[[பாரதிதாசன்]]

  • புதியதோர் உலகம் செய்வோம்
  • நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்
  • இருட்டறையில் உள்ளதடா உலகம்
  • கொலைவாளினை எடடா மிகக் கொடியோர் செயல் அறவே
  • மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமைமாட்ட நினைக்கும் சிறைச்சாலை
  • பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை திருதல் முயற்கொம்பே

[[அறிஞர் அண்ணா]]

  • மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு.
  • கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
  • எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
  • ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்
  • மறப்போம், மன்னிப்போம்

இராமலிங்க அடிகள் - [[வள்ளலார்]]

  • அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை
  • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
  • பசித்திரு, தனித்திரு, விழித்திரு
  • அம்பலப்பாட்டே அருட்பாட்டு அல்லாதார் பாட்டெல்லாம் மருட்பாட்டு
  • கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும்

[[விவேகானந்தர்]]

  • விழுமின், எழுமின், அயராது உழைமின்.
  • விழு, எழு, வெற்றிகிட்டும் வரை ஒயாதே.

மனோன்மணியம் [[பெ. சுந்தரம் பிள்ளை]]

  • இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
  • நீராடும் கடலுடுத்த

[[திரு.வி.க]]

  • பகுத்தறிவு மூளைக்கு ஆன்மீகம் ஆன்மாவுக்கு

[[நக்கீரர்]]

  • உண்பது நாழி, உடுப்பது இரண்டே
  • செல்வத்துப்பயனே ஈதல்

[[தாயுமானவர்]]

  • நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ளவாராய்.
  • எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே.

[[பெருங்கடுக்கோ‌]]

  • வினையே ஆடவர்க்குயிரே வாழ்நுதல்

[[கபிலர்]]

  • உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ

[[காரைக்கால் அம்மையார்]]

  • அறிவானும் தானே அறிவிப்பானும் தானே