- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
- பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியவர்.
- தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்.
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.
- உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.
- தமிழ் சொல் வளம் - கட்டுரை (பாடப்பகுதி)
1981-இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கேற்ற பாவாணர், அம் மாநாட்டின் இரண்டாம் நாளான சனவரி 5 அன்று ஒரு பொதுநிலைக் கருத்தரங்கில், ‘மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்’ எனும் தலைப்பில் 75 மணித்துளிகள் உரையாற்றினார். அன்றிரவில் மாரடைப்பு ஏற்பட்டமையால் அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சனவரி 14 அன்று மீண்டும் பாவாணருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மறுநாள் (சனவரி 15) காலை 12.30 மணியளவில் தன் 79-ஆம் அகவையில் காலமானார்.
பாடப் பகுதி
10th Unit 1
சொல்லாய்வு கட்டுரைகள் எனும் நூலிலுள்ள [[தமிழ் சொல்வளம்]]
தேவநேயப் பாவாணரின் வாழ்க்கை வரலாற்றை பாவாணர் வரலாறு என எழுதியவர் தமிழ்த்திரு.செந்தமிழ் அந்தணர் [[இரா.இளங்குமரனார்]]