- நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து.
- திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது.
- தெருக்கூத்து, வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது. ‘அருச்சுனன்தபசு’ என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது.
- கட்டைக் கூத்து
கூத்துப்பட்டறை கலைஞாயிறு ந.முத்துசாமி
- தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் .
- தமிழ்நாட்டின் வழிவழி நாடக முறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர்.
- ‘நாடகக் கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்’
- நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசை முறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர்.
- இவரின் நாடகங்கள் பெரும்பாலும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின.
- இந்திய அரசின் ‘தாமரைத்திரு’ விருதினையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.
- உலக நாடக நாள் - March 23