திருவந்தாதி

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர்ஆழி நீங்குகவே என்று”
என்று பாடியவர் - பொய்கையாழ்வார்

  • பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்.
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும்.

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புரு சிந்தை இடுதிரியா - நன்புஉருகி ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான்”
என்று பாடியவர் - பூதத்தாழ்வார்

  • பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர்.

  • இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார்.

  • சொல்லும் பொருளும்:
    • தகளி - அகல்விளக்கு
    • ஞானம் - அறிவு
    • நாரணன் - திருமால்
    இடர் என்பதன் பொருள் - துன்பம்

  • திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.

  • அவர்கள் பாடிய பாடல்களின்
    தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும்.

  • இதனைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார்.

  • பன்னிரு ஆழ்வார்களில் பொய்கையாழ்வார்,
    பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.