ஆசிரியர் - [[நல்லாதனார்]]
- ஊர் - திருத்து (திருநெல்வேலி)
- இவரை செருஅடுதோள் நல்லாதன் என பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம்.
நூல்
- திரிகடுகம் = திரி மூன்று, கடுகம் காரமான பொருள்
- சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பன அதனைப் போன்று நூலில் கூறப்பட்டுள்ள மும் மூன்று கருத்துக்களும் உள்ளத்தின் நோயை போக்க வல்லன.
- இந்நூல் 100 பாடல்களை கொண்டது.
- கடவுள் வாழ்த்து உட்பட அனைத்து பாடல்களிலும் இம்மூன்றும் அல்லது இம்மூவர் என்னும் சொல் மூன்றாம் அடியின் நான்காம் சீரில் வரும்.
- மருந்து என அழைக்கப்படும் நூல் திரிகடுகம்
- இவர் வைணவ சமயத்தை சார்ந்தவர் வைணவர்கள் வேள்விக்காக பலியிடக்கூடாது என்பதனை திரிகடுகம் உணர்த்துகிறது
மேற்கோள்:
-
“உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும் பால்பற்றி செல்லார் விடுதலும் - தோல்வற்றிச்” சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும் தூஉயம் என்பார் தொழில்.
-
“இல்லார்க்கொன்றீயும் உடைமையும் இவ்வுலகில் நில்லாமையுள்ளும் நெறிப்பாடும் -எவ்வுயிர்க்கும்” “முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில் நிறையிலான் கொண்ட தவமும் நிறைஒழுக்கம்” தோற்றத்தான் பெற்ற வனப்பும் இவை மூன்றும் தூற்றின் கண் தூவிய வித்து.
-
வேளாண் என்பான் விருந்திருக்க உண்ணாதவன்
-
தாளாளன் என்பவன் கடன்பட வாழாதான்
-
நெஞ்சம் அடங்குதல் வீடாகும்
-
ஆற்றல் இல்லாதவன் தலைமை, ஒழுக்கம் இல்லாதவனின் தவம், ஒழுக்கத்தை கடைபிடிக்காவனின் அழகு - புதரில் விதைத்த விதைக்கு சமம்.
கனக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - திரிகடுகம்