திராவிட-மொழிக்குடும்பம்

  • இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300+
  • நான்கு மொழிக்குடும்பங்கள்
    • இந்தோ – ஆசிய மொழிகள்
    • திராவிட மொழிகள்
    • ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
    • சீன – திபெத்திய மொழிகள்
  • இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலை - ச. அகத்தியலிங்கம்
  • திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் குமரிலபட்டர்.
  • ஹீராஸ் பாதிரியார் ==தமிழ்→தமிழா→தமிலா→டிரமிலா→ட்ரமிலா→த்ராவிடா→திராவிடா==
  • அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது குறிப்பிட்டார்.
  • 1816ஆம் ஆண்டில் பாப், ராஸ்க், கிரிம் முதலானோராலும் மொழி சார்ந்த பல ஆய்வுகள்
  • தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும். ==தென்னிந்திய மொழிகள்== என்றவர்- பிரான்சிஸ் எல்லிஸ்
  • இவற்றுடன் ==மால்தோ, தோடா, கோண்டி== இனைத்து ==தமிழியன்== என்றவர் - ஹோக்கன்
  • 1856 ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலில் திராவிட மொழிகள் , ஆரிய மொழிக்குடும்பத்தின் இருந்து வேறுபட்டவை, இவை சமஸ்கிருத மொழிக்குள்ளும் சொல் வாக்கு செலுத்தியுள்ளன.கால்டுவெல்

திராவிட மொழிக்குடும்பம்

தென்நடுவட
தமிழ்
மலையாளம்
கன்னடம்
தெலுங்குகுரூக்மால்தோபிராகுய் (பிராகுயி)
குடகு (கொடகு)
கொரகா
கோத்தா
மண்டா
கோண்டா
கோண்டி
கோயா
கோலாமி
தோடா
இருளா
கூயி
கூவி (குவி)
நாய்க்கி
துளுபெங்கோ
பர்ஜி
கதபா
  • அண்மையில் கண்டறியப்பட்ட ==எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா== ஆகிய நான்கு மொழிகளையும் சேர்த்துத் ==திராவிட மொழிகள் மொத்தம் 28==

திராவிட மொழிகள் பொதுவான அடிச்சொற்களை கொண்டுள்ளன

கண் - தமிழ்

கண்ணு - மலையாளம்,கன்னடம்

கன்னு - தெலுங்கு, குடகு

ஃகன் - குரூக்

கெண் - பர்ஜி

கொண் - தோடா

மூன்று - தமிழ்

மூணு - மலையாளம்

மூடு - தெலுங்கு

மூரு - கன்னடம்

மூஜி - துளு

  • திராவிட மொழிகளில் பொருள்களின் தன்மையை ஒட்டிப் பால்பாகுபாடு அமைந்துள்ளது. ஆனால், வடமொழியில் இவ்வாறு அமையவில்லை.
  • கைவிரல்கள் பெண்பால் என்றும் கால்விரல்கள் ஆண்பால் என்றும் வேறுபடுத்தப்படுகின்றன. ஜெர்மன் மொழியிலும் இத்தகைய தன்மையைக் காணமுடிகிறது.
  • முகத்தின் பகுதிகளான வாய், மூக்கு, கண் ஆகியவை வேறுவேறு பால்களாகச் சுட்டப்படுகின்றன.
    • வாய்- ஆண்பால்
    • மூக்கு பெண்பால்
    • கண் பொதுப்பால்
  • திராவிட மொழிகளில் ஆண்பால், பெண்பால் என்ற பகுப்பு உயர்திணை ஒருமையில் காணப்படுகிறது.
  • அஃறிணைப் பொருள்களையும் ஆண், பெண் என்று பால் அடிப்படையில் பகுத்தாலும் அவற்றிற்கெனப் பால்காட்டும் விகுதிகள் இல்லை. தனிச்சொற்களாலேயே ஆண், பெண் என்ற பகுப்பை உணர்த்தினர். (எ.கா. கடுவன் – மந்தி; களிறு – பிடி)
  • ஆங்கிலத்தில் வினைச்சொல் காலத்தை மட்டும் காட்டுமே தவிர திணை, பால், எண், இடம் ஆகிய வேறுபாட்டைக் காட்டுவதில்லை.
  • மலையாள மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பால் காட்டும் விகுதிகள் இல்லை. தனிச்சொற்களாலேயே ஆண், பெண் பகுப்பை அறிந்துகொள்ள முடியும்.

தமிழின் தனித்தன்மைகள்

  • தமிழை ஆட்சி மொழியாகக்கொண்ட நாடுகள் இலங்கை, சிங்கப்பூர்.
  • மொரிசியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது
  • இலங்கை, மலேசியா, பர்மா சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிஜித்தீவு ஆகிய நாடுகளில் மட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ், இங்கிலாந்து, கயானா, மடகாஸ்கர், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் பேசப்படும் பெருமையுடையது தமிழ் மொழி.
  • ஒரேபொருளைக் குறிக்கப் பலசொற்கள் அமைந்த சொவ்வனமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி தமிழேயாகும்.
  • இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைத்துள்ளன.
  • தமிழின் பல அடிச்சொற்களின் ஒலியன்கள் ஒலி இடம்பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறியிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும் மூவிடப்பெயர்களும் பெரும்பாலும் குறிப்பிடத் தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன
  • பிற திராவிட மொழிகளைவிட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந் துணையாக அமைந்துள்ளது.
மொழிஇலக்கணம்இலக்கியம்ஆதாரம்
தமிழ்[[தொல்காப்பியம்]] [கி.மு 3ம் நூற்றாண்டு][[சங்க இலக்கியம்]]தமிழ் இலக்கிய வரலாறு - மு.வ
கன்னடம்கவிராஜமார்க்கம் [கி.பி 9ம் நூற்றாண்டு ]கவிராஜமார்க்கம் [கி.பி 9ம் நூற்றாண்டு ]இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் – செ. வை. சண்முகம்
தெலுங்குஆந்திர பாஷா பூஷணம் - [கி.பி 12ம் நூற்றாண்டு]பாரதம் [கி.பி 11ம் நூற்றாண்டு]இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் – செ. வை. சண்முகம்
மலையாளம்லீலா திலகம் [கி.பி 15ம் நூற்றாண்டு]ராம சரிதம் [கி.பி 12ம் நூற்றாண்டு]மலையாள இலக்கிய வரலாறு – சாகித்திய அகாதெமி