-
பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக திருநெல்வேலி
-
இந்நகரைச் சுற்றி நெல் வயல்கள் அமைந்திருந்ததால் திருநெல்வேலி பெயர் பெற்றது.
-
“திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்று திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியவர் திருஞானசம்பந்தர்
-
‘தன்பொருநைப் புனல் நாடு” என்ற திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியவர் - சேக்கிழார்
-
முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது. மூங்கில் காடு என்பது அதன் பொருளாகும்.
-
மூங்கில் நெல் மிகுதியாக விளைந்தமையால் அப்பகுதிக்கு நெல்வேலி என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதுவர்.
-
திருநெல்வேலி மாவட்டம் மலைவளம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியின் சிறப்புமிக்க பொதிகை மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டு உள்ளது.
-
‘பொதியி லாயினும் இமய மாயினும் பதியெழு அறியாப் பழங்குடி” என்று இளங்கோவடிகள் பொதிகை மலையைப் பற்றி பாடுகிறார்.
-
இலக்கியங்களில் திரிகூடமலை வழங்கப்படும் குற்றாலமலை புகழ் பெற்ற சுற்றுலா இடமாக திகழ்கிறது.
-
‘வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” என்று குற்றால மலை வளத்தைத் திரிகூட ராசப்பக் கவிராயர் தம் குற்றாலக்
கூறவஞ்சி நூலில் பாடியுள்ளார். -
திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும்.இதனைத் தண்பொருநை, சேர்வலாறு, கடனாநதி என்று பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை மாவட்டமாகச் செய்கிறது.
-
நீர்வளம் மிக்க திருநெல்வேலி மாவட்டப் பொருளாதரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத்தொழில்
-
தாமிரபரணி ஆற்றின் மூலம் உழவுத்தொழில் நடைபெறுகின்றது.
-
இங்குக் பாசனமும் கிணற்றுப் பாசனமும் குளத்துப் கூடப் பயன்பாட்டில் உள்ளன.
-
இருபருவங்களில் நெல் பயிரிடப்படுகிறது.
-
மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய்வித்துக்கள், காய்கனிகள்,பருத்தி, பயறுவகைகள் பயிரிடப்படுகின்றன.
-
இராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற பகுதிகளில் வாழை பெருமளவில் பயிரிடப்படுகின்றது.
-
நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது.
-
கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
-
தாமிரபரணிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழரின் தொன்மைக்கும் நாகரிகச்
சான்றாக விளங்கும் சிறப்புக்க்கும் தொல்பொருள்கள் இங்குக் கிடைத்துள்ளன. -
இவ்வூர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. ஆதிச்சநல்லூர் அமைந்துள்ள மாவட்டம்
தூத்துக்குடி -
தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் சிறப்பாக கூறுகின்றன.
-
கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது. ‘முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை’ என்று கொற்கை முத்தை சிறப்பித்துக் கூறும் நூல் நற்றிணை
-
‘கொற்கையில் பெருந்துறை முத்து’ என்று கூறும் நூல் - அகநானூறு
-
கிரேக்க, உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்தவர்களான யவனர்கள் இந்த முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்.
-
நெல்லை நகரின் நடுவே நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது.
-
கோவிலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் மாட வீதிகள் அமைந்துள்ளன.அவற்றைச் சுற்றித் தேரோடும்
வீதிகள் அழகுற அமைந்துள்ளன. இங்குத் -
திங்கள் தோறும் திருவிழா நடைபெறும் என்பதை. ‘திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே’ என்று திருஞானசம்பந்தர் பாடல் அடிகளால் அறியலாம்.
-
காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. காவற்புரை என்றால் சிறைச்சாலை என்பது பொருள்.
-
கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும் சொல் ஆகும். கூலக்கடைத்தெரு என்பதே மருவிக் கூழைக்கடைத் தெரு என வழங்கப்படுகிறது.
-
அக்கசாலை என்பது அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம்.முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி அக்கசாலைத் தெரு என்னும் பெயரில் அமைந்துள்ளது.
-
தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்குக் கரையில் பாளையங்கோட்டையும். இவ்விரு நகரங்களும் இரட்டை நகரங்கள்
-
பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்.
-
வணிகம் நடைபெறும் பகுதியை பேட்டை என்று கூறுதல் பண்டைய மரபு.
-
பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரம் எனவும் அவன் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர்கொண்டு வரவேற்ற இடம் திருமங்கை நகர் என்றும் வழங்கப்படுகின்றன.
-
நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கிய அரியநாயகரின் வழித் தோன்றல் வீரராகவர்.அவரது பெயரில் அமைந்த ஊர் வீரராகவபுரம் எனவும், அவரது துணைவியார் மீனாட்சி அம்மையார் பெயரில் உள்ள ஊர் மீனாட்சிபுரம் எனவும் வழங்கப்பட்டு
வருகின்றன. -
பாளையங்கோட்டை, உக்கிரன் கோட்டை செங்கோட்டை இம்மாவட்டத்தில் என்னும் கோட்டைகள் பெயர்கள் இருந்தமைக்கு சான்றாக விளங்கின்றன.
-
அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தவர் என்பர்.
-
சங்கப்புலவரான மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார். பெரியாழ்வார். குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை
சேர்த்துள்ளனர். -
அயல்நாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் பெருமக்கு உரியது திருநெல்வேலி
-
திருநெல்வேலி பாண்டிய மன்னர்களோடு
தொடர்புடையது. -
இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடினார்.
-
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.
-
பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம்
-
தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் திருநெல்வேலி.
-
கடிகை முத்துப் புலவர் எட்டையபுரத்தைச் சேர்ந்தவர்.இவர் வெங்கடேசுர ராஜாவைப் பற்றிப் பல பாடியிருக்கிறார்.
-
எட்டப்ப பாடல்கள்
-
மணியாச்சியிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கிற இடம்தான் சீவலப்பேரி என்கிற முக்கூடல்.
-
முக்கூடல் பள் என்னும் பிரபந்தம் முக்கூடலைப் பற்றியதுதான்.
-
“ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி - மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே!”
என்ற அடிகள் இடம்பெற்ற நூல்
முக்கூடற்பள்ளு -
நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி தாயத் தரிசித்து உரிமை பாராட்டி சுவாமியிடம் சிபாரிசு
செய்ய வேண்டும் என்றவர் பலப்பட்டடைச் சொக்கநாதப்புலவர். -
சீவைகுண்டத்துப் பெருமாளைப் பாடியுள்ளவர் - பிள்ளை பெருமாள்
-
நம்மாழ்வார் பிறந்த இடம் திருக்குருகூர். இவ்வூர் தற்பொழுது ஆழ்வார்திருநகரி என்று அழைக்கப்படுகிறது.
-
திருப்புகழ் பாடியவர் அருணகிரிநாதர்
கழுகுமலையில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானைப் பற்றிக் காவடிச்சிந்து பாடியவர் - அண்ணாமலையார். -
“வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே!” என்று பாடியவர் அழகிய சொக்கநாதப் புலவர்.
-
“நுண் துளி தூங்கும் குற்றாலம்” என்று பாடியவர்-திருஞான சம்பந்தர்
-
“உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும் குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே!”
என்று பாடியவர் - மாணிக்கவாசகர் -
“கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே! கனகமகா மேருவென நிற்கும்மலை அம்மே! துயிலும் அவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும் துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே!” என்ற பாடல் இடம்பெற்ற நூல் குற்றாலக் குறவஞ்சி
-
குற்றாலக் நாலக் குறவஞ்சியை குறவஞ்சி இயற்றியவர்- [[திரிகூடராசப்பக் கவிராயர்]]
-
திருநெல்வேலிச் சீமை என்று குறிப்பிடப்படுவது இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் இணைந்த பகுதியாகும்.
[[டி.கே.சிதம்பரநாதர்]] பற்றியக் குறிப்புகள்: